5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

PF Balance : UAN இல்லாமல் பிஎஃப் பேலன்ஸ் செக் பண்ணலாம்.. இந்த சிம்பிள் டிப்ஸ்களை தெரிஞிசிக்கோங்க!

Check PF Balance without UAN | ஊழியர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை EPFO இணையதளம் அல்லது அரசின் அதிகாரப்பூரவ் செயலியான UMAN செயலியை பதிவிறக்கம் செய்து அறிந்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு UAN எண் கட்டாயம் ஆகும். ஒரு வேளை உங்களிடன் UAN எண் இல்லை அல்லது UAN எண்ணை மறந்துவிட்டீர்கள் என்றால் கவலை வேண்டாம். UAN எண் இல்லாமலே உங்கள் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை எளிதாக தெரிந்துக்கொள்ளலாம். 

PF Balance : UAN இல்லாமல் பிஎஃப் பேலன்ஸ் செக் பண்ணலாம்.. இந்த சிம்பிள் டிப்ஸ்களை தெரிஞிசிக்கோங்க!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 18 Jul 2024 20:29 PM

பிஎஃப் பேலன்ஸ் : இந்தியாவில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஊழியர் வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் பணம், பிஎஃப் கணக்கில் மாதந்தோறும் வரவு வைக்கப்படும். இந்த பணத்தை ஊழியர்கள் தங்கள் தேவையின் போது எடுத்துக்கொள்ளலாம். ஒருவேளை ஊழியர்கள் தங்கள் பணி காலம் முழுவதும் பிஎஃப் பணத்தை எடுக்கவில்லை என்றால், அது அவர்கள் பணி காலம் முடிந்த பிறகு ஓய்வு ஊதியமாக வழங்கப்படும். ஊழியர்கள் தங்கள் கடைசி காலத்தை கருத்தில் கொண்டு அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஊழியர்கள் தங்களின் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது, மாதம் மாதம் கணக்கில் சரியாக பணம் செலுத்தப்படுகிறா என்பதை எளிதாக தெரிந்துக்கொள்ளாலாம்.

பிஎஃப் பேலன்ஸை சரிபார்க்க UAN எண் கட்டாயமா?

ஊழியர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை EPFO இணையதளம் அல்லது அரசின் அதிகாரப்பூரவ் செயலியான UMANG செயலியை பதிவிறக்கம் செய்து அறிந்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு UAN எண் கட்டாயம் ஆகும். ஒரு வேளை உங்களிடம் UAN எண் இல்லை அல்லது UAN எண்ணை மறந்துவிட்டீர்கள் என்றால் கவலை வேண்டாம். UAN எண் இல்லாமலே உங்கள் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை எளிதாக தெரிந்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : PF Complaint : நீங்கள் பணிபுரியும் நிறுவனம் உங்களுக்கு பிஎஃப் பணம் செலுத்தவில்லையா.. அப்போ இத பண்ணுங்க!

UAN எண் இல்லாமல் பிஎஃப் கணக்கில் பணம் எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்

  • உங்களிடம் UAN எண் இல்லை என்றால் 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுப்பதன் மூலம் பிஎஃப் பேலன்ஸை தெரிந்துக்கொள்ளலாம்.
  • உங்களிடம் UAN எண் இல்லை என்றால் 7738299899 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் பிஎஃப் பேலன்ஸை தெரிந்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : Fixed Deposit : மூத்த குடிமக்கள் எஃப்.டி.. 8.80% வரை வட்டி வழங்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!

UAN எண் மூலம் பிஎஃப் பேலன்ஸை அறிந்துக்கொள்வது எப்படி?

ஊழியர்கள் EPFO-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பிஎஃப் பேலன்ஸை எளிதாக தெரிந்துக்கொள்ளலாம். EPFO-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று UAN எண்ணை உள்ளிட்டு லாக் இன் செய்து பிஎஃப் பேலன்ஸை தெரிந்துக்கொள்ளலாம். அல்லது அரசின் அதிகாரப்பூர்வ UMANG செயலியை பதிவிறக்கம் செய்து அதில் லாக் இன் செய்து தெரிந்துக்கொள்ளலாம்.

Latest News