PF : மருத்துவ செலவுக்கு PF பணத்தை பெறலாமா?.. எவ்வளவு தொகை பெறலாம்?.. விதிகள் கூறுவது என்ன? - Tamil News | You can money from your provident account for medical treatment follow these steps to avail it | TV9 Tamil

PF : மருத்துவ செலவுக்கு PF பணத்தை பெறலாமா?.. எவ்வளவு தொகை பெறலாம்?.. விதிகள் கூறுவது என்ன?

Published: 

23 Aug 2024 11:31 AM

Provident Fund | ஊழியர் வருங்கால வைப்புநிதியில் இருந்து, பயனர்கள் தங்களின் திருமணம், மருத்துவம், வீடு கட்டுதல், வீட்டு கடன் உள்ளிட்ட தேவைகளுக்கான பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது. இந்நிலையில், ஊழியர் வருங்கால வைப்புநிதியில் இருந்து மருத்துவ செலவுக்காக முன்கூட்டியே பணத்தை பெறுவது எப்படி என விரிவாக பார்க்கலாம். 

PF : மருத்துவ செலவுக்கு PF பணத்தை பெறலாமா?.. எவ்வளவு தொகை பெறலாம்?.. விதிகள் கூறுவது என்ன?

மாதிரி புகைப்படம்

Follow Us On

ஊழியர் வருங்கால வைப்புநிதி : இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஊழியர்களுக்கும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அவ்வாறு மாதம், மாதம் பிடித்தம் செய்யப்படும் பணம், ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். ஊழியர்கள் இந்த பணத்தை தங்களது தேவைகளுக்கான பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருவேளை ஊழியர் தனது பணிக்காலம் முழுவதும் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவில்லை என்றால், பணி ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியமாகவும் பெற்றுக்கொள்ளலாம். ஊழியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : Post Office Scheme : மாதம் ரூ.20,500 வரை வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!

ஊழியர் வருங்கால வைப்புநிதியில் இருந்து மருத்துவ செலவுக்காக பணத்தை பெறுவது எப்படி?

ஊழியர் வருங்கால வைப்புநிதியில் இருந்து, பயனர்கள் தங்களின் திருமணம், மருத்துவம், வீடு கட்டுதல், வீட்டு கடன் உள்ளிட்ட தேவைகளுக்கான பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது. இந்நிலையில், ஊழியர் வருங்கால வைப்புநிதியில் இருந்து மருத்துவ செலவுக்காக முன்கூட்டியே பணத்தை பெறுவது எப்படி என விரிவாக பார்க்கலாம்.

ஊழியர் வருங்கால வைப்புநிதியில் இருந்து பணத்தை பெற என்ன செய்ய வேண்டும்?

  1. அதற்கு முதலில் ஊழியர் வருங்கால வைப்புநிதியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அங்கு UAN, கடவுச் சொல் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட்ட லாக் இன் செய்ய வேண்டும்.
  3. பிறகு உங்கள் வங்கி கணக்கு விவரங்களை பதிவிட வேண்டும்.
  4. பிறகு விதிமுறைகள் மற்றும் நிபந்தனை பெட்டியை கிளிக் செய்ய வேண்டும்.
  5. அதன் பிறகு Online Service என்பதை கிளிக் செய்து, நோய்க்கான உரிமைக் கோரல் படிவம் 31-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
  6. அதற்கு பிறகு Proceed for Online Claim என்பதை கிளிக் செய்யவும்.
  7. ஒருவேளை நீங்கள் சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தால், 45 நாட்களுக்குள் மருத்துவ கட்டணங்கள் குறித்த பில்லை ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைச்சகத்தில் சமர்பிக்க வேண்டும்.
  8. உங்கள் விண்ணப்பம் ஏற்கப்ப்பட்ட ஒரு சில நாட்களுக்கு பிறகு உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் வந்து சேர்ந்துவிடும்.

இதையும் படிங்க : Fixed Deposit : மூத்த குடிமக்களுக்கான FD.. 9.5% வரை வட்டியை வாரி வழங்கும் சிறு நிதி நிறுவனங்கள்.. முழு விவரம் இதோ!

எனவே மேற்காணும் நடைமுறைகளை பின்பற்றி மருத்துவ செலவுக்காக ஊழியர் வருங்கால வைப்புநிதியில் இருந்து நீங்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சியா விதையில் இவ்வளவு ஆபத்துகள் உள்ளதா?
மாதுளை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
உடலுக்கு நீர்ச்சத்துடன் நார்ச்சத்தை வழங்கும் முள்ளங்கி.. பலன்கள் ஏராளம்..!
சர்வதேச கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை எப்படி..?
Exit mobile version