Small Savings : சிறுசேமிப்பு திட்டங்களில் சிறந்தது எது.. எந்த திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.. முழு விவரம் இதோ!
Saving Scheme | பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் நிலையான பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் பொதுமக்கள் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். அவ்வாரு பொதுமக்கள் முதலீடு செய்வதற்காகவே தனியார் மற்றும் அரசு சார்பில் பல சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தை பெற முடியும்.
கல்வி, மருத்துவம், வீடு கட்டுவது அல்லது வீடு வாங்குவது உள்ளிட்ட தேவைகளுக்கான மக்கள் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். ஆனால், அவ்வாறு முதலீடு செய்யும்போது எந்த திட்டத்தில் முதலீடு செய்வது சிறந்தது, எந்த திட்டத்திற்கு சிறந்த பலன்கள் வழங்கப்படுகிறது என தெரியாமல் மக்கள் குழம்புகின்றனர். இந்த நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள சிறுசேமிப்பு திட்டங்களில் எந்த திட்டம் சிறந்தது, எதில் முதலீடு செய்வது நல்ல லாபத்தை கொடுக்கும் என விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Fixed Deposit : 3 ஆண்டுகளுக்கான FD திட்டம்.. அதிக வட்டி வழங்கும் முன்னணி வங்கிகள்.. பட்டியல் இதோ!
சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது ஏன் அவசியம்?
பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் நிலையான பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் பொதுமக்கள் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். அவ்வாரு பொதுமக்கள் முதலீடு செய்வதற்காகவே தனியார் மற்றும் அரசு சார்பில் பல சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தை பெற முடியும். மேலும் திட்டத்தின் முடிவில் நல்ல தொகையும் கிடைக்கும். அது பல தேவைகளை பூர்த்தி செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க : November Changes : கேஸ் சிலிண்டர் முதல் தொலைத்தொடர்பு வரை.. நவம்பர் மாதம் வரவுள்ள அதிரடி மாற்றங்கள்!
அதனை கருத்தில் கொண்டு தான் பொதுமக்கள் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். ஆனால், அவ்வாறு முதலீடு செய்யும் பொதுமக்களுக்கு எந்த சேமிப்பு திட்டம் சிறந்த பலன்களை கொடுக்கும், எந்த திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தை பெற முடியும் என்ற தெளிவு இல்லாமல் இருக்கிறது. இந்த நிலையில், சிறந்த லாபத்தை வழங்கும் சில சிறு சேமிப்பு திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Post Office Scheme : அஞ்சலக சேமிப்பு திட்டம்.. மாதம் ரூ.2,000 முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்?
முதலீட்டிற்கு சிறந்த சிறு சேமிப்பு திட்டம் எது?
அஞ்சலக சேமிப்பு திட்டம்
சிறுசேமிப்பு திட்டங்களில் முக்கிய பங்கு வகிப்பது இந்த அஞ்சலக சேமிப்பு திட்டம். இது அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால் இது மிகவும் பாதுகாப்பான திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தில் தனிநபர் மற்றும் கூட்டாக இணைந்து கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.50 முதலே முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு 4% வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கு
சிறந்த சிறுசேமிப்பு திட்டங்களில் இந்த தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கும் ஒன்றாகும். இந்த திட்டத்தில் ரூ.100 முதலே முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Fixed Deposit : எஸ்பிஐ முதல் ஐசிஐசிஐ வரை.. 5 ஆண்டுகளுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்!
தேசிய சேமிப்பு மாதாந்திர கணக்கு
இந்த தேசிய சேமிப்பு மாதாந்திர கணக்கில் ரூ.1,000 முதல் முதலீடு செய்ய தொடங்கலாம். இந்த திட்டத்தில் தனிநபர் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதுவே கூட்டுக்கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்றால் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு சுமார் 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பொது வருங்கால வைப்புநிதி
அரசின் இந்த பொது வருங்கால வைப்புநிதி திட்டம் சிறந்த வட்டி வழங்குகிறது. அதாவது இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு சுமார் 7.1 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Fixed Deposit : எஸ்பிஐ Vs செண்ட்ரல் பேங்க்.. மூத்த குடிமக்களுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கி எது?
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.