பங்குச் சந்தை இந்த வாரம்.. எந்தெந்த பங்குகள் வாங்கலாம்? முதலீட்டு நிபுணர்கள் கணிப்பு!
Stock market this week: வாரத்தின் தொடக்க நாளான திங்கள்கிழமை (டிச.2, 2024) சந்தைகளில் சில முக்கிய காரணிகள் எதிரொலிக்கும் என முதலீட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வாரம் எந்த பங்குகள் முன்னணியில் இருக்கும்? எந்தெந்த பங்குகள் கண்காணிக்கப்படும்? வாங்க பார்க்கலாம்.
பங்குச் சந்தை இந்த வாரம் எதிர்ப்பார்ப்பு: இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய வார வர்த்தகத்தில் எப்படி இருக்கும்? திங்கள்கிழமை வர்த்தக காரணிகளை எவையெல்லாம் பாதிக்கும் என்பது குறித்து முதலீட்டு நிபுணர்கள் சில சமிக்ஞைகளை முன்னறிவித்துள்ளனர். அதன்படி, உலகப் போக்குகள், வெளிநாட்டு நிதி நகர்வுகள், மேக்ரோ எகனாமிக் தரவு மற்றும் ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) வரவிருக்கும் வட்டி விகித முடிவு ஆகியவை முன்னணி வகிக்கும் எனக் கூறுகின்றனர். மேலும், மாதாந்திர வாகன விற்பனை புள்ளிவிவரங்கள் உட்பட முக்கிய தரவு வெளியீடுகளும் முதலீட்டாளர் முடிவுகளை பாதிக்கும் என சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தை எப்படி இருக்கும்?
இது குறித்து, ஸ்வஸ்திகா இன்வெஸ்ட்மார்ட் லிமிடெட் நிறுவனத்தின் ஆராய்ச்சித் தலைவர் சந்தோஷ் மீனா, “ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதமான 5.4%க்கு சந்தைகள் பதிலளிக்கக்கூடும் என நம்புகிறேன். அத்துடன், முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கியின் கொள்கை மதிப்பாய்வு, குறிப்பாக வட்டி விகித முடிவுகளை சீர்தூக்கிப் பார்ப்பார்கள்” என்றார்.
இதையும் படிங்க : Explained: லம்ப்சம் முதலீடு என்றால் என்ன? லம்ப்சம்-ஐ விட எஸ்.ஐ.பி சிறந்ததா?
ஜி.டி.பி சரிவு
இந்த நிலையில், புவிசார் அரசியல் பதட்டங்கள், குறிப்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் என உலகளாவிய கவலைகள் வேறு அதிகரித்து காணப்படுகிறது.
இதற்கிடையில், செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5.4% ஆக சரிந்து காணப்படுகிறது.
இதற்கு, உற்பத்தி மற்றும் சுரங்கத் துறைகளில் பலவீனமான செயல்திறன் மற்றும் குறைந்த நுகர்வு காரணமாக கூறப்பட்டாலும் இதுவும் சந்தைகளில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பங்குச் சந்தை நிலவரம்
இந்த நிலையில், இந்திய பங்குச் சந்தை கடந்த வாரம் சாதகமாக முடிவடைந்தது. அதாவது, மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ) பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் 685.68 புள்ளிகள் அல்லது 0.86% உயர்ந்து காணப்பட்டது.
தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) நிஃப்டி ஒரு வார ஏற்ற இறக்கத்திற்குப் பிறகு 223.85 புள்ளிகள் அல்லது 0.93% அதிகரித்து காணப்பட்டது. இது சாதகமான போக்காக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Mutual fund: மாதம் ரூ.5 ஆயிரம் முதலீடு.. ரூ.1 கோடி ரிட்டன்!
எதிர்பார்க்கப்படும் பங்குகள்
இதற்கிடையில் இந்த வாரத்திலும் கடந்த காலத்தை போன்று அதானி நிறுவன பங்குகள் முதலீட்டாளர்களால் உற்று நோக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், வங்கி, ஆட்டோ, துரித உணவுகள், மருத்துவம் உள்ளிட்ட பங்குகள் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ரிலிகேர் ப்ரோக்கிங் லிமிடெட் நிறுவனத்தின் ஆராய்ச்சியின் மூத்த துணைத் தலைவர் அஜித் மிஸ்ரா, “வெள்ளிக்கிழமை (நவ.29, 2024) வெளியான ஜிடிபி தரவுகளுக்கு சந்தைப் பங்கேற்பாளர்கள் எதிர்வினையாற்றுவார்கள், குறிப்பாக ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை மதிப்பாய்வில் கவனம் செலுத்துவார்கள்” என்றார்.
பொறுப்பு துறப்பு: பங்குச் சந்தை தொடர்பான செய்தி தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டு உள்ளது. பயனரின் முதலீட்டு லாப நஷ்டங்களுக்கு டி.வி 9 நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது. முதலீட்டுக்கு முன் செபி-யால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரிடம் ஆலோசனைகள் பெறவும். பங்குச் சந்தை முதலீட்டு சந்தை அபாயத்துக்கு உட்பட்டது.