5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Mudra Loan : தொழில் தொடங்க வேண்டுமா? ரூ.10லட்சம் வரை கடன் வழங்கும் அரசு.. முழு விவரம் இதோ!

Loan Scheme | இந்தியாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தை தொடங்கி வைத்தார். பொதுமக்கள் தொழில் தொடங்குவதற்காக நிதி உதவி வழங்க தொடங்கப்பட்டது தான் இந்த திட்டம். இந்த திட்டத்தில் பொதுமக்களுக்கு ரூ.10,00,00 வரை தொழில் தொடங்குவதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. 

Mudra Loan : தொழில் தொடங்க வேண்டுமா? ரூ.10லட்சம் வரை கடன் வழங்கும் அரசு.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 24 Jul 2024 19:25 PM

கடன் உதவி வழங்கும் திட்டம் : பொருளாதாரம் மனிதர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. நிலையான பொருளாதாரம் இல்லாத மக்கள் கடும் நிதி நெருக்கடிகளுக்கு ஆளாகின்றனர். பொருளாதாரம் எந்த அளவிற்கு பாதுகாப்பாகவும், நிலையானதாகவும் இருக்கிறதோ அந்த அளவிற்கு எதிர்காலமும் சிறப்பாக இருக்கும். இந்த வகையில் தான் அரசாங்கமும் பல்வேறு சேமிப்பு திட்டங்கள், கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் பலன்கள் என்ன, யார் யார் பயன்பெறலாம் உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

ரூ.10லட்சம் வரை கடன் உதவி வழங்கும் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா

இந்தியாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தை தொடங்கி வைத்தார். பொதுமக்கள் தொழில் தொடங்குவதற்காக நிதி உதவி வழங்க தொடங்கப்பட்டது தான் இந்த திட்டம். இந்த திட்டத்தில் பொதுமக்களுக்கு ரூ.10,00,00 வரை தொழில் தொடங்குவதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

சாமானியர்களும் தொழில்முனைவோர் ஆகலாம்

வேலைவாயின்மை சதவீதத்தை குறைக்கவும், தனி நபர்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. அதுமட்டுமன்றி இந்த திட்டத்தின் மூலம் சாமானிய மக்களுக்கும் தொழில் முனைவோர் ஆகும் வாய்ப்பு வழங்கபப்டுகிறது. மேலும் சிறு, குறு வியாபாரிகள் தங்கள் தொழில்களை மேம்படுத்திக்கொள்ளவும் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இதையும் படிங்க : Ratan Tata : பட்ஜெட் எதிரொலி.. ஒரே நாளில் ரூ.19,000 கோடி அதிகரித்த டைட்டன் நிறுவன மதிப்பு!

இந்த திட்டத்தில் மொத்தம் 3 வகையாக கடன் உதவி வழங்கப்படுகிறது. அவை மூன்றும் வெவ்வேறு அம்சங்களை கொண்ட கடன் உதவி திட்டங்கள் ஆகும். இந்த 3 திட்டங்களில் ஒன்றுதான் சிஹு. இந்த திட்டத்தில் சுமார் ரூ.50,000 வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. அடுத்ததாக கிஷோர், இந்த திட்டத்தில் ரூ.50,000 முதல் ரூ.5,00,000 வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. மூன்றாவதாக தருண். இந்த திட்டத்தின் கீழ் ரூ.5,00,000 முதல் ரூ.10,00,000 வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. கடன் வாங்குபவர்களின் தொழில் மற்றும் தேவையை பொருத்து இந்த திட்டங்களில் ஏதேனும் ஒன்று வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடன் வாங்க உத்தரவாதம் தேவையில்லை

பொதுவாக நீங்கள், திருமணம், கல்வி, தொழில் ஏதேனும் ஒன்றுக்காக கடன் வாங்க வேண்டிய சூழல் இருந்தால் கடன் கொடுப்பவர்கள் அதற்கான உத்தரவாதம் இல்லாமல் கொடுக்க மாட்டார்கள். ஆனால் இந்த திட்டத்தில் அத்தகைய உத்தராவதங்கள் எதையும் நீங்கள் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. உங்களை குறித்த பொதுவான தகவல்கள் மற்றும் அதற்கான ஆதாரங்களை சமர்பித்தாலே போதுமானது.

இதையும் படிங்க : Post Office FD : வெறும் ரூ.5 லட்சம் முதலீடு செய்து ரூ.15,00,000 பெறலாம்.. அசத்தலான அஞ்சலக FD திட்டம்.. முழு விவரம் இதோ!

வங்கிகளில் முத்ரா கடன் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். அவற்றை நிரப்பி அவற்றுடன் தேவையான சான்றுகளை இணைத்து விண்ணப்பித்தால் போதும். கடனுக்கு விண்ணப்பித்த ஒரு மாததிலே உங்கள் கடனுக்கான பதில் கிடைத்துவிடும். உங்களுக்கு கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டால் விரைவில் உங்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் யாரெல்லாம் பயன்பெறலாம் ?

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகள் உட்பட யாரும் பயன்பெற முடியாது. காரணம் இந்த திட்டம் முற்றிலும் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கானவை. குறிப்பாக உற்பத்தி, வர்த்தகம், சேவைத் துறைகள், கோழிப்பண்ணை, பால் பண்ணை, தேனீ வளர்ப்பு போன்ற விவசாயம் தொடர்பான தொழிலுக்கு கடன் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : NPS Vatsalya : குழந்தைகளுக்கான புதிய சேமிப்பு திட்டம்.. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட என்.பி.எஸ் வாத்சல்யா என்றால் என்ன?

Latest News