5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Explained: லம்ப்சம் முதலீடு என்றால் என்ன? லம்ப்சம்-ஐ விட எஸ்.ஐ.பி சிறந்ததா?

lumpsum investment: மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்வதற்கான பொதுவான வழிகள் இரண்டு உள்ளன. அதில், லம்ப்சம் எனப்படும் மொத்த முதலீடு முதலிடத்தில் உள்ளது. இந்தத் திட்டத்தில் கணிசமான தொகையை முதலீட்டாளர் முதலீடு செய்கிறார். லம்ப்சம் முதலீட்டை விட எஸ்.ஐ.பி சிறந்ததா? பார்க்கலாம்.

Explained: லம்ப்சம் முதலீடு என்றால் என்ன? லம்ப்சம்-ஐ விட எஸ்.ஐ.பி சிறந்ததா?
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 27 Nov 2024 18:52 PM

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடுகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று எஸ்.ஐ.பி. என்றால் மற்றொன்று லம்ப்சம் எனப்படும் மொத்த முதலீடு ஆகும். அதாவது, ஒரு குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் வைப்பாளர் குறிப்பிடத்தக்க தொகையை முதலீடு செய்வதே லம்ப்சம் முதலீடு ஆகும். அதேநேரம் எஸ்.ஐ.பி என்பது முறையான முதலீட்டுத் திட்டம் ஆகும். இது ஆர்.டி போன்று சிறுக சிறுக சேமிக்க அனுமதிக்கிறது. இந்தக் கட்டுரையில், எஸ்.ஐ.பி முதலீடு மற்றும் லம்ப்சம் முதலீடு என்ன? இதில் முதலீடு செய்வது எப்படி? ஒருவர் எஸ்.ஐ.பி.யில் எவ்வளவு பணம் முதலீடு செய்யலாம்? லம்ப்சம் முதலீட்டில் எவ்வளவு முதலீடு செய்யலாம்? என்பன போன்ற பல்வேறு வினாக்களுக்கு இங்கு பதிலை பார்க்கலாம்.

எஸ்.ஐ.பி முதலீடு

எஸ்.ஐ.பி எனப்படும் முறையான முதலீட்டுத் திட்டம் என்பது முதலீடு செய்வதற்கான ஒரு ஒழுங்குமுறை அணுகுமுறையாகும். இந்தத் திட்டத்தில், முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை, குறிப்பிட்ட இடைவெளியில் மாதாந்திர தவணை ஆக செலுத்துவார்கள். இதில், முன்னரே தீர்மானிக்கப்பட்ட தொகையை தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் குறிப்பிட்ட ஓர் செல்வத்தை உருவாக்க முடியும். இந்த இடைவெளிகள் வாராந்திர, மாதாந்திர அல்லது காலாண்டுகளாக கூட இருக்கலாம்.

மேலும், எஸ்.ஐ.பி.க்கள் முதலீட்டாளர்களுக்கு நெகிழ்வான முதலீட்டு அணுகுமுறையை வழங்குகின்றன. அவர்களின் நிதியின் அடிப்படையில் முதலீட்டுத் தொகையை தேர்வு செய்யவும் அனுமதிக்கின்றன. இதற்கான விருப்பத்தையும் முதலீட்டாளர்களுக்கு வழங்குகின்றன.
இந்த நெகிழ்வுத்தன்மை காரணமாக முதலீட்டாளர்கள் தங்கள் சேமிப்பை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும்.

லம்ப்சம் முதலீடு

லம்ப்சம் எனப்படும் முதலீடுகள் குறிப்பாக பெரும்பான்மையான முதலீட்டாளர்களால் விரும்பப்படுகின்றன. ஏனெனில் இதில் குறைவான ரிஸ்க்-கள் உள்ளன. மேலும், வருமானம் பொதுவாக அதிக அளவில் இருக்கும்.
உங்களது லம்ப்சம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் மதிப்பிடப்பட்ட வருமானத்தைக் கண்டறிய, ஆன்லைனில் கிடைக்கும் மியூச்சுவல் ஃபண்ட் லம்ப்சம் கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம்.

இதற்கு முன் முதலில், ஒரு முதலீட்டாளர் லம்ப்சம் முதலீட்டிற்கான வருமான வகைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் லம்ப்சம் முதலீட்டில் 1, 3, 5 என பல்வேறு காலகட்டங்கள் உள்ளன. மேலும், இதில் ஒரு சாதாரண மனிதர் கூட எளிதாக முதலீடு செய்யலாம்.

லம்ப்சம் முதலீடு எப்படி வேலை செய்கிறது?

