Air India : வெறும் ரூ.1,947-க்கு விமானத்தில் பயணிக்கலாம்.. ஃப்ரீடம் சேலை அறிவித்த ஏர் இந்தியா!
Flight Ticket | ஏர் இந்தியா நிறுவனம் தனது ஃப்ரீடம் சேலை அறிவித்துள்ளது. அதன்படி ரூ.1,947-க்கு விமான டிக்கெட்டை அறிவித்துள்ளது. இது உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கும் பொருந்தும். ஏர் இந்தியாவின் இந்த அசத்தலான சலுகையை பயன்படுத்திக்கொள்ள நினைப்பவர்கள், ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதள் மூலம் டிக்கெட்டுகளை முனபதிவு செய்துக்கொள்ளலாம்.
ஏர் இந்தியா சிறப்பு சலுகை : இந்தியாவில் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி, 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, ஏர் இந்தியா நிறுவனம் தனது ஃப்ரீடம் சேலை அறிவித்துள்ளது. அதன்படி ரூ.1,947-க்கு விமான டிக்கெட்டை அறிவித்துள்ளது. இது உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கும் பொருந்தும். ஏர் இந்தியாவின் இந்த அசத்தலான சலுகையை பயன்படுத்திக்கொள்ள நினைப்பவர்கள், ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதள் மூலம் டிக்கெட்டுகளை முனபதிவு செய்துக்கொள்ளலாம்.
ஃப்ரீடம் சேலின் சிறப்பு சலுகைகள் என்ன என்ன?
இந்த சலுகை மூலம் பயணிக்கும் பயணிகளுக்கு 3 கிலோ வரையிலான லக்கேஜ்களை எடுத்துச் செல்ல இலவச அனுமதி வழங்கப்படுகிறது. இதேபோல சுமார் 15 கிலோ வரையிலான லக்கேஜ்களுக்கு ரூ.1,000 தள்ளுபடியும், 20 கிலோ வரையிலான லக்கேஜ்களுக்கு ரூ.1,300 தள்ளுபடியும் வழங்குகிறது. ஏர் இந்தியாவின் இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் லாயல்டி மெம்பர்களுக்கு 8% NeuCoins வழங்கப்படும் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி பிரைம் இருக்கைகளுக்கு 47% தள்ளுபடியும், உணவு மற்றும் பானங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Amazon Freedom Festival : அதிரடி ஆஃபர்களுடன் வரப்போகும் அமேசான் ஃப்ரீடம் சேல்.. எப்போது தெரியுமா.. தேதிய குறிச்சு வச்சுக்கோங்க!
ஏர் இந்தியாவின் ஃப்ரீடம் சேலின் மற்ற சில சிறப்பு சலுகைகள்
ஏர் இந்தியாவில் இந்த சிறப்பு சலுகையில் மாணவர்கள், மூத்த குடிமக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ராணுவ வீரர்களுக்கு தனி சிறப்பு சலுகைகளும் உண்டு என்று தெரிவித்துள்ளது. அதன்படி எக்ஸ்பிரஸ் பிஸ் கட்டணங்கள், அனைத்து புதிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737-8 விமானங்களிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வணிக வகுப்புக்கு சமமானதாகும் எனப்து குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : New Rules : கேஸ் சிலிண்டர் முதல் ஃபாஸ்டேக் வரை.. ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வந்த புதிய நடைமுறைகள்!
ஏர் இந்தியா ஃப்ரீடம் சேலில் உள்ள நிபந்தனைகள் என்ன?
ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விமான டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள் கிடைக்கும். ஃப்ரீடம் சேல் மூலம், செப்டம்பர் 30 வரை பயிணிப்பதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஆகஸ் 5 ஆம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி, ஏர் இந்தியாவின் ஃப்ரீடம் சேல் மூலம் டெல்லி, ஜெய்பூர், பெங்களூரு, வழியாக செல்லும் 12 சர்வதேச விமானங்கள் மற்றும் 32 உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.