5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மாதம் ரூ.40-க்கும் குறைவாக செலுத்தினால் போதும்.. ரூ.2 லட்சம் வரை காப்பீட்டுத் திட்டம்.. முழு விவரம் இதோ!

Jeevan Jyoti Bima Yojana | ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்குகிறது. இந்த திட்டத்தில் பயனடைய வேண்டும் என்றால் ஆண்டுக்கு ரூ.436 ப்ரீமியம் தொகை செலுத்த வேண்டும். அதாவது மாதத்திற்கு ரூ.40-க்கும் குறைவாக முதலீடு செய்வதன் மூலம் ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும்.

மாதம் ரூ.40-க்கும் குறைவாக செலுத்தினால் போதும்.. ரூ.2 லட்சம் வரை காப்பீட்டுத் திட்டம்.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 08 Jul 2024 16:29 PM

ஜீவன் ஜோதி பீமா யோஜனா : எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் சேமிப்பு மிகவும் கட்டாயம். சேமிப்பு இல்லை என்றால் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழும். எனவே தங்களின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக மக்கள் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். தனியார் சேமிப்பு திட்டங்கள் முறைகேடு செய்வதால் மக்கள் அரசின் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அதற்கு ஏற்றார்போல் அரசு பலவேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் மத்திய அரசின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம். இந்த திட்டன் பலன்கள் என்ன, எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்டவற்றை விரிவாக பார்க்கலாம்.

ஜீவன் ஜோதி பீமா யோஜனா சிறப்பு அம்சங்கள்

பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டது தான் ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம். இந்த திட்டம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்குகிறது. இந்த திட்டத்தில் பயனடைய வேண்டும் என்றால் ஆண்டுக்கு ரூ.436 ப்ரீமியம் தொகை செலுத்த வேண்டும். அதாவது மாதத்திற்கு ரூ.40-க்கும் குறைவாக முதலீடு செய்வதன் மூலம் ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும். ஒருவேளை பாலிசிதாரர் உயிரிழந்துவிட்டால், அவரின் நாமினிக்கோ அல்லது குடும்பத்தை சேர்ந்த நபர்களிடமோ அந்த பணம் ஒப்படைக்கப்படும்.

இதையும் படிங்க : வட்டி மட்டும் ரூ.80,000.. அசத்தல் அம்சங்களுடன் கூடிய அஞ்சலக சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!

ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் ஜூன் 1 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஒவ்வொரு ஆண்டும் மே 31 தேதி அன்று இந்த திட்டத்திற்கான பணம் டெபிட் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காப்பீட்டு திட்டம் ஒரு வருடத்திற்கு மட்டும் இன்சூரன்ஸ் கவரேஜ் தரக்கூடியது என்பதால் பாலிசியை ஆண்டுதோறும் புதுபித்து கொள்ள வேண்டியது அவசியம்.

வயது வரம்பு மற்றும் ஆவணங்கள்

இந்த திட்டத்தில் இணைய விரும்பும் நபர்கள் 18 வயது முதல் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த காப்பீட்டு திட்டத்தில் இணைய வங்கி கணக்குடன் ஆதார் எண்ணையும் இணைத்திருக்க வேண்டும். இல்லையெனில் உங்களால் இந்த திட்டத்தில் இணைந்து பயனடைய முடியாது.

இதையும் படிங்க : EPFO : பிஎஃப் உச்ச வரம்பை உயர்த்தும் மத்திய அரசு? ஊழியர்களுக்கு வெளியான முக்கிய தகவல்!

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News