5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பிஎஃப் கணக்கை பழைய நிறுவனத்தில் இருந்து புதிய நிறுவனத்திற்கு மாற்ற வேண்டுமா?.. ஈசியா மாத்திடலாம்.. முழு விவரம் இதோ!

PF Account Transfer | நீங்கள் ஒரு அலுவகத்தில் இருந்து மற்றொரு அலுவலகத்திற்கு மாறும்போது உங்கள் பிஎஃப் கணக்கையும் கட்டாயம் மாற்ற வேண்டும். இல்லையென்றசால் உங்கள் பிஎஃப் கணக்கில் செலுத்தப்படும் வட்டிக்கு வரி விதிக்கப்படும். எனவே பிஎஃப் கணக்கை EPF-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று மாற்றிக்கொள்ளுங்கள்.

பிஎஃப் கணக்கை பழைய நிறுவனத்தில் இருந்து புதிய நிறுவனத்திற்கு மாற்ற வேண்டுமா?.. ஈசியா மாத்திடலாம்.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 05 Jul 2024 10:31 AM

பிஎஃப் கணக்கு : இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஊழியருக்கும் பிஎஃப் கணக்கு தொடங்கப்படும். இது தொழிலாளர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் சிறந்த திட்டமாகும். ஊழியர்கள் பிஎஃப் கணக்கை பராமரிப்பது அவர்கள் பணி ஓய்வு பெற்ற பிறகு நிதி நெருக்கடி இல்லாத எதிர்காலத்தை பெற உதவும். எனவே பிஎஃப் கணக்கை முறையாக பராமரிப்பது மிகவும் அவசியமாகும். ஊழியர்கள் ஒரு பணி இடத்தில் இருந்து மற்றொரு பணி இடத்திற்கு மாறும் போது கட்டாயம் பிஎஃப் கணக்கை மாற்ற வேண்டும். இல்லையென்றால் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். அதாவது ஊழியர்கள் பிஎஃப் கணக்கை மாற்றவில்லை என்றால் அவர்களின் பிஎஃப் கணக்கிற்கு வரும் வட்டிக்கு வரி விதிக்கப்படும்.

பிஎஃப் கணக்கை மாற்றுவது எப்படி?

  • முதலில் EPFO-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று உங்களௌடைய UAN எண்ணை வைத்து லாக்-இன் செய்யுங்கள்.
  • பிறகு ஆன்லைன் சர்வீஸ் (Online Service) என்ற ஆப்ஷனுக்கு சென்று One member – One EPF account (Transfer Request) என்பதை கிளிக் செய்யவும்.
  • பிறகு தேவையான விவரங்களை பதிவிட்டு அவற்றை உறுதிப்படுத்தவும்.
  • பிறகு நிரப்பபட்ட படிவம் 13-ஐ பெறுவதற்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபியை பதிவிடவும்.
  • அடுத்தாக படிவம் 13-ஐ பிரிண்ட் செய்து, அதை கையெழுதிட்டு உங்களுடைய தற்போதைய நிறுவனத்தில் 10 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும்.

படிவத்தை சமர்பித்த பிறகு உங்களுடைய தற்போதைய நிறுவனம் அதற்கான அங்கீகாரத்தை வழங்கும். அங்கீகாரம் வழங்குவதற்கான ஒவ்வொரு நிலையிலும் அது தொடர்பான அப்டேட்டுகள், குறுஞ்செய்தி மூலம் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதையும் படிங்க : வேலை மாறிய பிறகு பிஎஃப் கணக்கை மாற்றவில்லை என்றால் என்ன நடக்கும்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

பிஎஃப் கணக்கு மாற்றம் செய்வதற்கு தேவையான ஆவணங்கள்

  • அடையாள சான்றிதழ் (ஆதார், PAN உள்ளிட்டவை)
  • தற்போதைய நிறுவனம் மற்றும் முன்பு பணி செய்த நிறுவனங்களின் விவரங்கள்
  • வங்கி கணக்கு விவரம்

மேற்குறிப்பிட்ட ஆவணங்களை வைத்து உங்கள் பிஎஃப் கணக்கை முன்பு பணி செய்த அலுவகத்தில் இருந்து தற்போது பணி செய்யும் அலுவலகத்திற்கு மாற்றிவிடலாம்.

பிஎஃப் கணக்கு எதற்கு பயன்படுகிறது?

இந்தியாவில் தனியார் அல்லது அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஊழியர்கள் வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கப்படும். அந்த கணக்கில் ஊழியர்களின் மாத வருமானத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். இவ்வாறு மாதம் மாதம் வரவு வைக்கப்படும் பணத்தை ஊழியர்கள் தங்களது தேவைக்காக எடுத்துக்கொள்ளலாம். ஒருவேளை ஊழியர் தனது பணி காலம் முழுவதும் பணத்தை எடுக்கவில்லை என்றால், அவர் பணி ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியமாக மாதம் மாதம் பணம் வழங்கப்படும்.

Latest News