பொதுவாக லம்ப்சம் எனப்படும் மொத்த முதலீட்டில், முழுத் தொகையும் ஒரே நேரத்தில் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த முறையானது வளர்ந்து வரும் சந்தையில் சாதகமாக இருக்கும்.
ஏனெனில் இது முழுத் தொகையும் தொடக்கத்திலிருந்தே வளர்ச்சியடைய அனுமதிக்கிறது. இருப்பினும், ஸ்திரத்தன்மையற்ற சந்தை ஏற்பட்டால் இது அதிக அபாயத்தையும் உள்ளடக்கியது.
ஏனெனில், முழுத் தொகையும் ஒரே நேரத்தில் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது.

எஸ்.ஐ.பி முதலீடு எப்படி வேலை செய்கிறது?

எஸ்.ஐ.பி என்பது தொடர்ச்சியான முதலீடாக செயல்படுகிறது. இதில் தொகை உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து தானாகப் பற்று வைக்கப்பட்டு நீங்கள் விரும்பும் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யப்படும்.

இந்தத் தொகையை டெபாசிட் செய்தவுடன், நீங்கள் முதலீடு செய்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யூனிட்களைப் பெறுவீர்கள்.
மேலும், எஸ்.ஐ.பி மியூச்சுவல் ஃபண்ட் ஒவ்வொரு தவணையிலும் திட்டத்தின் கூடுதல் யூனிட்களை பெற அனுமதிக்கிறது. இந்தத் திட்டத்தின் என்.ஏ.வி.யும் மாறிக்கொண்டே இருக்கும்.

லம்ப்சம் திட்டத்தில் யார் முதலீடு செய்யலாம்?

லம்ப்சம் திட்டத்தில் யார் யார் முதலீடு செய்ய வேண்டும் எனப் பார்க்கலாம்.

ஊக்கத்தொகை பெறுபவர்கள் : போனஸ் அல்லது கூடுதல் பண ஆதாயங்களைப் பெற்றிருந்தால், மொத்தத் தொகை முதலீடு உங்களுக்கு சரியான தேர்வாகும்.
ரிஸ்க் எடுப்பவர்கள்: மேலும், முதலீட்டு பாணியில் அபாயங்கள் பற்றி கவலைக் கொள்ளாதவர்களும் இதில் முதலீடு செய்ய முன்வரலாம்.
நீண்ட கால முதலீடு: நீண்ட கால முதலீடு திட்டம் கொண்ட முதலீட்டாளர்களும் இதில் முதலீடு செய்யலாம்.

எஸ்.ஐ.பி திட்டத்தின் சிறப்புகள்

சிறிய முதலீட்டில் சேமிப்பு தொடக்கம்: கணிசமான லம்ப்சம் முதலீடுகளுக்கு மாறாக, ஒப்பீட்டளவில் சிறிய தொகையுடன் முதலீட்டைத் தொடங்க முடியும்.
முதலீட்டு தேர்வு: எஸ்.ஐ.பியானது வாராந்திர, மாதாந்திர அல்லது காலாண்டு போன்ற பல்வேறு முதலீட்டு தேர்வுகளை வழங்குகிறது.
முதலீட்டு நெகிழ்வு: எஸ்.ஐ.பி தொடங்கும்போது, ​​முதலீட்டுத் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தத் தொகையை பின்னாள்களில் குறைக்கவோ அதிகரிக்கவோ முடியும்.
முதலீட்டு நிறுத்தம்: எஸ்.ஐ.பி முதலீடுகள், முதலீட்டாளரின் கோரிக்கைக்கு ஏற்ப முதலீட்டை நிறுத்தி வைக்கவும் அனுமதிக்கின்றன.
அதிகபட்ச முதலீட்டு வரம்பு: குறைந்தபட்ச எஸ்.ஐ.பி முதலீடு ரூ. 500 என்றாலும், மேல் வரம்பு எதுவும் இல்லை.
திட்டம் ரத்து: எந்த நேரத்திலும் திட்டத்தை நிறுத்துவதற்கான நெகிழ்வுத்தன்மையை எஸ்.ஐ.பி வழங்குகிறது.

லம்ப்சம் முதலீட்டில் கவனிக்க வேண்டியவை

குறைந்தபட்ச முதலீடு: பெரும்பாலான லம்ப்சம் முதலீடு தொடங்குவதற்கு குறைந்தபட்சம் ரூ.5,000 தேவைப்படும். அதன் பின்னர், வழக்கமான சிறிய தொகைகளில் (சுமார் ரூ.1,000) அதிகமாக முதலீடு செய்யலாம்.

