10ஆம் வகுப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
10th Supplementary Exam: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வு தேதிகள் வெளியாகி உள்ளன.
10ஆம் வகுப்பு துணைத்தேர்வு:
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இந்த தேர்வில் 8.18 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், 75,521 மாணவர்கள் தோல்வி அடைந்தனர். இந்த நிலையில், 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தேர்வு எழுதாத மாணவர்களுக்கான துணைத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுக்கு மாணவர்கள் மே 16ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் தேதி:
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்கள் அவரவர் பள்ளிகளுக்கு நேரில் சென்று மே 16ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும், பத்தாம் வகுப்பு துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்வர்களும் மே 16ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
Also Read : வரும் நாட்களில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு… எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் அலெர்ட் இதோ!
குறிப்பிட்ட நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு செய்தல் குறித்த விவரங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளைhttp://www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
துணைத்தேர்வு அட்டவணை:
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 2ஆம் தேதி தேர்வு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 2ஆம் தேதி தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள், ஜூலை 3ஆம் தேதி ஆங்கிலம், ஜூலை 4ஆம் தேதி கணக்குப்பாடம், ஜூலை 5ஆம் தேதி அறிவியல், ஜூன் 8ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு http://www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
Also Read : 10ம் வகுப்பு பொதுத்தேர்வு.. மறுகூட்டல், மறுதேர்வு விவரங்கள்!