5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Zomato CEO : டெலிவரி ஊழியர்களை இழிவுபடுத்திய மால் நிர்வாகம்.. சொமேட்டோ CEO செய்த செயலால் அதிரடி நடவடிக்கை!

Apps | மனிதர்களின் அன்றாட வாழ்வில் ஸ்விக்கி, சொமோட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி நிறுவனங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன. உணவு சமைக்கும் நேரத்தையும், அதை கடைக்கு சென்று வாங்கும் நேரத்தையும் மிச்சம் செய்யும் நோக்கத்தில் இந்த உணவு டெலிவரி ஆப்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

Zomato CEO : டெலிவரி ஊழியர்களை இழிவுபடுத்திய மால் நிர்வாகம்.. சொமேட்டோ CEO செய்த செயலால் அதிரடி நடவடிக்கை!
வைரல் வீடியோ
vinalin
Vinalin Sweety | Updated On: 08 Oct 2024 15:55 PM

தனது நிறுவனத்தின் ஊழியர்கள் பணியின்போது சந்திக்கும் சிரமங்களை தெரிந்துக்கொள்ள, சொமேட்டோ சிஇஓ எடுத்த முயற்சி தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. ஊழியர்களுக்காக ஒரு நிறுவனத்தின் சிஇஓ இத்தனை முயற்சிகளை செய்வாரா என பலரும் ஆச்சர்யத்தில் திகைத்துள்ளனர். மேலும் சிலர், இதுதான் உண்மையான தலைமை பன்பு, ஒவ்வொரு நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும், தங்களது ஊழியர்கள் மீது இத்தகைய அக்கறை செலுத்த வேண்டும் என்று அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த நிலையி, சொமேட்டோ சிஇஓ என்ன செய்தார், அது ஏன் பேசுபொருளாக மாறியது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Crude Oil Price : அதிரடியாக விலை உயர்ந்த கச்சா எண்ணெய்.. பெட்ரோல், டீசல் விலையும் உயருமா?.. நிபுணர்கள் கூறுவது என்ன?

உணவு டெலிவரி ஊழியர்களின் தினசரி சிக்கல்கள்

மனிதர்களின் அன்றாட வாழ்வில் ஸ்விக்கி, சொமோட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி நிறுவனங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன. உணவு சமைக்கும் நேரத்தையும், அதை கடைக்கு சென்று வாங்கும் நேரத்தையும் மிச்சம் செய்யும் நோக்கத்தில் இந்த உணவு டெலிவரி ஆப்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் இந்த செயலிகள் மூலம் பயனடைந்து வருகின்றனர். வீடு, அலுவலகம், கடைகள் என அனைத்து இடங்களிலும் உணவு டெலிவரி செய்யப்படுவதால் அது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இவ்வாறு பொதுமக்களின் தேவைக்காக எங்கு வேண்டுமானாலும் சென்று உணவு டெலிவரி ஊழியர்கள் சந்திக்கும் பிரச்னைகளும் ஏராளமாக உள்ளன.

இதையும் படிங்க : PM Kisaan: பிஎம் கிசான் திட்டம்.. உங்க அக்கவுண்டுக்கு ரூ.2000 வந்துதா? வரலனா இதை பண்ணுங்க

இந்த நிலையில்தான், சோமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ கோயல், தங்களது ஊழியர்கள் தினசரி எந்த மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர் எனபதை தெரிந்துக்கொள்வதற்காக ஒரு நாள் டெலிவரி பாயாக பணியாற்றியுள்ளார். அவர் தனது மனைவி கிரேசியாவுடன் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு நடந்த அனுபத்தை வீடியோவாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அது குறித்து அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், ஒரு நாள் டெலிவரி பாயாக பணியாற்றிய போது எனது இரண்டாவது டெலிவரியில் எனக்கு நடந்தது இதுதான். ஆம்பியன்ஸ் மாலில் உள்ள ஹல்திரம்ஸ் கடையில் இருந்து ஆர்டரை வாங்க சென்றோம். ஆனால் அவர்கள் என்னை வேறு வழியில் வரச் சொன்னார்கள். பிறகு தான் தெரிந்தது அவர்கள் என்னை படி வழியே செல்ல சொன்னார்கள் என்று. அவர்கள் டெலிவரி ஊழியர்களை லிஃப்ட் பயன்படுத்த அனுமதிப்பதில்லையா என்பதை சோதிக்க மீண்டும் முன்வாசல் வழியே சென்றேன். பிறகு படி வழியாக ஏறி 3வது மாடிக்கு சென்றேன். அங்கு சில டெல்லிவரி ஊழியர்கள் தரையில் அமர்ந்துக்கொண்டிருந்தனர். டெலிவரி ஊழியர்களை உள்ளே அனுமதிப்பதில்லை என்று அப்போதுதான் புரிந்தது. எனது உணவு தயாராகும் வரை அங்கிருந்த ஊழியர்களுடன் உரையாடிக்கொண்டு இருந்தேன். பிறகு எனது ஆர்டருக்கான உணவு வந்தது என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : Viral Video : குழந்தையின் கையிலிருந்த போனை திருடிய நபர்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மால் நிற்வாகங்கள் சற்று மனிதனேயத்தோடு நடந்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். சொமோட்டோ சிஇஓவின் இந்த பதிவிற்கு பதில் அளித்துள்ள ஆம்பியன்ஸ் மால் உரிமையாளர் அர்ஜுன், டெலிவரி ஊழியர்கள் எந்தவித சிரமமும் இன்றி உணவை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளதாகவும் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News