5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Explained: SIP என்றால் என்ன? எப்படி முதலீடு செய்யலாம்.. மியூச்சுவல் ஃபண்ட் முழு விவரம்!

What is SIP Investment : இன்றைய காலகட்டத்தில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து முதலீட்டாளர்கள் இடையே விழிப்புணர்வு அதிகரித்து காணப்படுகிறது. அதிலும், குறிப்பாக எஸ்.ஐ.பி முதலீடு கருவியில் கவனம் செலுத்துகின்றனர்.

Explained: SIP என்றால் என்ன? எப்படி முதலீடு செய்யலாம்.. மியூச்சுவல் ஃபண்ட் முழு விவரம்!
மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி என்றால் என்ன?
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Updated On: 25 Nov 2024 18:31 PM

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு : மியூச்சுவல் ஃபண்ட்கள் என்பது ஒரு பொதுவான முதலீட்டு நோக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் திட்டமாகும். இது, பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைச் சேகரிக்கும் ஒரு அமைப்பாகும். இந்தப் பணத்தை பங்குகள், பத்திரங்கள், பணச் சந்தை கருவிகள் மற்றும் பிற பத்திரங்களில் முதலீடு செய்கிறது. ஒரு திட்டத்தின் நிகர சொத்து மதிப்பு அல்லது என்ஏவியைக் கணக்கிடுவதன் மூலம், இந்த கூட்டு முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருமானம் பொருந்தக்கூடிய செலவுகள் மற்றும் வரிகள் தொடர்பான விவரங்கள் நமக்கு கிடைக்கும். மேலும், இந்தத் திட்டம் முதலீட்டாளர்களிடையே விகிதாச்சாரத்தில் விநியோகிக்கப்படுகிறது. சுருக்கமாக, சொன்னால், அதிக எண்ணிக்கையிலான முதலீட்டாளர்களால் திரட்டப்பட்ட பணம் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் ஆகும்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எப்படி புரிந்துக் கொள்வது?

12 ஆப்பிள் கொண்ட ஒரு பெட்டி ரூ.40 என்று வைத்துக்கொள்வோம். 4 நண்பர்கள் அதனை வாங்க முடிவு செய்தனர். ஆனால் அவர்களிடம் தலா ரூ.10 மட்டுமே உள்ளது.
கடைக்காரர் மொத்த கொள்முதலுக்கு மட்டுமே விற்கிறார். எனவே நண்பர்கள் தலா ரூ.10-ஐ சேர்த்து 12 ஆப்பிள்கள் கொண்ட பெட்டியை வாங்க முடிவு செய்தனர்.

கூட்டு உரிமை

இப்போது அவர்களின் பங்கு 3 ஆப்பிள்கள். மொத்தமுள்ள 12 ஆப்பிள்களை நால்வரும் பகிர்ந்துக் கொள்வார்கள். அதாவது ஒரு முதலீட்டாளர் செய்த முதலீட்டின் அடிப்படையில் அவருக்கு லாபம் அல்லது நஷ்டம் கிடைக்கும்.

இதுவே வணிக விதிப்படி கூறுவதென்றால், ஒவ்வொரு நண்பரும் ஆப்பிள் பெட்டியில் உரிமையுள்ளவராக இருப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் அது, கூட்டாகச் சொந்தமானது. அதாவது, ஒவ்வொரு நபரும் பெட்டியின் ஒரு பகுதி உரிமையாளராக இருப்பார்கள்.

இதையும் படிங்க: போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்.. மூத்தக் குடிமக்கள் ரூ.20,500 மாத வருமானம் பெறுவது எப்படி?

நிகர சொத்து மதிப்பு என்றால் என்ன?

மியூச்சுவல் ஃபண்ட் அல்லது பரஸ்பர நிதிகள் திட்டத்தில் என்.ஏ.வி என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த, “நிகர சொத்து மதிப்பு” அல்லது என்.ஏ.வி என்பது ஈக்விட்டி பங்கு வர்த்தகம் தொடர்பானது ஆகும்.

அதாவது, ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டிற்கும் தனித்தனியே நிகர சொத்து மதிப்பு உள்ளது. இந்த என்.ஏ.வி என்பது ஒரு குறிப்பிட்ட நாளில் (அனுமதிக்கப்பட்ட செலவுகள் மற்றும் கட்டணங்களால் குறைக்கப்படும்) பங்குகள், பத்திரங்கள் மற்றும் பத்திரங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பாகும்.

என்.ஏ.வி சந்தை மதிப்பு

அதாவது, ஒரு யூனிட்டுக்கான என்.ஏ.வி என்பது, ஒரு குறிப்பிட்ட நாளில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் உள்ள அனைத்து யூனிட்களின் சந்தை மதிப்பைக் குறிக்கிறது.
இதில், அனைத்து செலவுகள் மற்றும் பொறுப்புகள் மற்றும் திரட்டப்பட்ட வருமானம், திட்டத்தில் நிலுவையில் உள்ள யூனிட்களின் எண்ணிக்கையால் வகுக்கப்படும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு யார் யாருக்கு உகந்தது?

பொதுவாக மியூச்சுவல் ஃபண்டுகள் எனப்படும் பரஸ்பர நிதிகள் முதலீடு பெரிய தொகை இல்லாத முதலீட்டாளர்களுக்கு உகந்தது ஆகும். மேலும், ஈக்விட்டி பங்குச் சந்தையை பற்றி ஆராய்ச்சி செய்ய விருப்பம் அல்லது நேரம் இல்லாதவர்களுக்கும், இந்த முதலீடு உகந்ததாக கருதப்படுகிறது.

