5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வந்தே பாரத் vs ராஜ்தானி.. டிக்கெட் விலை, சொகுசு.. எந்த ரயில் பெஸ்ட்?

Vande Bharat vs Rajdhani Express: வந்தே பாரத் மற்றும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களின் வடிவமைப்பு, கட்டணம் மற்றும் வசதிகள் ஆகியவை குறித்து இதில் பார்க்கலாம்.

வந்தே பாரத் vs ராஜ்தானி.. டிக்கெட் விலை, சொகுசு.. எந்த ரயில் பெஸ்ட்?
வந்தே பாரத், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஸ்
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 25 Nov 2024 13:03 PM

வந்தே பாரத் ரயில் சேவை: இந்திய ரயில்வே, பயணிகளின் பயண வசதியை மேம்படுத்தும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறது. இதனால் ரயில்களில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த மாற்றங்களில், முதன்மையாக வந்தே பாரத் ரயில் அறிமுகம் உள்ளது. இந்த ரயில்கள் ஒரு கேம் சேஞ்சராக மாறியுள்ளன. இதற்கிடையில், சென்னையில் உள்ள இந்திய ரயில்வேயின் இன்டக்ரல் கோச் பேக்டரி ((ஐசிஎஃப்) சமீபத்தில் முழு குளிரூட்டப்பட்ட ஸ்லீப்பர் கோச்களை தயாரித்துள்ளது. இதில், பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் பொருத்தப்பட்டுள்ளன. இங்கு, 2018 முதல் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 77 ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.எஃப் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்கள்

பொதுவாக, ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் அதன் ஆடம்பரம் வசதி மற்றும் பிரீமியம் அம்சங்களுக்காக பயணிகள் இடையே அறியப்படுகிறது. இதில் ஏசி பெட்டிகள் மட்டுமே உள்ளன.
மேலும், விமானங்களைப் போல் பயணத்தின் போது பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. மும்பை, சென்னை, பெங்களூரு மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களை இணைக்கும் ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இணைக்கின்றன. தற்போது, இந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் நெட்வொர்க் விரிவடைந்துள்ளது.

இதையும் படிங்க : மகாராஷ்டிரா தேர்தல் முடிவு.. முதலீட்டாளர்களுக்கு லாபமா? நஷ்டமா?

வந்தே பாரத் ரயில் சேவை, வேகம், கட்டணம்

இந்திய ரயில்வே 102 வந்தே பாரத் சேவைகளை இயக்குகிறது. இந்த ரயில்களின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 160 கி.மீ ஆகும். இந்த ரயில்களில் ஃபைபர் கிளாஸ் வசதி பொருத்தப்பட்டுள்ளது.
நவீன டாய்லெட் வசதிகள் உள்ளன. இலவச வைஃபை வசதி உள்ளது. விரைவில் ஸ்லீப்பர் கோச்கள் பொருத்தப்பட உள்ளன. திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரயிலுக்கு கட்டணமாக ரூ.1800 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ராஜ்தானி ரயில் சேவை, வேகம், கட்டணம்

நாட்டின் தலைநகர் உள்பட முக்கிய நகரங்களை இந்த ரயில்கள் இணைக்கின்றன. ரயில்களில் இதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. முழுமையான ஏ.சி. கோச்-கள் உள்ளன. டெல்லி ஹசரத் நிஜாமூதீன்- திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் ரயில் அதிகப்பட்ச தூரம் வரை இயக்கப்படும் ரயில் ஆகும். இலவச வைஃபை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. கட்டணத்தை பொறுத்தவரை வந்தே பாரத்-ஐ விட அதிகமாகும்.

ஒப்பீடு

வந்தே பாரத் மற்றும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரயில்களும் வெவ்வேறு நோக்கங்களுடன் சேவை அளிக்கின்றன. ராஜ்தானி நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் நிலையில் வந்தே பாரத், மாநில நகரின் முக்கிய பகுதிகளையும் மாநில தலைநகரோடு இணைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ரயில்வே லோகோ பைலட் ஹால் டிக்கெட் வந்தாச்சு.. இப்படி டவுன்லோடு பண்ணுங்க!

Latest News