SBI : ஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. மாதம் ரூ.70,000 வரை வருமானம்.. SBI-ன் அசத்தல் அறிவிப்பு!
State Bank of India | வீட்டில் இருந்தே தொழில் செய்ய விரும்பும் நபர்களுக்காக தான் SBI ஒரு சிறந்த வாய்பை வழங்குகிறது. நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, சொந்தமாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. அதாவது, SBI ஏடிஎம் ஃபிரான்சைஸை வழங்குகிறது.
எஸ்.பி.ஐ வழங்கும் சூப்பர் வாய்ப்பு : ஒவ்வொரு தனி மனிதருக்கும் வருமானம் என்பது அடிப்படை தேவையாகும். வருமானம் குறைவாக இருந்தாலோ அல்லது வருமானம் இல்லை என்றாலோ நிதி பற்றாக்குறை ஏற்படும். அது ஒருவரை கடும் நிதி சிக்கல்களுக்கு ஆளாக்கிவிடும். எனவே நிலையான பொருளாதாரத்தை கொண்டிருப்பது சிறந்ததாக இருக்கும். நிலையான பொருளாதாரம் இருக்க வேண்டும் என்றால் நிலையான வருமானத்திற்கான சிறந்த தொழில் வேண்டும். அப்படி வீட்டில் இருந்தே தொழில் செய்ய விரும்பும் நபர்களுக்காக தான் SBI ஒரு சிறந்த வாய்பை வழங்குகிறது. நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, சொந்தமாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. அதாவது, SBI ஏடிஎம் ஃபிரான்சைஸை வழங்குகிறது. அவ்வாறு SBI ஏடிஎம் ஃபிரான்சைஸை அமைக்கும் நபருக்கு மாதம் ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை வருமானம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து விரிவான தகவல்களை பார்க்கலாம்.
இதையும் படிங்க : Unified Pension Scheme: ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் என்றால் என்ன? யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு விவரம்!
எஸ்பிஐ ஏடிஎம் அமைக்க உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு
பொதுவாக வங்கிகள் ஏடிஎம்களை அமைப்பதில்லை. அவற்றுக்கென பிரத்யேக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அத்தகைய நிறுவனங்களுடன் வங்கிகள் ஒப்பந்தம செய்திருக்கும். அப்படி வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்கள் தான் ஏடிஎம் ஃபிரான்சைஸைகளை அமைத்து வருகின்றன. இந்த நிலையில் SBI ஏடிஎம் ஃபிரான்சைஸை நிறுவ தனி நபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே SBI ஏடிஎம் ஃபிரான்சைஸை நிறுவ விரும்பும் நபர்கள், SBI-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஏடிஎம் ஃபிரான்சைஸை அமைக்க விண்ணப்பிக்கலாம்.
ஏடிஎம் ஃபிரான்சைஸ் அமைப்பதற்கான முக்கிய விதிகள்
- ஏடிஎம் ஃபிரான்சைஸ் அமைக்க குறைந்தது 50 முதல் 80 சதுர அடி இடம் இருக்க வேண்டும்.
- அந்த பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் ஏடிஎம்-ல் இருந்து நீங்கள் அமைக்கப்போகும் ஏடிஎம் 100 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும்.
- மக்களின் கவனத்தை எளிதாக ஈர்க்கும் இடங்களில் நீங்கள் ஏடிஎம் அமைக்க போகும் இடம் இருக்க வேண்டும்.
- 24 மணி நேர மின்சார வசதி வேண்டும்.
- அதுமட்டுமன்றி நீங்கள் ஏடிஎம் அமைத்த பிறகு அதில் ஒரு நாளைக்கு குறைந்தது 300 பரிவர்த்தனைகளாவது நடக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Post Office Scheme : மாதம் ரூ.20,500 வரை வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!
உங்களிடம் மேற்குறிப்பிட்ட தகுதிகள் இருக்கும் பட்சத்தில் எஸ்பிஐ-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஏடிஎம் பிரான்சைஸ் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.