5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

CBSE 12th Result: சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு.. 87.98% மாணவர்கள் தேர்ச்சி!

CBSE 12th Result: நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

CBSE 12th Result: சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு.. 87.98% மாணவர்கள் தேர்ச்சி!
சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 13 May 2024 13:42 PM

சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் வெளியீடு:

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கின. 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 2ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மார்ச் 13ஆம் தேதியும் முடிவடைந்தன.  இந்த நிலையில், நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 87.98 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 16.21 லட்சம் மாணவரகள் தேர்வு எழுதிய நிலையில், 14.26 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டில் 0.65 சதவீத மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Also Read : நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. எப்போது தெரியுமா?

மாணவிகளே அதிகம் தேர்ச்சி:

12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் கடந்த ஆண்டு 90.68 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்தாண்டு 91.52  தேர்ச்சி சதவீதம் உள்ளது. இதில், மாணவர்கள் 85.12 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவிகள் 91.52 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகள் 6.40 சதவீத பேருக்கு அதிமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 50 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

95 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் 24,000 மாணவர்களும், 90 சதவீத மதிப்பெண்களுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ் 12ஆம் வகுப்பு தேர்வில் சிடிசிஏ பள்ளிகள் 99.23 சதவீமும், ஜேஎன்வி பள்ளிகள் 98.90 சதவீதமும், கேந்திர வித்யாலயா 98.81 சதவீதமும், அரசு உதவி பள்ளிகள் 91.42 சதவீதமும், அரசுப் பள்ளி 88.23 சதவிதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.

மூன்றாவது இடத்தில் சென்னை:

மண்டல வாரியான தேர்ச்சியை பொறுத்தவரையில் திருவனந்தபுரம் 99.91 சதவீதத்துடன் முதலிடத்திலும், பிரயாக்ராஜ் 78.35 சதவீதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளன. திருவனந்தபுரம் 99.91 சதவீதமும், விஜயவாடா 99.04 சதவீதமும், சென்னை 98.47 சதவீதமும், பெங்களூரு 96.95 சதவீதமும், மேற்கு டெல்லி 95.64 சதவீதமும், கிழக்கு டெல்லி 95.51 சதவீதமும், சண்டிகர் 91.06 சதவீதமும், பஞ்ச்குலா 90.26 சதவீதமும், புனே 89.78 சதவீதமும், அஜ்மீர் 89.53 சதவீதமும் பெற்றுள்ளன.

ரிசல்ட் பார்ப்பது எப்படி?

மாணவர்கள் cbse.gov.in, cbseresults.nic.in, results.digilocker.gov.in, umang.gov.in என்ற இணையதளம் மூலம் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். இந்த இணையதள முகவரியை பயன்படுத்தி Enter roll number, Enter school Number, Enter admid card ID ஆகிய விவரங்களை பதிவிட்டு முடிவுகளை காணலாம்.

Also Read : மே 14ஆம் தேதி வெளியாகிறது +1 பொதுத்தேர்வு ரிசல்ட்.. பார்ப்பது எப்படி?

Latest News