உலகின் சக்தி வாய்ந்த இந்திய பெண்கள் யார்? முழு விவரம்
Worlds most powerful women in 2024: உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் (2024) பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழிலதிபர் ரோஷிணி நாடார் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.
2024-ல் உலகின் சக்தி வாய்ந்த பெண்கள்: உலகின் பிரபலமான பத்திரிகையான போர்ப்ஸ், சர்வதேச அளவில் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 28வது இடத்திலும், தொழிலதிபர் ஷிவ் நாடாரின் மகளும் ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் தலைவர் ரோஷிணி நாடார் 81 வது இடத்திலும், கிரண் மஜும்தார் 82வது இடத்திலும் உள்ளனர். பயோகான் நிறுவனரான கிரண் மஜும்தார் இளம் தொழிலதிபர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறார். அந்த வகையில், போர்ப்ஸின் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலை பார்க்கலாம்.
போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் முதலிடத்தில் உள்ளார். அந்த வகையில், முதல் 10 பேரை பார்க்கலாம்.
1) உர்சுலா வான் டெர் லேயன் (ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்)
2) கிறிஸ்டின் லகார்டே
3) ஜியோர்ஜியா மெலோனி (இத்தாலி ஐரோப்பிய யூனியன்)
4) மெக்ஸிகோ கிளாடியா ஷீன்பாம் (மெக்சிகோவின் அதிபர்)
5) மேரி பார்ரா (அமெரிக்கா)
6) அபிகாயில் ஜான்சன் (இங்கிலாந்து)
7) ஜூலி ஸ்வீட் (அமெரிக்கா)
8) மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் (பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவர்)
9) மெக்கென்சி ஸ்காட் (அமெரிக்கா)
10) ஜேன் ஃப்ரேசர் (அமெரிக்கா)
இந்தப் பட்டியலில் பாடகி டெய்லர் ஸ்விப்ட் 23வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா நாட்டின் முன்னாள் பிரதமரான ஜீலியா கில்லார்ட் 88வது இடத்தில் காணப்படுகிறார்.
பட்டியலில் இந்திய பெண்கள்
இந்தப் பட்டியலில் நாட்டின் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் 28வது இடத்தில் உள்ளார். ரோஷிணி நாடார் மல்கோத்ரா 81வது இடத்தில் உள்ளார். மற்றொரு தொழிலதிபரான கிரண் மஜும்தார் 82வது இடம் வகிக்கிறார். முதல் 100 பேர் கொண்ட பட்டியலில் இந்தியாவில் 3 பெண்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளனர்.
இதையும் படிங்க : குடித்து விட்டு வாகனம் ஓட்டலாமா? மோட்டார், காப்பீடு விதிகள் என்ன?
3 ஆண்டுகளாக முதலிடம்..
உலக மக்களால் பரவலாக அறியப்படும் போர்ப்ஸ் உலகின் சக்தி வாய்ந்த பெண்கள், பெண் தொழில் முனைவர்கள் என பல பிரிவுகளாக சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியலை வெளியிடும்.
இந்தப் பட்டியலில் பெரும்பாலும் வெளிநாட்டு பெண்கள்தான் இடம் பிடித்து இருப்பார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அரசியல்வாதியான நிர்மலா சீதாராமன், தொழிலதிபர்களான ரோஷிணி நாடார், கிரண் மஜும்தார் ஆகியோர் தொடர்ந்து இடம் பிடித்து வருகின்றனர்.
எனினும், பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தொடர்ந்து 3 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளார். இவர், 2022 முதல் தற்போது வரை முதலிடத்தில் உள்ளார்.
கமலா ஹாரிஸுக்கு இடம் இல்லை
உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் கமலா ஹாரிஸ் கடந்த ஆண்டுகளில் இடம் பிடித்திருந்தார். இவர், 2020 ஆம் ஆண்டு முதல் இரண்டாம் இடம், மூன்றாம் இடம் என முதல் 10 இடங்களுக்குள் காணப்பட்டார்.
ஆனால் தற்போது அவருக்கு முதல் 10 இடங்கள் மட்டுமல்ல, முதல் 100 பேர் கொண்ட சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலிலும் இடம் கிடைக்கவில்லை. முன்னதாக, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகள் கமலா ஹாரிஸ் மூன்றாம் இடம் பிடித்தார். இந்த ஆண்டு நடந்த அமெரிக்க தேர்தலில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் இரண்டாம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Ramachandra Aggarwal : அன்று கடனில் தொடங்கிய தொழில்.. இன்று ரூ.2,000 கோடிக்கு அதிபதி.. யார் இந்த ராமச்சந்திர அகர்வால்?