PM-JAY : ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு.. மத்திய அரசின் அசத்தல் திட்டம்.. முழு விவரம் இதோ! - Tamil News | you can have up to 5 lakh medical coverage under Ayushman Bharat Yojana scheme | TV9 Tamil

PM-JAY : ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு.. மத்திய அரசின் அசத்தல் திட்டம்.. முழு விவரம் இதோ!

Ayushman Bharat Yojana Scheme | ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ரூ.8,000 கோடிக்கும் மேல் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அதன்படி ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தில் மொத்தம் 1354 சிகிச்சைகளுக்கு இலவசமாக செகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

PM-JAY : ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு.. மத்திய அரசின் அசத்தல் திட்டம்.. முழு விவரம் இதோ!

மாதிரி புகைப்படம்

Updated On: 

10 Jul 2024 15:27 PM

ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் : பொதுமக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டங்களில் அரசு அதிக வட்டி வழங்குவது மட்டுமன்றி அவை பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களாகவும் உள்ளது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீட்டை பெறலாம். ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் என்றால் என்ன, இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பது மற்றும் அதன் பலன்கள் என்ன அன்பதை விரிவாக பார்க்கலாம்.

ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் என்றால் என்ன?

ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ரூ.8,000 கோடிக்கும் மேல் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. தமிழக அரசு வழங்கும் முதல்வர் காப்பீட்டு திட்டத்திற்கும் இந்த திட்டத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அதன்படி ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தில் மொத்தம் 1354 சிகிச்சைகளுக்கு இலவசமாக செகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

எந்த எந்த பிரச்னைகளுக்கு இலவசமாக சிகிச்சை பெறலாம்?

ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் மூலம் இதய அறுவை சிகிச்சை, பல் தொடர்பான பிர்சனைகள் உள்ளிட்ட பலவேறு பிரச்னைகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

எந்த எந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்?

இந்த திட்டத்தில் மொத்தம் 17,000 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதேபோல இந்தியாவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளிலும், 600-க்கும் மெற்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் இந்த சேவையை பெறலாம்.

இதையும் படிங்க : EPFO : தமிழில் யுடியூப் சேனலை தொடங்கிய EPFO.. பயனர்களின் சந்தேகங்களை தீர்க்க புதிய முயற்சி!

ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி

helathid.ndhm.gov.in என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம், ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளத்திற்கு சென்று create ABHA number என இருக்கும் இடத்தில் உங்கள் ஆதார் அல்லது டிரைவிங் லைசன்ஸ் விவரங்களை ஆதாரமாக கொடுத்து விண்ணப்பிக்கலாம். அவ்வாறு நீங்கள் விண்ணப்பிக்கும்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு ஒடிபி வரும். அதை பதிவிட்டு உங்களது மருத்துவ காப்பீட்டு அட்டையை பதிவிரக்கம் செய்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : Scam : உஷார்.. SBI ரிவார்டு பாய்ண்ட்ஸ் மோசடி.. பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கும் காவல்துறை!

(Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.)

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!