5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

அசத்தும் தமிழக கல்வித்துறை.. ‘நான் முதல்வன்’ திட்டத்தில் லண்டன் சென்ற மாணவர்கள்!

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சென்னையில் இருந்து சிறப்பு பயிற்சிக்காக 25 கல்லூரி மாணவர்கள் லண்டனுக்கு சென்றுள்ளனர். அதாவது, தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், லண்டனில் நடைபெறும் சிறப்பு பயிற்சி திட்டத்திற்கு, தமிழகத்தைச் சேர்ந்த 25 கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டனுக்கு புறப்பட்டு சென்றனர். இவர்கள் நியூகேஸில் பல்கலைக்கழகத்தில் ஒருவாரம் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் மற்றும் பிற அதிநவீன தொழில்நுட்பங்கள் பற்றி நியூகேஸ் பல்கலைக்கழகத்தில் பயிற்சி மேற்கொள்கின்றனர்.

அசத்தும் தமிழக கல்வித்துறை.. ‘நான் முதல்வன்’ திட்டத்தில் லண்டன் சென்ற மாணவர்கள்!
நாம் முதல்வன் திட்டம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 10 Jun 2024 09:53 AM

நான் முதல்வன் திட்டம்:  தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சென்னையில் இருந்து சிறப்பு பயிற்சிக்காக 25 கல்லூரி மாணவர்கள் லண்டனுக்கு சென்றுள்ளனர். தமிழ்நாடு அரசு மாணவர்களுக்காக கொண்டு வரப்பட்ட சிறப்பு திட்டங்களில் ஒன்று ’நான் முதல்வன் திட்டம்’. இந்த திட்டம் மாணவர்களிடையே  பெரும் வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து,   பல்வேறு திட்டங்களை இதில் அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சிகள் நடத்து திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது. இந்த நிலையில்,  நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சென்னையில் இருந்து சிறப்பு பயிற்சிக்காக 25 கல்லூரி மாணவர்கள் லண்டனுக்கு சென்றுள்ளனர். அதாவது, தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், லண்டனில் நடைபெறும் சிறப்பு பயிற்சி திட்டத்திற்கு, தமிழகத்தைச் சேர்ந்த 25 கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Also Read: சென்னையில் பார்க்கிங் இலவசம்… மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியிட்ட மாநகராட்சி..!

லண்டன் சென்ற 25 மாணவர்கள்:

இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டனுக்கு புறப்பட்டு சென்றனர். இவர்கள் நியூகேஸ் பல்கலைக்கழகத்தில் ஒருவாரம் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் மற்றும் பிற அதிநவீன தொழில்நுட்பங்கள் பற்றி நியூகேஸ் பல்கலைக்கழகத்தில் பயிற்சி மேற்கொள்கின்றனர். தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பயிற்சியை அளிப்பதையும், அவர்களை வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் முனைவோராக மாறுவதற்கும் இந்த திட்டம் நோக்கமாக உள்ளது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக 25 மாணவர்கள் லண்டனில் பயிற்சி பெற உள்ளனர்.

இந்த திட்டத்திற்கு 1,267 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், இறுதியாக 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வெளிநாட்டில் பயிற்சி மேற்கொள்கின்றனர். எழுத்துத் தேர்வு, நேர்காணல் என பல கட்டத்திற்கு பிறகு 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் கடந்த ஞாயிற்றுகிழமை சென்னையில் இருந்து இரண்டு ஆசிரியர்களுடன் லண்டனுக்கு சென்றனர். இந்த பயிற்சி திட்டம் ஜூன் 16ஆம் தேதி முடிவடைகிறது. மாணவர்கள் ஜூன் 17ஆம் தேதி சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “சிறகுகள் விரியட்டும்..மகிழ்ச்சி” என குறிப்பிட்டுள்ளார்.

Also Read: முடிந்தது கோடை விடுமுறை… தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு!