Credit Card Scam : கிரெடிட் கார்டு மோசடியில் ரூ.72 லட்சத்தை இழந்த மூதாட்டி.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..பாதுகாப்பாக இருப்பது எப்படி?

Cyber Scam | நிதி சம்மந்தமான தகவல்களை பாதுகாப்பதற்காக ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட்டு இருந்தாலும் இந்த குற்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில், கேரளாவை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கிரெடிட் கார்டை அன்பிளாக் செய்ய முயற்சித்து ரூ.72 லட்சம் பணத்தை மோசடிகாரர்களிடம் இழந்துள்ளார்.

Credit Card Scam : கிரெடிட் கார்டு மோசடியில் ரூ.72 லட்சத்தை இழந்த மூதாட்டி.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..பாதுகாப்பாக இருப்பது எப்படி?

மாதிரி புகைப்படம்

Updated On: 

02 Sep 2024 17:42 PM

சைபர் மோசடி : நவீனமயமாக்கப்பட்ட இந்த உலகில் நாளுக்கு நாள் சைபர் மோசடிகள் அரங்கேறிக்கொண்டே வருகின்றன. குறிப்பாக தகவல் திருட்டு மூலம் ஏராளமான குற்ற சம்பவங்களும், மோசடி சம்பவங்களும் நடக்கின்றன. அதிலும் குறிப்பாக கிரெடிட் மோசடிகளின் எண்ணிக்கை ஏராளம். நிதி சம்மந்தமான தகவல்களை பாதுகாப்பதற்காக ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட்டு இருந்தாலும் இந்த குற்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில், கேரளாவை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கிரெடிட் கார்டை அன்பிளாக் செய்ய முயற்சித்து ரூ.72 லட்சம் பணத்தை மோசடிகாரர்களிடம் இழந்துள்ளார். மூதாட்டியிடம் மோசடி அரங்கேறியது எப்படி, கிரெடிட் கார்டு மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என விரிவாக பார்க்கலாம்.

மூதாட்டியிடம் ரூ.72 லட்சம் பணம் கொள்ளை

கேரள மாநிலம், குடப்பனகுனு பகுதியை சேர்தவர் 72 வயது மூதாட்டி. இவருக்கு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் இருந்து பேசுவதாக அடிக்கடி போன் கால்கள் வந்துள்ளது. அவ்வாறு வங்கி அதிகாரியை போல மூதாட்டியிடம் பேசிய சைபர் கொள்ளையர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக மூதாட்டியின் கிரெடிட் கார்டு பிளாக் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து மூதாட்டி கிரெடிட் கார்டை அன்பிளாக் செய்ய முயற்சித்த போது பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இதையும் படிங்க : Fixed Deposit : FD-களுக்கு 7.45% வரை வட்டி வழங்கும் தனியார் துறை வங்கிகள்.. பட்டியல் இதோ!

ஆர்பிஐ மற்றும் சிபிஐ அதிகாரிகளை போல பேசி மோசடி செய்த கும்பல்

கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி மூதாட்டியை தொடர்புக்கொண்டு பேசிய நபர், மூதாட்டியின் கிரெடிட் கார்டு பிளாக் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாகவும் அன்பிளாக் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து சிபிஐ-ல் இருந்து பேசுவதாக மூதாட்டியை தொடர்புக்கொண்ட நபர், சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்ததாக மூதாட்டி மீது வழங்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனால் பயந்துப்போன மூதாட்டி, தனது வங்கி விவரங்கள் உள்ளிட்ட முக்கியமான விவரங்களை வழங்கியுள்ளார். அதனை பயன்படுத்தி கொள்ளையர்கள் மொத்த பணத்தையும் கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சைபர் குற்றங்களை தடுப்பது எப்படி?

உறுதியான கடவுச்சொல்லை பயன்படுத்துங்கள் 

உங்கள் கிரெடிட் கார்டு மற்றும் வங்கி கணக்குகளுக்கு உறிதியான மற்றும் தனித்துவமான கடவுச்சொல்லை பயன்படுத்துங்கள். உங்கள் பெயர் அல்லது பிறந்த தேதியை கடவுச்சொல்லாக வைத்தால் அவை எளிதில் திருடப்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த தவறை செய்யாதீர்கள். அதற்கு மாறாக எண்கள், சிறப்பு எண்கள் மற்றும் குறியீடுகளை பயன்படுத்துங்கள்.

2 ஃபேக்டர் அங்கீகாரத்தை செய்யுங்கள்

2 ஃபேக்டர் அங்கீகாரத்தை வைக்கும்போதும் உங்கள் கடவு சொல்லுக்கு அது கூடுதல் பாதுகாப்பாக அமையும். ஒருவேளை உங்கள் கடவு சொல் திருடப்பட்டாலும், உங்கள் மொபைல் எண் அல்லது மின்னஞ்சலுக்கு குறுஞ்செய்தி அல்லது ஒடிபி வரும். இதன் மூலம் யாரேனும் உங்கள் கிரெடிட் கார்டில் இருந்தோ அல்லது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முயற்சி செய்தால் உங்களுக்கு தெரிந்துவிடும்.

உங்கள் கணக்கை அவ்வப்போது கவணியுங்கள் 

உங்கள் கிரெடிட் கார் ஸ்டேட்மெண்ட் மற்றும் வங்கி கணக்கை அவ்வபோது ஆராய்வதன் மூலம் சைபர் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

இதையும் படிங்க : Aadhaar Card : ஆதார் கார்டில் முகவரியை மாற்ற இந்த 45 ஆவணங்களை பயன்படுத்தலாம்.. எவையெல்லாம் தெரியுமா?

பொது இடங்களில் இருக்கும் wifi வசதியை பயன்படுத்தும்போது மிகவும் கவனம் தேவை 

பொது இடங்களில் wifi வசதியை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருங்கள். ஏனென்றால் wifi மூலம் உங்கள் தகவல்கள் திருடப்படலாம். சமீபத்தில் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன.

குறுஞ்செய்திகள் குறித்து கவனம் தேவை 

உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகள் குறித்து கவனமாக இருங்கள். உங்கள் மொபைல் எண் அல்லது மின்னஞ்சலுக்கு தெரியாத எண், மின்னஞ்சலில் வரும் லிங்குகளை கிளிக் செய்யாதீர்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தகவல்கள் திருடப்பட்டு உங்கள் வங்கி அல்லது கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

தகவல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள் 

உங்கள் வங்கி கணக்கு எண், கிரெடிட் கார்டு விவரங்கள் ஆகியவற்றை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் உங்கள் விவரங்கள் திருடப்பட்டு சைபர் மோசடி நடக்க அதிகம் வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : New Rules : கேஸ் சிலிண்டர் விலை முதல் ஆதார் கார்டு வரை.. அமலுக்கு வந்த புதிய நடைமுறைகள்!

மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை தவறாமல் கடைபிடிப்பதன் மூலம் சைபர் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!