5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

EPFO : திருமணத்திற்காக பிஎஃப் கணக்கிலிருந்து எவ்வளவு பணம் எடுக்கலாம்?.. விதிகளை தெரிந்துக்கொள்ளுங்கள்!

PF Withdrawal | ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் சட்டத்தின்படி 3 சூழல்களில் பணத்தை திரும்ப பெறலாம். அதுமட்டுமன்றி சில குறிப்பிட்ட தேவைகளுக்காகவும் பணத்தை திரும்ப பெறலாம். அதன்படி, ஊழியர்கள் தங்களின் திருமணத்திற்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களின் திருமணத்திற்காகவே ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

EPFO : திருமணத்திற்காக பிஎஃப் கணக்கிலிருந்து எவ்வளவு பணம் எடுக்கலாம்?.. விதிகளை தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Follow Us
intern
Tamil TV9 | Published: 03 Jul 2024 10:11 AM

பிஎஃப் பணம் : தனியார் அல்லது அரசு நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் வேலையில் சேர்ந்தது முதலே அவர்களது வங்கி கணக்கில் இருந்து பிஎஃப் திட்டத்தின் கீழ் ஊதியத்தின் ஒரு பகுதி பிடித்தம் செய்யப்பட்டு பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் இந்த பணத்தை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தால், ஓய்வூதியத்தின் போது வட்டியுடன் திரும்ப பெறலாம். சிலருக்கு ஓய்வுக்கு முன்பு அந்த பணம் தேவைப்படலாம். ஆனால் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை (EPFO) சில சூழல்களில் மட்டுமே எடுக்க முடியும். EPFO-ன் விதிகளின் படி வெறும் 3 காரணங்களுக்காக மட்டுமே ஊழியர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியும்.

ஊழியர்கள் இந்த 3 சூழல்களில் மட்டுமே பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்கலாம்

1. நீங்கள் 58 வயதை நிறைவு செய்துவிட்டால் உங்கள் பணத்தை வட்டியுடன் திரும்ப பெறலாம்.

2. வேலை செய்துக்கொண்டிருந்த ஒரு நபர் 2 மாதங்களாக வேலை இல்லாமல் இருந்தால் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை திரும்ப பெறலாம்.

3. பணிபுரிபவர் ஓய்வு பெறும் வயதிற்கு முன் இறந்துவிட்டால் பிஎஃப் பணத்தை திரும்ப பெறலாம்.

இதை தவிர ஒரு ஊழியர் தனது சில முக்கிய தேவைகளுக்காக பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை திரும்ப பெறலாம். ஆனால் அதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. அதை பின்பற்றினால் மட்டுமே பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை திரும்ப பெற முடியும்.

திருமணத்திற்காக பிஎஃப் பணத்தை திரும்ப பெறலாம்

பணியாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ், ஊழியர்கள் தங்கள் திருமண செலவுக்காக பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை திரும்ப பெறலாம். இருப்பினும் இதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதன்படி நிபந்தனைகளின் கீழே பணத்தை திரும்ப பெற முடியும்.

இதையும் படிங்க : UPI Transaction : ஒரே ஆண்டில் 49% உயர்ந்த UPI பண பரிவர்த்தனை.. டிஜிட்டல் பரிவர்த்தனையில் முன்னிலை வகிக்கும் இந்தியா!

பிஎஃப் பணத்தை திரும்ப பெறுவதற்கான காலக்கெடு

திருமணத்திற்காக பிஎஃப் பணத்தை திரும்ப பெற வேண்டும் என நினைப்பவர்கள் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். திருமணமான நபர்கள் திருமணத்திற்காக பிஎஃப் தொகையை திரும்ப பெற முடியாது. பிஎஃப்-ல் வட்டி உட்பட ஊழியரின் பங்களிப்பில் இருந்து வெறும் 50% மட்டுமே ஒருவர் திரும்ப பெற முடியும்.

இதையும் படிங்க : EPS : ஊழியர் ஓய்வூதிய திட்டம்.. அதிரடி மாற்றத்தை செய்த மத்திய அரசு.. என்ன தெரியுமா?

ஊழியர்கள் தங்கள் திருமணத்துக்காக பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்ற விதி அனைவருக்கும் தெரியும். இதேபோல ஊழியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள், உடன் பிறந்தவர்கள் மற்றும் பிள்ளைகளின் திருமணத்திற்காகவும் பணத்தை திரும்ப பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.