வங்கிக் கணக்கில் பணம் இல்லை.. மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீடு பாதிக்குமா?
Mutual fund SIP: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு திட்டத்தில் எஸ்.ஐ.பி எனப்படும் மாதாந்திர முதலீடு பிரதானமாக உள்ளது. இந்த முறைய நிறுத்தினால், மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்போலியோ பாதிக்கப்படுமா?
மியூச்சுவல் ஃபண்ட் முறையான முதலீட்டுத் திட்டங்கள் (SIPs) முதலீட்டாளர்களிடையே அதிகளவில் பிரபலமடைந்துள்ளன. ஒரு முதலீட்டாளர் செல்வத்தை குவிக்க ஒரு கட்டமைக்கப்பட்ட முறையை விரும்புகிறார்கள். இதற்கு, எஸ்.ஐ.பி பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. எனினும், சரியான நேரத்தில் பணம் செலுத்துவதை புறக்கணிப்பது முதலீட்டாளரின் நிதி சேமிப்பை கணிசமாக பாதிக்கும். ஏனெனில், எஸ்.ஐ.பி.க்களின் செயல்திறன் பெரும்பாலும் கூட்டுக் கொள்கை அடிப்படையிலானவை. ஆகவே, இது சரியான நேரத்தில் பணம் செலுத்தப்படாதபோது வருவாயை பெருமளவு பாதிக்கிறது.
வங்கிக் கணக்கில் பணம் இல்லையென்றால்?
மேலும், பங்களிப்புகளில் ஏற்படும் கால தாமதம் முதலீட்டாளர்கள் சந்தை ஏற்ற இறக்கங்களை மேம்படுத்துவதையும், சாதகமான முதலீட்டு வாய்ப்புகளைப் பெறுவதையும் தடுக்கிறது. ஆகவே, ஒரு முதலீட்டாளர் எஸ்.ஐ.பி முறையில் சீரான முதலீடு செய்வது அவசியமாகும்.
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் உங்கள் வங்கிக் கணக்கில் போதிய நிதி இல்லை என்றால், பணத்தை எடுப்பதைத் தவிர்க்கும். இதன் விளைவாக, உங்கள் எஸ்.ஐ.பி நிறுத்தப்படலாம், மேலும் உங்கள் முதலீடுகள் எதிர்பார்த்தபடி வளராமல் போகலாம்.
இதையும் படிங்க: அதானி பங்குகள் 20 சதவீதம் வரை வீழ்ச்சி: பின்னணி என்ன?
இது மட்டுமின்றி, ஒரு எஸ்.ஐ.பி தவணையை தவறவிட்டால், குறிப்பிட்ட காலத்திற்கான திட்டமிடப்பட்ட முதலீடு செயல்படுத்தப்படாது. இது உகந்த நேரத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை இழக்க நேரிடுகிறதுஃ
இது, முதலீட்டை சாதகமாக பாதிக்கக்கூடிய சாத்தியமான ஆதாயங்கள் அல்லது சாதகமான சந்தை நிலைமைகளை இழக்க வழிவகுக்கும்.
முதலீட்டு நிபுணர் விளக்கம்
இது குறித்து பேசிய பொருளாதார முதலீட்டு நிபுணர் ஒருவர், “ஒரு முறையான முதலீட்டுத் திட்டம் என்பது, நீண்ட காலத்திற்கு தொடர்ந்து சிறிய நடவடிக்கைகளை எடுத்து, சவாலான முதலீட்டு இலக்கை நிர்வகிக்கக்கூடியது ஆகும்.
ஆகவே இதில் கவனமாக செயல்பட வேண்டும். தவணைக் காலத்தை தவறவிடுவது உங்கள் செல்வத்தை பாதிக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும், உங்களின் சிறிய தவறு கூட, முதலீடுகளின் மூலம் நீங்கள் அடைய விரும்பும் உங்கள் நிதி நோக்கங்களுக்கு இடையூறாக இருக்கலாம்” என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மாறுபட்ட தவணைக்கு அனுமதி
பொதுவாக, முதலீட்டாளர்கள் காலப்போக்கில் மாறுபட்ட தவணைகளில் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களைப் பெற அனுமதிக்கிறது. இதனால், தவணையை தவறவிடுவது இந்த வழக்கமான முதலீட்டு முறையை சீர்குலைக்கிறது.
வருவாய் குறைவு
பணம் செலுத்தத் தவறினால், உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவில் திரட்டப்பட்ட மொத்த யூனிட்கள், திட்டமிடப்பட்ட அனைத்துப் பணம் செலுத்தப்பட்டதை விட குறைவாக இருக்கும்.
காலப்போக்கில், இந்த குறைப்பு உங்கள் முதலீட்டின் ஒட்டுமொத்த மதிப்பை மோசமாக பாதிக்கக் கூட வாய்ப்புகள் உண்டு. மேலும், தாமதங்கள் உங்கள் முதலீட்டு இலக்குகளில் இருந்து விலகலுக்கு வழிவகுக்கும். நீண்ட கால செல்வக் குவிப்பை அடைவதற்கு நிலைத்தன்மையும் ஒழுக்கமும் இன்றியமையாதவை.
மாற்றுவழி என்ன?
ஆகவே, உங்கள் முதலீட்டு இலக்குகளை நோக்கி நிலையான முன்னேற்றத்தை உறுதி செய்யவும். ஒவ்வொரு முதலீட்டாளரும் எஸ்.ஐ.பி கொடுப்பனவுகளை சரியான நேரத்தில் செலுத்துவது நல்லது. இதில், ஏதேனும் சவால்களை நீங்கள் எதிர்பார்த்தால், சாத்தியமான தீர்வுகள் அல்லது மாற்று வழிகளைப் பற்றி சிந்தியுங்கள்.
இதையும் படிங்க: சரிவை சந்திக்கும் தங்கம்.. இது முதலீட்டுக்கு உகந்த நேரமா?