Post Office FD : வெறும் ரூ.5 லட்சம் முதலீடு செய்து ரூ.15,00,000 பெறலாம்.. அசத்தலான அஞ்சலக FD திட்டம்.. முழு விவரம் இதோ! - Tamil News | you can get 15 lakh rupees just by investing 5 lakh rupees in post office fixed deposit scheme | TV9 Tamil

Post Office FD : வெறும் ரூ.5 லட்சம் முதலீடு செய்து ரூ.15,00,000 பெறலாம்.. அசத்தலான அஞ்சலக FD திட்டம்.. முழு விவரம் இதோ!

Updated On: 

24 Jul 2024 11:17 AM

Best return FD | நீங்கள் சிறந்த வட்டியுடன் நல்ல வரவு தரக்கூடிய ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்பினால் உங்களுக்கு அஞ்சலக FD எனப்படும்  நிலையான முதலீட்டு திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் வெறும் ரூ.5 லட்சம் முதலீடு செய்வதன் மூலம் உங்களால் ரூ.15 லட்சம் வருமானம் ஈட்ட முடியும். 

Post Office FD : வெறும் ரூ.5 லட்சம் முதலீடு செய்து ரூ.15,00,000 பெறலாம்.. அசத்தலான அஞ்சலக FD திட்டம்.. முழு விவரம் இதோ!

மாதிரி புகைப்படம்

Follow Us On

சேமிப்பு திட்டம் : சேமிப்பு குறித்த சரியான திட்டமிடல் இருந்தால் பாதுகாப்பான எதிர்காலமும், நிலையான பொருளாதாரமும் இருக்கும். இதன் காரணமாகவே பலரும் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். அடுத்த 5 அல்ல 10 ஆண்டுகளில் ஏதேனும் வாங்க நினைத்தாலோ அல்லது தொழில் தொடங்க நினைத்தாலோ இந்த வகையான சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது சிறப்பானதாக இருக்கும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக இன்றே முதலீடு செய்வது அவர்களின் கல்வி மற்றும் திருமண தேவைகளை பூர்த்தி செய்ய உதவும். அந்த வகையில் வெறும் ரூ.5 லட்சம் முதலீடு செய்து ரூ.15 லட்சம் வருமானம் ஈட்டக்கூடிய அசத்தல் திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

நீங்கள் சிறந்த வட்டியுடன் நல்ல வரவு தரக்கூடிய ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்பினால் உங்களுக்கு அஞ்சலக FD எனப்படும்  நிலையான முதலீட்டு திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் வெறும் ரூ.5 லட்சம் முதலீடு செய்வதன் மூலம் உங்களால் ரூ.15 லட்சம் வருமானம் ஈட்ட முடியும்.

ரூ.5 லட்சம் முதலீட்டில் ரூ.15 லட்சம் ரிட்டன் பெறுவது எப்படி?

அஞ்சலக நிலையான முதலீட்டு திட்ட டெபாசிட்களுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. இந்நிலையில் நீங்கள் ரூ.5 லட்சம் இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதன் மூலம் 5 ஆண்டுகளில் உங்களுக்கு வட்டியாக ரூ.2,24,974 கிடைக்கும். முதலீடு மற்றும் வட்டியை சேர்த்து உங்களுக்கு ரூ.7, 24,974 கிடைக்கும். அதை அப்படியே அடுத்த 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு ரூ.10,51,175 கிடைக்கும். இப்பொழுது இந்த ரூ.10,51,175 தொகையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வட்டியுடன் சேர்த்து ரூ.15,24,149 கிடைக்கும். இவ்வாறு மீண்டும் மீண்டும் முதலீடு செய்வதன் மூலம் வெறும் ரூ.5 முதலீட்டில் 15 ஆண்டுகளுக்குள் உங்களால் ரூ.15 லட்சம் வருமான ஈட்ட முடியும்.

இதையும் படிங்க : Gold Price : தங்கம் விலை வரும் நாட்களில் குறையுமா? எவ்வளவு வரை எதிர்பார்க்கலாம்? நிபுணர்கள் கணிப்பு இதுதான்!

வட்டி மட்டும் ரூ.10,24,194

இந்த முதலீட்டு முறையை பின்பற்றி நீங்கள் முதலீடு செய்யும்போது உங்களுக்கு வட்டி மட்டுமே ரூ.10,24,194 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : NPS Vatsalya : குழந்தைகளுக்கான புதிய சேமிப்பு திட்டம்.. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட என்.பி.எஸ் வாத்சல்யா என்றால் என்ன?

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Related Stories
RBI : அமெரிக்கா, ஜெர்மனியை விட பணவீக்கத்தை சிறப்பாக கையாண்ட இந்தியா.. ரிசர்வ் வங்கி புகழாரம்!
Insurance Scheme : 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு.. மத்திய அரசு அதிரடி!
New UPI Rules : யுபிஐ செயலிகள் மூலம் பணம் அனுப்புவதற்கான வரம்பு உய்ரவு.. அமலுக்கு வந்த புதிய விதிகள்.. முழு விவரம் இதோ!
Gold Price September 16 2024: எகிறிய தங்கம் விலை.. தொடர்ந்து உயரும் தங்கம் விலையால் கலக்கத்தில் மக்கள்..
Amazon Great Indian Festival : அசத்தல் தள்ளுபடிகளுடன் வரப்போகும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்.. எப்போது தெரியுமா?
Gold Price September 14 2024: விண்ணை முட்டும் தங்கம் விலை.. தொடர்ந்து அதிகரிக்கும் விலையால் வேதனையில் மக்கள்..
இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version