5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

School Leave : பள்ளிகளுக்கு ஜூன் 8 வரை விடுமுறை.. வெயில் காரணமாக பீகார் அரசு உத்தரவு

பீகாரில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதன் காரணமாக பலர் வெப்ப பக்கவாதம் என்ற ஹீட் ஸ்ட்ரோக் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பீகார் மாநிலத்தில் ஜூன் 8 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

School Leave : பள்ளிகளுக்கு ஜூன் 8 வரை விடுமுறை.. வெயில் காரணமாக பீகார் அரசு உத்தரவு
மாதிரி படம்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 31 May 2024 09:46 AM

பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டத்தில் உள்ளது மன்கவுல் நடுநிலைப் பள்ளி. இப்பள்ளியில் நேற்று காலை நடைபெற்ற இறைவணக்க நிகழ்ச்சியின்போது வெயிலின் தாக்கத்தால் அடுத்தடுத்து 7 மாணவர்கள் மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மாணவர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டது. பீகாரில் ஏற்பட்ட வெப்ப அலை காரணமாக பள்ளி மாணவர்கள் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பீகார் மாநிலத்தில் ஜூன் 8 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் கடும் வெப்பம் நிலவிவருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது.

வடமாநிலங்களில் வெப்பத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே ரெட் அலர்ட் விடுத்திருந்தது.

டெல்லி, உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் வெப்ப காற்று வீசுகிறது. அதனால் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also read… 30 அடி கிணற்றில் விழுந்த யானைக்குட்டி… போராடி மீட்ட வனத்துறையினர்

இந்நிலையில் பீகார் மாநிலம், ஷேக்பூராவில் வெப்ப அலையின் தாக்கம் தாங்க முடியாமல் பள்ளி மாணவர்கள் நேற்று பலர் பள்ளியிலேயே மயங்கி விழுந்தனர். உடனடியாக ஆசிரியர்கள் பலர் மாணவர்களுக்கு விசிறியால் வீசிவிட்டு அவர்களை வெப்பத்திலிருந்து ஆசுவாசப்படுத்தினர். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல், பெகுசாராய் என்ற இடத்திலும் மாணவிகள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பீகாரில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதன் காரணமாக பலர் வெப்ப பக்கவாதம் என்ற ஹீட் ஸ்ட்ரோக் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பீகார் மாநிலத்தில் ஜூன் 8 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதே போல புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடுமையான வெயில் காரணமாக விடுமுறையை நீட்டித்து அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Latest News