லம்ப்சம் திட்டத்தின் பலன்கள்

அதிக வளர்சசி சாத்தியம்: ஒரே நேரத்தில் கணிசமான தொகையை முதலீடு செய்வது குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எனினும் இந்த வளர்ச்சி என்பது சந்தையின் வளர்ச்சியை பொருத்து இருக்கும்.
நீண்ட கால இலக்கு: நீண்ட கால நிதி இலக்குகளுக்கு லம்ப்சம் முதலீடுகள் மிகவும் பொருத்தமானவையாகும்.
அழுத்தமில்லா முதலீடு: ஒவ்வொரு மாதமும் தவணை செலுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. மன அழுத்தம் இல்லாத முதலீடாக பார்க்கப்படுகிறது.

எஸ்.ஐ.பி திட்டத்தின் பலன்கள்

எஸ்.ஐ.பி ஒரு நிலையான தொகையின் வழக்கமான பங்களிப்புகள் தேவைப்படுவதன் மூலம் ஒழுக்கமான முதலீட்டை ஊக்குவிக்கிறது.
ஃபண்ட் முதலீட்டை அதன் குறைந்த குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு காரணமாக பரந்த அளவிலான முதலீட்டாளர்களுக்கு அணுகக்கூடியதாக ஆக்குகிறது.
இந்த கூட்டு விளைவு முதலீட்டில் குறிப்பிடத்தக்க அதிக வருமானத்திற்கு வழிவகுக்கிறது.
எஸ்.ஐ.பி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைத் தொடங்க, இடைநிறுத்த, அதிகரிக்க அல்லது குறைக்க அனுமதிக்கிறது.

லம்ப்சம் கால்குலேட்டர் வருவாய்

மியூச்சுவல் ஃபண்ட் லம்ப்சம் கால்குலேட்டர் என்பது முதலீட்டாளர்கள் தங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளிலிருந்து எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் என்பதை அறிய உதவுகிறது.
அதாவது ஒருவர் முதலீடு செய்துள்ள பணத்தின் அளவு, எவ்வளவு காலம் முதலீட்டை வைத்திருக்க திட்டமிட்டுள்ளார் என்பன போன்ற பல்வேறு தகவல்கள் இதில் வருகின்றன. இதில், நீங்கள் எதிர்காலத்தில் நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் என்ற மதிப்பீட்டை பார்க்க முடியும்.

இதையும் படிங்க : புதிய உச்சத்தில் பிட்காயின்.. திடீர் உயர்வுக்கு என்ன காரணம்?

எஸ்.ஐ.பி.யில் யார் யார் முதலீடு செய்யலாம்?

30 வயதுக்குள்: ஒருவரின் வயது 20 அல்லது 30-களில் இருந்தால் அவர் எஸ்.ஐ.பி எனப்படும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்யலாம். இது அவர்களின் ஓய்வுக் காலத்தில் செல்வத்தை சேமிக்க முடியும்.
நிலையான வருமானம்: எஸ்.ஐ.பி.-ஐ தொடங்குவதற்கு முன் ஒரு நிலையான வருமான ஆதாரத்தை உறுதிசெய்து திட்டத்தை தொடங்குங்கள்.
சரியான பொருளாதார திட்டமிடல்: காலம், நேரம், பணம் என பொருளாதாரத்தில் சரியான திட்டமிடல் கொண்ட நபர்களும் எஸ்.ஐ.பி முதலீட்டில் கவனம் செலுத்தலாம்.
ரிஸ்க் குறைவு: ஈக்விட்டி பங்கு முதலீட்டில் ஈடுபடும் முன்பு சந்தை குறித்து ஓரளவு அறிவு பெற்றிருப்பது நல்லது. இந்தியாவில் சில முன்னணி நிறுவன பங்குகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நல்ல வருவாயை கொடுத்துள்ளன.

ஆரம்ப கால முதலீடுக்கு எஸ்.ஐ.பி ஏற்றதா?

எஸ்.ஐ.பி திட்டம் பொதுவாக ஆரம்ப முதலீட்டாளர்களின் முதலீடுக்கு பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது. இதில் ஆரம்ப கால முதலீட்டில் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். மேலும், ஒழுக்கமான சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க உதவுகிறது. சந்தை ஏற்ற இறக்க பாதிப்பையும் தணிக்க உதவுகிறது.

