தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான முக்கிய தகவல்! - Tamil News | | TV9 Tamil

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான முக்கிய தகவல்!

Updated On: 

20 May 2024 11:54 AM

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு ஜூன் 2வது வாரத்திற்கு தள்ளிபோகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 27ஆம் தேதி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆலோசனைக்கு பிறகு பள்ளி திறப்பு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான முக்கிய தகவல்!

மாணவர்கள்

Follow Us On

பள்ளிகள் திறப்பு எப்போது? தமிழ்நாட்டில் 10,12,11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வும், ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடந்தது. 1 முதல் 3ஆம் தேதி வகுப்பு வரை ஏப்ரல் 2 முதல் 5ஆம் தேதி வரையும், ஏப்ரல் 2 முதல் 23ஆம் தேதி வரை 4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. இதன்பிறகு, ஏப்ரல் 24ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறுவதால் முன்கூட்டியே கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனை அடுத்து பள்ளிகள் திறப்பு எப்போது என்று மாணவர்கள் மத்தியில் கேள்வி எழுந்ததுள்ளது. பொதுவாக கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால், இந்த முறை ஜூன் 4ஆம் தேதி மக்களை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இதனால், பள்ளி திறப்பு ஜூன் 2வது வாரத்திற்கு தள்ளிபோகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Also Read : சாலையோரம் இருந்த மக்கள் மீது ஆசிட் வீச்சு.. இரவில் சென்னையை உலுக்கிய கொடூர சம்பவம்!

ஆலோசனை:

இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை. இந்த நிலையில், கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 27ஆம் தேதி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆலோசனைக்கு பிறகு பள்ளி திறப்பு தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “இந்த மாத தொடக்கத்தில் கோடை வெயில் அதிகமாக இருந்தால். இதனால், ஜூன் 2வது வாரத்தில் பள்ளிகள் திறக்கலாம் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால், வெயில் தணிந்து தற்போது மழை பெய்து வருகிறது. மேலும், ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகுகிறது. எனவே, ஜூன் 4ஆம் தேதிக்கு அடுத்த நாள் பள்ளிகளை திறக்க பரிசீலித்து வருகிறோம். இருப்பினும் வரும் 27ஆம் தேதி பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பள்ளி திறப்பு முடிவு இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும்” என்றனர்.

Also Read : Tamilnadu Weather: 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்… கவனம் மக்களே.. வானிலை மையம் எச்சரிக்கை!

Related Stories
TNPSC Group 2 Result: குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது தெரியுமா? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
School Leave: அப்படி போடு.. மாணவர்களுக்கு குஷியான நியூஸ்.. காலாண்டு விடுமுறை நீடிப்பு.. வெளியான அறிவிப்பு..
TNPSC Exam: குரூப் 2, 2ஏ தேர்வு எழுதியிருக்கீங்களா? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. உடனே பாருங்க!
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வு மதிப்பீட்டில் புதிய மாற்றம்.. விடைத்தாள்கள் தனித்தனியே மதிப்பீடு செய்ய முடிவு..!
பள்ளியில் மாணவிக்கு வளைகாப்பு… வெளியான ரீல்ஸ்.. ஆசிரியருக்கு பறந்த அதிரடி உத்தரவு!
TN Goverment: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை இருமடங்கு உயர்வு.. யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா?
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version