5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

அதானி மீதான குற்றச்சாட்டு.. FBI போடும் வலை.. இந்திய மாநில அரசுகளுக்கு நெருக்கடியா?

US charges against Adani: அதானி மீதான அமெரிக்கா குற்றச்சாட்டால் இந்திய மின் துறைக்கு பாதிப்பா? தமிழ்நாடு அரசின் விளக்கம் என்ன? அதானி மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்துகின்றனவா?

அதானி மீதான குற்றச்சாட்டு.. FBI போடும் வலை.. இந்திய மாநில அரசுகளுக்கு நெருக்கடியா?
இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 22 Nov 2024 18:06 PM

இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் 7 பேர் மீது அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. அதாவது, அதானி குழுமம் பெரிய அளவில் லஞ்சம் அளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகதாக குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இதன் மூலம் பல பில்லியன் டாலர் மோசடி நடைபெற்றதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. இதில், குறிப்பாக அதானி முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளார் என்றும் கூறியுள்ளது.

ராகுல் பேச்சு- பா.ஜ.க பதில்

இந்த விவகாரத்தில் கெளதம் அதானியை கைது செய்து விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள பா.ஜ.க. எம்.பி பத்ரா, “ரஃபேல் குறித்தும் தவறான தகவல்களை ராகுல் காந்தி தெரிவித்தார். பின்னர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார்” எனத் தெரிவித்துள்ளார்.

பங்குகள் கடும் சரிவு

அதானி மீதான அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் புகார்களை தொடர்ந்து, அந்நிறுவன பங்குகள் கடுமையாக சரிந்தன. அதிலும் குறிப்பாக அதானி எனர்ஜி சொலுசன் பங்குகள் 20 சதவீதம் வரையிலும், அதானி கேஸ் நிறுவன பங்குகள் 18 சதவீதம் வரையிலும் சரிவை சந்தித்தன.
மற்ற நிறுவன பங்குகளும் பாதிப்பில் இருந்து மீளவில்லை. கிட்டத்தட்ட 10 சதவீதம் வரை சரிவை சந்தித்தன. இந்தப் பட்டியலில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி க்ரீன் எனர்ஜி உள்ளிட்ட பங்குகள் அடங்கும்.

இதையும் படிங்க : அதானி பங்குகள் 20 சதவீதம் வரை வீழ்ச்சி: பின்னணி என்ன?

அதானி ஒப்பந்தங்களை ரத்து செய்த கென்யா

கெளதம் அதானி மீது அமெரிக்கா குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், 30 ஆண்டுகால ஒப்பந்தத்தை கென்யா திடீரென ரத்து செய்தது. இந்த 736 மில்லியன் டாலர் திட்டத்தின் இந்திய மதிப்பு ரூ.6 ஆயிரத்து 215 கோடி ஆகும்.

இந்தியா அல்லாத வெளிநாட்டில் அதானி நிறுவனத்தின் முதன்மை முதலீடாக இது பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவது அதானி மற்றும் அதானி நிறுவனங்களுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும், இதனை காரணமாக கூறி மற்ற நாடுகளிலும் இதே போன்ற பின்னடைவு ஏற்படுமா? என்றும் பொருளாதார நிபுணர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மாநில மின்சார துறைக்கு பாதிப்பா?

இதற்கிடையில் இந்திய மாநிலங்களின் மின்வாரிய துறைக்கு பாதிப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இது குறித்து, தமிழ்நாடு அரசு மின்சார வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
அதில், “கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் தமிழக அரசு எஸ்.இ.சி.ஐ உடன் மட்டுமே ஒப்பந்தம் செய்துள்ளனர். மேலும், அனைத்து விதமான வரவு செலவும் எஸ்.இ.சி.ஐ உடன் மட்டுமே உள்ளது.
இந்த விவகாரத்தில், அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் இலஞ்சம் வழங்கியது என்றால் எந்த நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது என்பதைத்தான் விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் குற்றச்சாட்டை முன்வைக்கும் அமெரிக்கா

அதானி நிறுவனங்கள் மீது அமெரிக்கா ஏற்கனவே இந்தக் குற்றச்சாட்டுகளை வைத்து இருந்தது. இந்நிலையில் மீண்டும் அமெரிக்கா குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. மேலும், கடந்த முறையை போல் அல்லாமல் இம்முறை அதானி மீது பரபரப்பான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பல்வேறு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளார் என்றும் இதில் பல கோடி ரூபாய் கைமாறியுள்ளது என்றும் முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி அறிக்கை அதானி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதுவும், இந்திய அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆட்டம் காணும் அதானி பங்குகள்

இதற்கிடையில் தற்போதைய குற்றச்சாட்டுகள் இந்திய பங்குச் சந்தைகளில் அதானி நிறுவன பங்குகளை ஆட்டம் காண செய்துள்ளன.  ஏற்கனவே ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கை வெளியான காலம் முதலே அதானி பங்குகளுக்கு பங்குச் சந்தைகளில் போதாதக் காலம் ஆரம்பித்தது.

எனினும், பங்குகள் பல்வேறு நிலைகளில் மீண்டு வந்தன. குறிப்பாக, அதானி போர்ட், அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி க்ரீன் எனர்ஜி உள்ளிட்ட பங்குகள் மீண்டு வந்தன. இதற்கிடையில் மீண்டும் அமெரிக்காவின் குற்றச்சாட்டு அதானி பங்குகளை அதல பாதாளத்தில் தள்ளியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் பல லட்சம் கோடிகளை அதானி இழந்துள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழ்நாட்டில் அரசியல் புயலையும் கிளப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :  Share Market : இந்திய பங்குச்சந்தை கடும் சரிவு.. பயங்கர அடிவாங்கிய அதானி பங்குகள்!

Latest News