5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Recurring Deposit : வெறும் ரூ.100 முதலீடு செய்து ரூ.2 லட்சம் பெறலாம்.. அசத்தும் அஞ்சலக RD திட்டம்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

RD Investment | அரசின் இந்த தொடர் வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.100 முதல் முதலீடு செய்யலாம். இந்த நிலையில், இந்த திட்டத்தில் ரூ.100 முதலீடு செய்து ரூ.2 லட்சம் வருமானம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

Recurring Deposit : வெறும் ரூ.100 முதலீடு செய்து ரூ.2 லட்சம் பெறலாம்.. அசத்தும் அஞ்சலக RD திட்டம்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 20 Nov 2024 17:36 PM

சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் முகவும் முக்கியமான ஒன்றாகும். சேமிப்பு இல்லை என்றால், எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் செலவுகளை சமாளிப்பது மிகவும் கடினமாகி விடும். குறிப்பாக, கல்வி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்கான எதிர்பாராத நிதி நெருக்கடி அல்லது பெரிய நிதி தேவை ஏற்படலாம். அவற்றை பூர்த்தி செய்யும் விதமாக தான் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் அஞ்சலகங்கள் மூலம் அரசு செயல்படுத்தும் RD (Recurring Deposit) திட்டம். இந்த திட்டம் தொடர் வைப்பு நிதி என அழைக்கப்படுகிறது.

இதையும் படிங்க : SBI FD : எஸ்பிஐ-ன் நிலையான வைப்பு நிதி திட்டம்.. ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

அஞ்சலக தொடர் வைப்பு நிதி என்றால் என்ன?

அஞ்சலக தொடர் வைப்பு நிதி திட்டம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான திட்டமாக கருதப்படுகிறது. காரணம், இந்த திட்டம் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. அதுமட்டுமன்றி, இந்த திட்டத்திற்கு சிறந்த வட்டி வழங்கப்படுவதால் ஏராளமான பொதுமக்கள் இந்த திட்டத்தி முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். அரசின் இந்த அஞ்சலக தொடர் வைப்பு நிதி திட்டம் சாமானியர்களுக்கான சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. காரணம், மத்த முதலீட்டு திட்டங்களில் திட்டத்தின் தொடக்கத்திலேயே மொத்த தொகையையும் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், தொடர் வைப்பு நிதி திட்டத்தில் அதற்கான தேவை எதுவும் இல்லை.

ரூ.100 முதல் முதலீடு செய்யலாம்

பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப கொஞ்ம் கொஞ்சாம பணம் செலுத்தும் வசதி உள்ளது. ஏழை, எளிய மக்களால் ஒரே நேரத்தில் அதிக தொகை செலுத்த முடியாத நிலையில், அவர்கள் சிறிது சிறிதாக சேமிக்க இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மற்ற முதலீட்டு திட்டங்களில் லட்சக்கணக்கில் முதலீடு செய்ய வேண்டும் என்ற நிலை உள்ள நிலையில், இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.100 முதல் முதலீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அரசின் இந்த தொடர் வைப்பு நிதி திட்டத்தில் ரூ.100 முதலீடு செய்து ரூ.2 லட்சம் வருமானம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Saving : குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க என்ன செய்ய வேண்டும்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

அஞ்சலக RD முதலீடு மற்றும் லாபம்

அரசின் இந்த அஞ்சல தொடர் வைப்பு நிதி திட்டத்தில் நீங்கள் தினமும் ரூ.100 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன்படி மாதம் ரூ.3,000 முதலீடு செய்திருப்பீர்கள். மாதம் ரூ.3,000 என்றால் ஆண்டுக்கு ரூ.36,000 வரை முதலீடு செய்திருப்பீர்கள். இப்போது நீங்கள் ஒரு ஆண்டுக்கு முதலீடு செய்தது போல தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன்படி, 5 ஆண்டுகளில் மொத்தமாக ரூ.1,80,000 வரை முதலீடு செய்திருப்பீர்கள். அரசின் இந்த தொடர் வைப்பு நிதி திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், திட்டத்தின் முடிவில் வட்டியாக மட்டும் ரூ.34,097 கிடைக்கும். அதனுடன் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.1,80,000 சேர்த்து மொத்தமாக ரூ.2,14,097 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Post Office RD : ரூ.5,000 முதலீடு செய்தால் போதும்.. ரூ.8 லட்சம் பெறலாம்.. அசத்தும் அஞ்சலக RD திட்டம்!

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News