Post Office RD : அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட்.. ரூ.2,000 முதலீட்டுக்கு கொட்டும் லாபம்.. முழு விவரம் இதோ!
Recurring Deposit | எந்த சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது என தெரியாமல் மக்கள் குழம்புகின்றனர். அத்தகைய குழப்பமான மனநிலை கொண்ட மக்களுக்கான ஒரு சிறந்த திட்டம் தான் இந்த அஞ்சலக RD (Recurring Deposit) திட்டம் ஆகும். அதில் ரூ.2,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
பொதுமக்கள் நிலையான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை பெறுவதற்காக பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் தொடர் வைப்பு நிதி திட்டம். இது Recurring Deposit அல்லது RD என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலம் திட்டத்தின் முடிவில் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த தொடர் வைப்பு நிதி சேமிப்பு திட்டம் வங்கிகளில் செயல்படுத்தப்படுவது மட்டுமன்றி, அஞ்சலங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டங்களுக்கு சிறந்த வட்டியும் வழங்கப்படுவதால் பொதுமக்கள் சேமிக்க இது சிறந்த திட்டமாக இருக்கும்.
இதையும் படிங்க : Fixed Deposit : 9.5% வட்டி வழங்கும் புதிய Super FD திட்டம் தொடக்கம்.. சிறப்பு அம்சங்கள் என்ன?
பொருளாதார நிலைத்தன்மைக்கு சேமிப்பு ஏன் அவசியம்
நிதி தேவைகளுக்காக பொதும்மக்கள் வேலை அல்லது தொழில் செய்கின்றனர். அவ்வாறு சம்பாதிக்கும் பணத்தை தங்களது தேவைகள் மற்றும் மகிழ்ச்சிக்காக பயன்படுத்துகின்றனர். இந்த சூழலில் பெரும்பாலான மக்கள் சேமிக்க மறந்துவிடுகின்றனர். சேமிப்பு இல்லை என்றால் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி சிக்கல்களை சமாளிக்க முடியாமல் போய்விடும். இந்த நிலையில்தான் சேமிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால், எந்த சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது என தெரியாமல் மக்கள் குழம்புகின்றனர். அத்தகைய குழப்பமான மனநிலை கொண்ட மக்களுக்கான ஒரு சிறந்த திட்டம் தான் இந்த அஞ்சலக RD (Recurring Deposit) திட்டம் ஆகும். அதில் ரூ.2,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
RD திட்டத்தில் ரூ.2,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
இந்த அஞ்சலக தொடர் வைப்பு நிதி திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. சிறந்த வட்டி மட்டுமன்றி, அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால் இது மிகவும் பாதுகாப்பான திட்டமாகவும் கருதப்படுகிறது. இந்த நிலையில், இந்த தொடர் வைப்பு நிதி திட்டத்தில் நீங்கள் மாதம் ரூ.2,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறு மாதம் முதலீடு செய்தால் ஆண்டுக்கு ரூ.24,000 முதலீடு செய்திருப்பீர்கள். அஞ்சல தொடர் வைப்பு நிதி திட்டத்தின் முதிர்வு காலம் மொத்த 5 ஆண்டுகள் ஆகும். இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.2,000 முதலீடு செய்தால் திட்டத்தின் முடிவில் சுமார் ரூ.1,20,000 முதலீடு செய்திருப்பீர்கள்.
இதையும் படிங்க : Government Scheme : வீடு கட்ட ரூ.3,50,000 தரும் தமிழக அரசு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இதோ!
அஞ்சலக RD-க்கு வட்டி எவ்வாறு கணக்கிடப்படும்?
அரசு செயல்படுத்தும் இந்த அஞ்சலக தொடர் வைப்பு நிதி திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், மாதம் ரூ.2,000 என முதலீடு செய்யும் பட்சத்தில் 5 ஆண்டுகளில் ரூ.1,20,000 முதலீடு செய்திருப்பீர்கள். இந்த மொத்த தொகைக்கு 6.7 சதவீதம் வட்டி கணக்கிடப்பட்டு ரூ.22,732 வட்டியாக வழங்கப்படும். அதன்படி, திட்டத்தின் முடிவில் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.1,20,000 மற்றும் அதற்கான வட்டி ரூ.22,732 மொத்த சேர்த்து ரூ.1,42,732 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : SBI FD : மூத்த குடிமக்களுக்கான 1 ஆண்டுகக்கான FD.. ரூ.7,14 மற்றும் ரூ.21 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.