+2 பொதுத்தேர்வு கட்டணம்.. செலுத்துவது எப்படி? யாருக்கு விலக்கு? வெளியான முக்கிய அறிவிப்பு!

2024-25ஆம் கல்வியாண்டில் பொதுத் தேர்வு எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தை இணைய வழியில் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

+2 பொதுத்தேர்வு கட்டணம்.. செலுத்துவது எப்படி? யாருக்கு விலக்கு? வெளியான முக்கிய அறிவிப்பு!

மாணவர்கள்

Updated On: 

18 Nov 2024 10:11 AM

2024-25ஆம் கல்வியாண்டில் பொதுத் தேர்வு எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தை இணைய வழியில் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் அரசுக்கு செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

+2 பொதுத்தேர்வு கட்டணம் அறிவிப்பு

அதன்படி, நிகழ் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தேர்வுக் கட்டணமாக செய்முறைத் தேர்வு அடங்கிய பாடத் தொகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.225, செய்முறைத் தேர்வு இல்லாத பாடத் தொகுப்பில் பயிலும் மாணவர்களுக்க ரூ.175 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வு எழுதும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல், பழங்குடி, பட்டியலின, பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகிய பிரிவினருக்கும், பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கும் மிகால் இருக்கும் பிசி, பிசி (இஸ்லாமிய) பிரிவினருக்கும், பார்வை மற்றும் செவித் திறன் குறைந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

Also Read : தொடர் கனமழை.. தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..

இதர அனைவரிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தை என்ற இணையதளம் மூலம் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் செலுத்துமாறு தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். 11ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கான தேர்வு கட்டணத் தொகையையும் இணையதளத்தில் வரும் நவம்பர் 20ஆம் தேதி முதல் செலுத்தலாம்.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அடங்கிய அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்வதற்காக அனைத்து பள்ளிகளும் ரூ.300 செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?

2024 – 2025ஆம் ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரையும் செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளது.

அதன்படி, மார்ச் 3ஆம் தேதி தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள் தேர்வும், மார்ச் 6ஆம் தேதி ஆங்கிலம் பாடம் தேர்வும், மார்ச் 11ஆம் தேதி கணிதம், உயிரி- விலங்கியல், வணிகம், வேளாண் அறிவியல், நுன்னணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, உணவு சேவை மேலாண்மை, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, செவிலியர் (பொது) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Also Read : ஸ்டெர்லைட் ஆலை நிரந்தர மூடல்.. மறுஆய்வு மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன?

மார்ச் 14ஆம் தேதி கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம் நெறிமுறைகள் மற்றும் இந்தியன் கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், அரசியல் அறிவியில், புள்ளியியல் நர்சிங் (தொழில்முறை) தேர்வுகள் நடைபெற உள்ளது.

மேலும், மார்ச் 18ஆம் தேதி உயரியல், தாவரவியல், வரலாறு, கணிதம், புள்ளியியல், அடிப்படை சிவில் பொறியியல் தேர்வுகள் நடைபெற உள்ளது. மார்ச் 21ஆம் தேதி வேதியில், கணக்கியல், புவியியல் தேர்வுகளும், மார்ச் 27ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், வேலை வாய்ப்புத்திறன் தேர்வுகளும் நடைபெற உள்ளது.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.13,000 தள்ளுபடி!
புடவையில் சொக்க வைக்கும் நடிகை அஞ்சலி