MIS : எந்தவித உழைப்பும் இன்றி மாதம் ரூ.5,500 வருமானம்.. அசத்தல் அம்சங்களை வழங்கும் மாத வருமான திட்டம்! - Tamil News | You can get 5500 rupees monthly income by investing in this post office scheme | TV9 Tamil

MIS : எந்தவித உழைப்பும் இன்றி மாதம் ரூ.5,500 வருமானம்.. அசத்தல் அம்சங்களை வழங்கும் மாத வருமான திட்டம்!

Monthly Income Scheme | சேமிக்கும் எண்ணம் இருக்கும் பெரும்பாலான பொதுமக்களுக்கு எத்தகைய திட்டங்களில் முதலீடு செய்வது என்ற தெளிவு இல்லாமல் இருக்கும். அத்தகையவர்களுக்கு அரசின் இந்த அஞ்சலக சேமிப்பு திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

MIS : எந்தவித உழைப்பும் இன்றி மாதம் ரூ.5,500 வருமானம்.. அசத்தல் அம்சங்களை வழங்கும் மாத வருமான திட்டம்!

மாதிரி புகைப்படம்

Published: 

06 Nov 2024 12:57 PM

சேமிப்பு மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், நிதி பற்றாக்குறை, எதிர்பாராத நிதி தேவைகள் ஆகியவற்றை பூர்த்தி செய்துக்கொள்ள முடியும். சேமிக்கும் எண்ணம் இருக்கும் பெரும்பாலான பொதுமக்களுக்கு எத்தகைய திட்டங்களில் முதலீடு செய்வது என்ற தெளிவு இல்லாமல் இருக்கின்றனர். அத்தகையவர்களுக்கு அரசின் இந்த அஞ்சலக சேமிப்பு திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்திற்கு சிறந்த வட்டி வழங்கப்படுவது மட்டுமன்றி, இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும்.

இதையும் படிங்க : FD Interest Rate : 3 ஆண்டுகளுக்கான FD திட்டம்.. அதிக வட்டி வழங்கும் டாப் 5 வங்கிகள்.. லிஸ்ட் இதோ!

அஞ்சலக மாதாந்திர வருமானத் திட்டம்

அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டம் அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டத்தில் நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு முதலீடு செய்வதை போலவே மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு நீங்கள் மொத்தமாக முதலீடு செய்யும் தொகைக்கு, மாதாந்திர வருமானத் திட்டத்தில் மாதம் மாதம் வட்டியாக கிடைக்கும்.

இதையும் படிங்க : FD Scheme : 2 ஆண்டுகளுக்கான FD.. 8% வரை வட்டியை வாரி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!

மாதாந்திர வருமானத் திட்ட வட்டி கணக்கீடு

அரசின் இந்த மாதாந்திர வருமானத் திட்டத்தில் தனிநபர் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதுவே மாதந்திர வருமானத் திட்டத்தில் கூட்டு கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்றால் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த டெபாசி தொகைக்கு முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். நீங்கள் முதலீடு செய்யும் இந்த 5 ஆண்டுகளுக்கு வட்டி, மாதம் மாதம் வருமானமாக கிடைக்கும். ஒருவேளை முதலீட்டாளர்கள் திட்டத்தை நீடிக்க விரும்பினால் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்துக்கொள்ளும் வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : SIP – யில் ரூ.1கோடி கிடைக்க வேண்டுமா? மாதம் இவ்வளவு சேமித்தால் போதும்!

மாதாந்திர வருமானத் திட்டதின் வட்டி

அஞ்சல மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு ஆண்டுக்கு சுமார் 7.4 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் வட்டி விகிதம் நிலையானது அல்ல. அது காலாண்டுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும். ஆனால், தற்போதைய நிலவரத்தின் படி, கடந்த 2 காலாண்டுகளாக வட்டி விகிதத்தில் மாற்றம் இன்றி கணக்கிடப்படுகிறது. அதன்படி தற்போதைய வட்டி விகிதம் 7.4 சதவீதமாக உள்ளது.

இதையும் படிங்க : PPF : ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்.. ரூ.82 லட்சம் வருமானம் பெறலாம்.. இந்த PPF திட்டம் குறித்து கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

முதலீடு மற்றும் வருமானம்

தனிநபர் கணக்கு

இந்த திட்டத்தில் ஒரு தனிநபர் மொத்தமாக ரூ.9 லட்சம் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். மொத்த தொகைக்கு 7.4 சதவீதம் வட்டி கணக்கிடப்பட்டு மாதம் ரூ.5,500 வருமானமாக கிடைக்கும். அதன்படி, திட்டத்தின் முதிர்வு காலத்தில் மொத்தமாக ரூ.3.30,000 வட்டியாக மட்டும் கிடைக்கும்.

கூட்டு கணக்கு

இதுவே இரண்டு நபர்கள் கூட்டு கணக்கு தொடங்கி முதலீடு செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். கூட்டு கணக்கில் மொத்தமாக ரூ.15 லட்சம் முதலீடு செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். மொத்த தொகைக்கு 7.4 சதவீதம் வட்டி கணக்கிடப்பட்டு ரூ.9,250 வருமானம் கிடைக்கும். அதன்படி, திட்டத்தின் முதிர்வு காலத்தில் மொத்தமாக ரூ.5,55,000 வட்டியாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கிரெடிட் கார்டு மூலம் பங்குச் சந்தையில் முதலீடு.. எப்படி தெரியுமா? கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

குழந்தையை பொறுப்பான நபராக வளர்க்க எளிய டிப்ஸ்!
மன்னிப்பு கேட்கக்கூடாத 10 நிகழ்வுகள் என்னென்ன தெரியுமா?
கல்லீரல் பிரச்சனையா? இந்த அறிகுறிகளை கவனிங்க!
தேங்காயில் இருக்கும் மருத்துவ நன்மைகள்..