எஸ்.ஐ.பி, லம்ப்சம் வேறுபாடு என்ன?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில், முதல் முறையாக முதலீட்டை தொடங்கும் முதலீட்டாளர்கள் மொத்தத் தொகை முதலீட்டுக்கும் எஸ்.ஐ.பி முதலீட்டுக்கும் இடையே குழப்பத்தை சந்திக்க நேரிடும்.
இதை தவிர்க்கும் பொருட்டு எஸ்.ஐ.பி மற்றும் லம்ப்சம் முதலீடு இடையே உள்ள வேறுபாடுகளை பார்க்கலாம்.

  • மொத்தத் தொகை முதலீடு என்பது ஒரே நேரத்தில் முழுப் பணத்தையும் முதலீடு செய்வதாகும். ஆனால் எஸ்.ஐ.பி என்பது, முதலீட்டுத் தொகையை தவணைகளாகப் பிரிப்பதாகும்.
  • மொத்த தொகை முதலீடு முதலீட்டின் போது சந்தையில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டால் அது அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம். எஸ்.ஐ.பி முதலீட்டில் இந்த ரிஸ்க் பிரிக்கப்படுகிறது.
  • லம்ப்சம் முதலீடு தற்காலக்கட்டங்களில் எஸ்.ஐ.பி.-ஐ விட அதிக லாபம் கொடுத்துள்ளது. எஃப்.டி உள்ளிட்ட திட்டங்களுடன் ஒப்பிடும் போது எஸ்.ஐ.பி முதலீடாக அதிக வளர்ச்சியை கொடுத்துள்ளது.

லம்ப்சம் நீண்ட கால முதலீடு

மொத்த முதலீடுகள் அதிக வருமானம் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன, ஆனால் ஆபத்துடன் வருகின்றன. நீண்ட கால முதலீடு சந்தையை பொறுத்து அமைகிறது.

எஸ்.ஐ.பி அல்லது லம்ப்சம்: ஒருவர் எதை தேர்வு செய்ய வேண்டும்?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீட்டாளர் ஒருவரின் தேர்வு என்பது முதலீட்டு இலக்குகள், இடர் மேலாண்மை மற்றும் முதலீட்டாளரின் முதலீடு போன்ற அடிப்படை பண்புகளை பொறுத்தது. சுருங்கச் சொன்னால் லம்ப்சம் முதலீடு ஒரு முறை (சிங்கிள்) முதலீடுகளுக்கு ஏற்றது. அதே சமயம் எஸ்.ஐ.பி தொடர்ச்சியான முதலீட்டுக்கு ஏற்றது.

நீண்ட கால முதலீடுக்கு எஸ்.ஐ.பி ஏற்றதா?

பொதுவாக முதலீட்டாளரின் வயதின் அடிப்படையில், எஸ்.ஐ.பி முதலீட்டு வழிமுறைகள் நீண்ட காலத்திற்கு மிகவும் பொருத்தமானவை. ஏனெனில் அவை நீண்ட காலத்திற்கு வழக்கமான முதலீடுகள் மூலம் செல்வத்தை பெருக்க உதவுகின்றன.
இவை முதலீட்டாளர்களை கூட்டு வட்டி பயனை அடைய அனுமதிக்கின்றன. மேலும் சந்தை ஏற்ற இறக்கங்களை மென்மையாக்குகின்றன. அந்த வகையில் பார்க்கும் போது, நீண்ட கால நிதி இலக்குகளை அடைவதற்கான சிறந்த கருவியாக உள்ளன.

இதையும் படிங்க : Explained: SIP என்றால் என்ன? எப்படி முதலீடு செய்யலாம்.. மியூச்சுவல் ஃபண்ட் முழு விவரம்!

எஸ்.ஐ.பி முதலீட்டில் லம்ப்சம் முதலீட்டை தேர்வு செய்யலாமா?

இதில் இன்றளவும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஒரு முதலீட்டாளர் எஸ்.ஐ.பி.யில் முதலீடு செய்துக் கொண்டிருக்கும் போதே, குறிப்பிட்ட ஓர் லம்ப்சம் முதலீட்டை தொடரலாம். இதற்கு மியூச்சுவல் ஃபண்ட் விதிகள் அனுமதிக்கின்றன.

அதேநேரத்தில் லம்ப்சம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்த பின்னர், எஸ்.ஐ.பி திட்டத்துக்கு மாற விரும்பினால் புதிய எஸ்.ஐ.பி.-ஐ தேர்வு செய்ய வேண்டும்.

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. பயனரின் முதலீட்டு லாப நஷ்டங்களுக்கு டி.வி 9, நிர்வாகம் பொறுப்பேற்காது. எந்தவொரு முதலீட்டுக்கு முன் செபி-யால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது.

Latest News