Richest Man of Asia : அதானி Vs அம்பானி.. ஆசியாவின் முதல் பணக்காரர் யார்.. ஃபோர்ப்ஸ் அறிக்கை கூறுவது என்ன? - Tamil News | Who is the richest man of Asia whether it Adani or Ambani, Let see what Forbes says in Tamil | TV9 Tamil

Richest Man of Asia : அதானி Vs அம்பானி.. ஆசியாவின் முதல் பணக்காரர் யார்.. ஃபோர்ப்ஸ் அறிக்கை கூறுவது என்ன?

Updated On: 

04 Sep 2024 11:22 AM

Hurun Vs Forbes | கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான 2024 ஆம் ஆண்டுக்கான ஹூருன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ஆசியாவின் முதல் பணக்காரராக அதானி உள்ளதாக தெரிவித்தது. இந்த நிலையில் ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதற்கு நேர் மாறாக தெரிவித்துள்ளது.

Richest Man of Asia : அதானி Vs அம்பானி.. ஆசியாவின் முதல் பணக்காரர் யார்.. ஃபோர்ப்ஸ் அறிக்கை கூறுவது என்ன?

அம்பானி மற்றும் அதானி (Photo Credit : PTI and Getty)

Follow Us On

முகேஷ் அம்பானி பின்னடைவு : உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் குழுமத்தின் மூலம் தொலைத்தொடர்பு முதல் ஆடை விற்பனை வரை பல்வேறு தொழில்களை செய்து வரும் முகேஷ் அம்பானி, தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 2024 ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலில் உலக அளவில் முகேஷ் அம்பானி 9வது இடம் பிடித்த நிலையில், ஆசிய அளவில் முதல் இடம் பிடித்திருந்தார். அதேபோல கவுதம் அதானி 2வது இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான 2024 ஆம் ஆண்டுக்கான ஹூருன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ஆசியாவின் முதல் பணக்காரராக அதானி உள்ளதாக தெரிவித்தது. இந்த நிலையில் ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதற்கு நேர் மாறாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஃபோர்ப்ஸ் அறிக்கையில் முதல் இடம் பிடித்துள்ளது யார், அது குறித்து போர்ப்ஸ் கூறுவது என்ன என விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Amrit Kalash : பொது குடிமக்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை.. அம்ரித் கலாஷ் திட்டத்தில் FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் SBI..

ஹூருன் இந்திய பணக்காரர்கள் பட்டியல் கூறுவது என்ன?

ஒவ்வொரு ஆண்டும் ஹுருன் இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிடும். அதன்படி, அதன்படி, இந்த ஆண்டும் பட்டியலை வெளியிட்டது. அதில் ஆசியாவில் முதல் பணக்காரராக ரூ.11.6 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் கவுதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள ஹூருன், ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பிறகு ஒரு ஆண்டில் அதானி குழுமம் தனது சொத்துக்களில் 95% திரும்ப பெற்றுள்ளாதாக தெரிவித்துள்ளது.

ஹூருன் அறிக்கைக்கு நேர் மாறாக அறிக்கை வெளியிட்ட ஃபோர்ப்ஸ் – காரணம் என்ன?

ஆனால் அதற்கு நேர் மாறாக ஃபோர்ப்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா மற்றும் ஆசியாவின் முதல் பணக்காரராக முகேஷ் அம்பானி உள்ளார். இது குறித்து விளக்கமளித்துள்ள ஃபோர்ப்ஸ் அவர் சுமார் 117.1 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் உலக அளவில் 12வது இடத்தில் இருப்பதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி கவுதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் சுமார் 81.9 பில்லியன் அமெரிக்க லாடர் சொத்து மதிப்புடன் பின்தங்கியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Aadhaar Card : ஆதார் கார்டில் முகவரியை மாற்ற இந்த 45 ஆவணங்களை பயன்படுத்தலாம்.. எவையெல்லாம் தெரியுமா?

இதேபோல ப்ளூம்பெர்கின் அறிக்கையும் வேறுபடுகிறது. அதன்படி உலக அளவில் முகேஷ் அம்பானி 11வது இடத்திலும் கவுதம் அதானி 15வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
Exit mobile version