Bank Loan : உங்களுக்கு வங்கி கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதா.. இவற்றை கட்டாயம் பின்பற்றுங்கள்!
Debt Eligibility | இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகள் பொதுமக்களின் தேவைகளுக்காக கடன் வழங்குகின்றன. ஆனால், அவ்வாறு வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு சில தகுதிகள் மற்றும் ஆவணங்கள் கட்டாயமாக உள்ளன.
பலரும் எதிர்பாராத சூழல்களில் ஏற்படும் நிதி சிக்கல்கள் மற்றும் சவால்களை எதிர்க்கொள்வதற்காக வங்கியில் இருந்து கடன் பெறுகின்றனர். குறிப்பாக திருமணம், கல்வி, மருத்துவம், வீடு கட்டுவது, மனை வாங்குவது என பல காரணங்களுக்காக கடன் பெறுகின்றனர். அவ்வாறு கடன் பெறுவதற்கு சில தகுதிகள் மற்றும் ஆவணங்கள் கட்டாயமாக உள்ளன. அந்த ஆவணங்களில் சிக்கல்கள் என்றால் கடன் கிடைப்பது சற்று கடினமானதுதான். ஆனால், வங்கி கடன் பெறுவதற்கான தகுதிகளில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அவற்றை மிக சுலபமாக சரிசெய்துகொள்ளலாம். இந்த நிலையில் வங்கி கடன் பெறுவதற்கான தகுதிகள் இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Aadhaar Update : இலவச ஆதார் திருத்தம்.. அவகாசத்தை நீட்டித்த UIDAI.. எப்போது வரை தெரியுமா?
உங்களது விண்ணப்பம் ஏன் நிராகரிப்பட்டது?
நீங்கள் வங்கி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் உங்கள் விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை தெரிந்துக்கொள்ளுங்கள். கிரெடிட் ஸ்கோர் குறைவு, அதிக கடன் தொகை, தவறான ஆவணங்கள், குறைவான வருமானம் உள்ளிட்ட காரணங்களால் உங்களது விண்ணப்பங்கள் நிராகரிப்பட்டு இருக்கலாம். எனவே, அதற்கான காரணத்தை தெரிந்துக்கொண்டு மேற்கொண்டு முயற்சிகள் செய்யலாம்.
கிரெட் ஸ்கோரை அதிகரியுங்கள்
வங்கி கடன் பெறுவதற்கு கிரெடிட் ஸ்கோர் ஒரு முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. இது நீங்கள் முன்பு வாங்கிய கடன், அந்த கடன் தொகையை நீங்கள் சரியாக செலுத்தியுள்ளீர்களா, தற்போது எவ்வளவு கடன் தொகை நிலுவையில் உள்ளது என்பவற்றை கணக்கில் கொண்டு வழங்கப்படும் புள்ளிகள் ஆகும். இந்த புள்ளிகள் குறைவாக இருந்தால் அந்த நபரின் வங்கி மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் சில சிக்கல்கள் இருப்பதாக அர்த்தம். எனவே தான் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால் வங்கிகள் கடன் தர முன்வருவதில்லை. எனவே உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிசெய்ய முயற்சியுங்கள்.
இதையும் படிங்க : Farmer Loan : விவசாயிகளுக்கான உத்தரவாதம் இல்லா வங்கி கடன்.. ரூ.2 லட்சமாக உயர்த்தி அறிவித்த ஆர்பிஐ!
அதிக கடன் தொகை
ஒரு நபர் கடனுக்கு விண்ணப்பித்தால் அவரின் மாத ஊதியம், வயது உள்ளிட்டவற்றை வைத்துதான் அவருக்கு எவ்வளவு கடன் வழங்க வேண்டும் என்பதை வங்கிகள் முடிவு செய்கின்றன. இந்த நிலையில், உங்கள் தகுதிக்கு மிகுதியாக தொகைக்கு நீங்கள் விண்ணப்பித்தால் உங்களுக்கு கடன் கிடைக்காமல் போகலாம். எனவே, அடுத்த முறை முன்பு விண்ணப்பித்த தொகையை விட சற்று குறைவாக விண்ணப்பியுங்கள். இது வங்கிகள் கடன் தருவது குறித்து ஆலோசிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.
சரியான நேரத்திற்கு கடன் தொகை செலுத்துவது
முன்பு எடுத்த கடனை சரியாக திருப்பி செலுத்தவில்லை என்றால் நீங்கள் அடுத்து எடுக்கும் கடனுக்கு அது தடையாக மாறிவிடும். எனவே, ஏதேனும் கடன் தொகை அல்லது மாத தவணைகள் நிலுவையில் இருந்தால் அவற்றை சரியாக செலுத்திவிடுங்கள். இது வங்கிகள் உங்களுக்கு கடன் தவருவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.
இதையும் படிங்க : RBI : 500 ரூபாய் நோட்டுக்கள் குறித்து புதிய வழிமுறைகளை வெளியிட்ட ரிசர்வர் வங்கி.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றினால் உங்களுக்கு கடன் வங்கிகளிடம் இருந்து மிக எளிதாக கடன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.