போலியாக பேராசிரியர் கணக்கு காட்டிய கல்லூரிகள்.. இரண்டு நாட்களில் நடவடிக்கை – அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி.. - Tamil News | anna university has mentioned that action will be taken in two days against the colleges for forging professor | TV9 Tamil

போலியாக பேராசிரியர் கணக்கு காட்டிய கல்லூரிகள்.. இரண்டு நாட்களில் நடவடிக்கை – அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி..

Published: 

06 Aug 2024 08:59 AM

இதற்கிடையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தனியார் அமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணையில் பேராசிரியர்கள் போலியாக பணியில் சேர்ந்ததை கண்டுபிடித்தோம். அந்த தனியார் அமைப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். இந்த மோசடியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மற்றும் தொடர்புடைய கல்லூரிகளிடமும் விளக்கம் கேட்டுள்ளோம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறியுள்ளார்.

போலியாக பேராசிரியர் கணக்கு காட்டிய கல்லூரிகள்.. இரண்டு நாட்களில் நடவடிக்கை - அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி..

மாதிரி புகைப்படம்

Follow Us On

அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் முறைகேடு: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஆதார் எண்ணை முறைகேடாக பயன்படுத்தி பேராசிரியர்கள் சிலர், பல கல்லூரிகளில் பணியாற்றியது வெட்டா வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முதலில் 189 பேராசிரியர்கள் இதுபோல் முறைகேட்டில் ஈடுபட்டதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் தற்போது அந்த எண்ணிக்கை சுமார் 800-ஐ தொட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதுபற்றிய அதிகார்ப்பூர்வமான தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்க அரசு சார்பிலும், பல்கலைக்கழகம் சார்பிலும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் சார்பிலும் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: பங்குச்சந்தையில் கடும் சரிவை சந்தித்த டிசிஎஸ் நிறுவனம்.. 5 நாட்களில் ரூ.37,971 கோடி நஷ்டம்!

இந்த குழுவினர் முறைகேட்டில் ஈடுபட்டதாக சொல்லப்படும் பேராசிரியர்களை நேரில் அழைத்து விசாரிக்கவும் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பேராசிரியர்கள் முறைகேட்டோடு தொடர்புடைய கல்லூரிகளிடமும் அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் கேட்டு இருக்கிறது. இதற்கிடையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தனியார் அமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணையில் பேராசிரியர்கள் போலியாக பணியில் சேர்ந்ததை கண்டுபிடித்தோம். அந்த தனியார் அமைப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். இந்த மோசடியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மற்றும் தொடர்புடைய கல்லூரிகளிடமும் விளக்கம் கேட்டுள்ளோம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் அதற்கான காலக்கெடு நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து கல்லூரிகள் அளித்த அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு, அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது. மேலும், அந்த அறிக்கையின் அடிப்படையில், கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யவோ, குறிப்பிட்ட காலத்திற்கு மாணவர் சேர்க்கைக்குத் தடைவிதிக்கவோ, கல்லூரிகளுக்கு அபராதம் விதிக்கவோ திட்டமிட்டுள்ளதாக .தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: ”அந்த நேரத்துல உங்களுக்கு என்ன வேலை?” புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் போலீசார் கேட்ட கேள்வி!

மேலும் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட நோடீஸுக்கு இரண்டு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற கல்லூரிகளின் பேராசிரியர் நியமனங்களில் முறைகேடு தொடர்பான அறிக்கை இரண்டு நாட்களில் கல்லூரியின் விவரங்கள் அரசுக்கும், தமிழ்நாடு ஆளுநருக்கும் சமர்ப்பிக்கப்பட உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
Exit mobile version