5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

School Leave: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்.. இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் – மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன - மிக கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 26 -27° செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

School Leave: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்.. இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் – மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 17 Oct 2024 07:13 AM

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அந்த சுழற்சி தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்ததன் காரணமாக ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கனமழைக்கான எச்சரிக்கையாக ஆரஞ்சு அலர்ட் மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என மாணவர்கள் காத்திருந்த நிலையில் இன்று வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடலில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 22 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று இரவு 11.30 மணி நிலவரப்படி, மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் தெற்கு ஆந்திராவுக்கு அருகில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. ஆந்திர பிரதேஷ்-வட தமிழ்நாடு கடற்கரைகள், அட்சரேகை 13.4° N மற்றும் தீர்க்கரேகை 80.8° E, சென்னைக்கு (தமிழ்நாடு) கிழக்கு-வடகிழக்கே சுமார் 80 கிமீ தொலைவிலும், நெல்லூருக்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கே 150 கிமீ தொலைவிலும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “மார்வெல்ஸ் படம் போலதான் பிளான்” இயக்குநர் ஷங்கர் சொன்ன விஷயம்

இது இன்று அக்டோபர் 17ஆம் தேதி அதிகாலையில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் – தெற்கு ஆந்திரா கடற்கரையை புதுச்சேரி மற்றும் நெல்லூர் இடையே வடக்கே சென்னைக்கு அருகில் கடக்க வாய்ப்புள்ளது என்றும், அதன்பிறகு, இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழகத்தை ஒட்டிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று அக்டோபர் 17ஆம் தேதி காலைக்குள் வலுவிழக்க வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: நைஜீரியாவில் டேங்கர் லாரி விபத்து.. பெட்ரோல் எடுக்க சென்ற 94 பேர் பலியான பரிதாபம்!

இதன் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வங்கக்கடலில் இருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

அதிகபட்சமாக 30 செ.மீ வரை மழை பதிவானது. இதன் காரணமாக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று சென்னை அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் இன்றும் விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் காத்திருந்தனர். ஆனால் இன்று மழைக்கான வாய்ப்பு குறைவு என்பதாலும், நேற்று முதல் மழை இல்லாத காரணத்தாலும் இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன – மிக கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 26 -27° செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் இன்று, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News