Post Office RD : ரூ.5,000 முதலீடு செய்தால் போதும்.. ரூ.8 லட்சம் பெறலாம்.. அசத்தும் அஞ்சலக RD திட்டம்!

Recurring Deposit | அஞ்சல தொடர் வைப்பு நிதி திட்டம் சிறந்த வட்டியுடன் கூடிய நல்ல பலனை தரும் திட்டமாக உள்ளது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் மாதம் ரூ.5,000 முதலீடு செய்வதன் மூலம் ரூ.8 லட்சம் வருமானமாக பெறலாம்.

Post Office RD : ரூ.5,000 முதலீடு செய்தால் போதும்.. ரூ.8 லட்சம் பெறலாம்.. அசத்தும் அஞ்சலக RD திட்டம்!

மாதிரி புகைப்படம்

Published: 

18 Nov 2024 19:54 PM

அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. காரணம், அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பது மட்டுமன்றி, அவற்றுக்கு அதிக வட்டியும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் இந்த அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். மிக குறைந்த அளவு முதலீட்டில் இருந்தே சேமிப்பை தொடங்கும் வாய்ப்பு வழங்கப்படுவதால், ஏழை, எளிய மக்கள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற முடியும். மாதம் ரூ.100 முதல் முதலீடு செய்ய அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் வாய்ப்பு வழங்குவதால், அது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த நிலையில், அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.8 லட்சம் வருமானம் ஈட்டுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Senior Citizen FD : மூத்த குடிமக்களுக்கான FD.. 8.75% வரை வட்டி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!

அஞ்சல தொடர் வைப்பு நிதி திட்டம் என்றால் என்ன?

அஞ்சலங்கள் மூலம் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் தொடர் வைப்பு திட்டம் (Recurring Deposit) ஆகும். இந்த ரெக்கரிங் டெபாசிட் திட்டம் RD என அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த அஞ்சல தொடர் வைப்பு திட்டத்திற்கு தற்போது 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாக உள்ள நிலையில், முதலீட்டாளர்கள் தங்களது தேவைக்கு வேண்டும் என்றால் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.

திட்டத்தின் குறைந்தபட்ச முதலீடு எவ்வளவு?

இந்த அஞ்சலக தொடர் வைப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.100 முதல் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. எனவே, முதலீடு செய்ய விரும்பும் நபர்கள் ரூ.100 முதல் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் குழந்தைகளின் பெயரில் கூட முதலீடு செய்யலாம். அதாவது, குழந்தைகளுக்கு, மைனர் அஞ்சலக தொடர் வைப்பு தொகை கணக்கை தொடங்கும் வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது. குழந்தைகளின் பெயரில் தொடங்கப்படும் இந்த மைனர் கணக்குகளை பெற்றோர்கள் நிர்வகிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : SSY Vs PPF : சுகன்யா சம்ரித்தி யோஜனா Vs பொது வருங்கால வைப்பு நிதி.. எது சிறந்த வட்டி வழங்குகிறது?

அஞ்சலக தொடர் வைப்பு நிதி திட்டத்தில் ரூ.8 லட்சம் பெறுவது எப்படி?

இந்த அஞ்சலக தொடர் வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். அதாவது, இந்த அஞ்சலக தொடர் வைப்பு நிதி திட்டத்தில் மாதம் ரூ.5,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன்படி, திட்டத்தின் முடிவில் ரூ.3 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகை வட்டியாக வழங்கப்படும். அதாவது நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு வட்டியாக ரூ.56,830 கிடைக்கும். அதன்படி, திட்டத்தின் முடிவில் முதலீடு செய்த தொகை மற்றும் வட்டி சேர்த்து ரூ.3,56,830 கிடைக்கும்.

இதையும் படிங்க : PAN Card : பான் கார்டுல இத பண்ணிடீங்களா?.. டிசம்பர் 31 தான் கடைசி தேதி.. மிஸ் பண்ணிடாதீங்க!

இந்த நிலையில், நீங்கள் திட்டத்தை மீண்டும் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானல் 10 ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.6 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். இந்த தொகைக்கு 10 ஆண்டுகளுக்கு வட்டியாக ரூ.2,54,272 கிடைக்கும். அதன்படி, திட்டத்தின் முடிவில் மொத்தமாக ரூ.8,54,272 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமரும் வேலையா?
ஒரு நாளைக்கு எத்தனை முறை சாப்பிட வேண்டும்?
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!