இந்த முதலீட்டில் குறுகிய நாள்களில் ஒரு செல்வத்தை பெருக்க முடியும். அதேபோல், நஷ்டமும் ஏற்படக் கூடும். ஏனெனில் இவை மார்க்கெட்-ஐ அடிப்படையாக கொண்டவை ஆகும்.

இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

உலக அளவில் அதிக சேமிப்பு விகிதத்தில் இந்தியாவும் ஒன்று. செல்வத்தை உருவாக்குவதற்கான இந்த விருப்பம் இந்திய முதலீட்டாளர்கள் இடைய அதிகரித்து காணப்படுகிறது.

மேலும், இந்திய முதலீட்டாளர்கள் பாரம்பரியமாக விரும்பப்படும் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களில் அதிகளவு கவனம் செலுத்துகின்றனர்.
எனினும் தற்போதைய கால கட்டத்தில் மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீட்டாளர்கள் விரும்பும் முதலீட்டு வழியாக மாற்றியுள்ளது. எனினும், சந்தை அபாயம் காரணமாக மூத்தக் குடிமக்கள் மற்றும் ரிஸ்க் அதிகம் எடுக்க விரும்பாத நபர்கள் முதலீடு செய்ய யோசிக்கின்றனர்.

மியூச்சுவல் ஃபண்ட் நிர்வாகம்

பொதுவாக, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஓபன் எண்ட் அல்லது க்ளோஸ்-எண்டட் மற்றும் என்ற முறையில் நிர்வகிக்கப்படும். இது தவிர, ஆக்ஷிவல் மற்றும் பேசிவ் வழிமுறைகளும் உள்ளன.

எஸ்.ஐ.பி என்றால் என்ன?

முறையான முதலீட்டுத் திட்டங்கள் ( SIP) என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான மிகவும் பிரபலமான வழிகளில் ஒன்றாகும்.
இந்த எஸ்.ஐ.பி.க்கள் நிதி சேமிப்பை வளர்ப்பதற்கும் எதிர்காலத்திற்கான செல்வத்தை உருவாக்குவதற்கும் உதவுகின்றன.

எஸ்.ஐ.பி எப்படி செயல்படுகிறது? அதன் கொள்கைகள் என்ன?

எஸ்.ஐ.பி திட்டத்துக்கு இரண்டு விதமான கொள்கைகள் உள்ளன.

அதாவது முதல் கொள்கையில், சந்தைகள் உயரும் போது, ​​நீங்கள் குறைவான யூனிட்களைப் பெறுவீர்கள், மேலும் சந்தைகள் வீழ்ச்சியடையும் போது, ​​நீங்கள் அதிக யூனிட்களைப் பெறுவீர்கள். இது உங்கள் அபாயத்தைக் குறைக்கும்.

அடுத்து, கூட்டு வட்டி வளர்ச்சி. இது நீண்ட காலத்திற்கு ஒரு சிறிய தொகையை தவறாமல் சேமிப்பது உங்கள் முதலீட்டின் மீது ஒரு அதிவேக தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க : புதிய உச்சத்தில் பிட்காயின்.. திடீர் உயர்வுக்கு என்ன காரணம்?

எஸ்.ஐ.பி.யின் நன்மைகள் என்ன?

நிதி சேமிப்பு: எஸ்.ஐ.பி-களின் ஒழுங்குமுறை நிதி சேமிப்பை வளர்க்கிறது. இந்த கட்டாய சேமிப்பு ஒருவரின் வாழ்க்கை முறையை மாற்றும்.
நெகிழ்வு: எஸ்.ஐ.பி.க்கள் முதலீட்டில் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன. நீங்கள் எந்த நேரத்திலும் முதலீட்டின் அளவை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம்.
வசதி: எஸ்.ஐ.பி.க்கள் ஒரு தொந்தரவு இல்லாத முதலீடு ஆகும். ஆன்லைனில் எளிதாகச் செய்யலாம். உங்கள் முதலீடு தானாகவே குவியத் தொடங்கும்.
ரிஸ்க் குறைவு: மொத்த முதலீடுகள் உங்களை அதிக மூலதன அபாயத்திற்கு ஆளாக்கலாம். ஆனால். எஸ்.ஐ.பி.க்கள் உங்கள் முதலீட்டை காலப்போக்கில் பரப்புகிறது. இதனால், ஆபத்து குறைவு.

எஸ்.ஐ.பி முதலீடு பாதிப்புகள்

சந்தை ஆபத்து: எஸ்.ஐ.பி சில அபாயங்களைக் குறைக்க உதவுகிறது என்றாலும், முதலீடு இன்னும் சந்தை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது.
சந்தையை சார்ந்த வருவாய்: மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி வருவாய் என்பது சந்தை அபாயத்துக்கு உட்பட்டது.

எஸ்.ஐ.பி என்பது காலப்போக்கில் செல்வத்தை உருவாக்குவதற்கான எளிய, பயனுள்ள முதலீட்டு கருவியாகும். இது, கூட்டுத்தொகை, ரூபாய் செலவு சராசரி மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றின் சக்தியை மேம்படுத்துகிறது.

எனினும், ஒரு எஸ்.ஐ.பி முதலீட்டை தொடங்குவது எளிதானது. ஆனால், எந்தவொரு நிதி இலக்கும் சந்தைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. பயனரின் முதலீட்டு லாப நஷ்டங்களுக்கு டி.வி 9, நிர்வாகம் பொறுப்பேற்காது. எந்தவொரு முதலீட்டுக்கு முன் செபி-யால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது.

Latest News