PF Complaint : நீங்கள் பணிபுரியும் நிறுவனம் உங்களுக்கு பிஎஃப் பணம் செலுத்தவில்லையா.. அப்போ இத பண்ணுங்க! - Tamil News | You can complain about your company if they are not crediting pf money regularly | TV9 Tamil

PF Complaint : நீங்கள் பணிபுரியும் நிறுவனம் உங்களுக்கு பிஎஃப் பணம் செலுத்தவில்லையா.. அப்போ இத பண்ணுங்க!

Published: 

15 Jul 2024 20:56 PM

PF Issue | நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் உங்கள் பிஎஃப் கணக்கில் பணம் செலுத்தவில்லை என்றால் அது குறித்து நீங்கள் புகார் செய்யலாம். அதற்கு சில ஆவணங்களை நீங்கள் வைத்திருக்க வேண்டும். அப்போது தான் உண்மையாகவே உங்கள் பிஎஃப் கணக்கில் பணம் செலுத்தப்படவில்லையா என்பதை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

PF Complaint : நீங்கள் பணிபுரியும் நிறுவனம் உங்களுக்கு பிஎஃப் பணம் செலுத்தவில்லையா.. அப்போ இத பண்ணுங்க!

மாதிரி புகைப்படம்

Follow Us On

பிஎஃப் கணக்கு : இந்தியாவில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஊழியர் வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ் பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டு. அந்த கணக்கில் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்படும். அந்த பணத்தை ஊழியர்கள் தங்கள் தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருவேளை ஊழியர் தனது பணி காலம் முழுவதும் பணத்தை எடுக்கவில்லை என்றால், பணி ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியமாக பெற்றுக்கொள்ளலாம். ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு தற்போது 8.25% ஆக உள்ளது. இது ஊழியர்கள் தங்களின் எதிர்காலத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவும். இந்நிலையில் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் உங்களுக்கு பிஎஃப் தொகை செலுத்தவில்லை என்றால் என்ன செய்யவேண்டும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

பிஎஃப் தொகை செலுத்தப்படவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்

நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் உங்கள் பிஎஃப் கணக்கில் பணம் செலுத்தவில்லை என்றால் அது குறித்து நீங்கள் புகார் செய்யலாம். அதற்கு சில ஆவணங்களை நீங்கள் வைத்திருக்க வேண்டும். அப்போது தான் உண்மையாகவே உங்கள் பிஎஃப் கணக்கில் பணம் செலுத்தப்படவில்லையா என்பதை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே புகார் அளிப்பதற்கு உங்களது Pay Slip-ஐ ஆதாரமாக பயன்படுத்தலாம்.

பிஎஃப் தொகை செலுத்தப்படவில்லை என்றால் புகார் அளிப்பது எப்படி?

  • உங்கள் புகாரை பதிவு செய்ய முதலில் EPFigms என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
  • இணையத்தின் முகப்பு பக்கத்தில் உங்கள் UAN எண், கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
  • உள்நுழைந்த பிறகு பங்களிப்பு விவரங்கள் மற்றும் புகார் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
  • அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்த பிறகு, தேவையாண ஆவணங்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்து சமர்ப்பிக்கவும்.

இதையும் படிங்க : EPFO : தமிழில் யுடியூப் சேனலை தொடங்கிய EPFO.. பயனர்களின் சந்தேகங்களை தீர்க்க புதிய முயற்சி!

புகாரின் நிலை குறித்த விவரங்களை பெற என்ன செய்ய வேண்டும்

நீங்கள் புகாரை பதிவு செய்த பிறகு, உங்களுக்கு ஒரு எண் வழங்கப்படும். அந்த எண்ணை வைத்து உங்கள் புகாரின் நிலையை எளிதாக சரிபார்த்துக்கொள்ளலாம். மேலும் பிஎஃப் தொடர்பான கூடுதல் தகவல்களை பெற, EPFO வின் உதவி எண் 14470 அழைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version