CBSE Exams : சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு
CBSE 10, 12th Board Exams : சிபிஎஸ் எனும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகளில் 2024-25ஆம் கல்வியாண்டில் படிக்கும் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதிகள் சிபிஎஸ்இ சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி தேர்வுகள் தொடங்க உள்ளது.
மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிபிஎஸ் எனும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகளில் 2024-25ஆம் கல்வியாண்டில் படிக்கும் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதிகள் சிபிஎஸ்இ சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்குகிறது. இதில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கும் தேர்வு, மார்ச் 18ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும், 12ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கும் தேர்வு, ஏப்ரல் 4ஆம் தேதி முடிவடைகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணைப்படி, பிப்ரவரி 15ஆம் தேதி தொழில்முனைவு, பிப்ரவரி 17ஆம் தேதி உடற்கல்வி, பிப்ரவரி 20ஆம் தேதி கணினி பயன்பாடு, 21ஆம் தேதி இயற்பியல், 22ஆம் தேதி தொழில் படிப்பு மற்றும் வணிக நிர்வாகம், 24ஆம் தேதி புவியியல், 25ஆம் தேதி பிரெஞ்சு, 27ஆம் தேதி வேதியியல், மார்ச் 4ஆம் தேதி வங்கியியல், ஏப்ரல் 5ஆம் தேதி விவசாயம், மார்ச் 8ஆம் தேதி கணிதம் தேர்வுகள் நடைபெறும்.
மார்ச் 11ஆம் தேதி ஆங்கிலம், மார்ச் 15ஆம் தேதி இந்தி, ஏப்ரல் 19ஆம் தேதி பொருளாதாரம், மார்ச் 22ஆம் தேதி அரசியல் அறிவியல், ஏப்ரல் 25ஆம் தேதி உயிரியல், மார்ச் 26ஆம் தேதி கணக்கியல், மார்ச் 29ஆம் தேதி கணினி அறிவியல், ஏப்ரல் 1ஆம் தேதி வரலாறு, ஏப்ரல் 2ஆம் தேதி தமிழ், ஏப்ரல் 3ஆம் தேதி வீட்டு அறிவியல், ஏப்ரல் 4ஆம் தேதி உளவியல் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : +2 பொதுத்தேர்வு கட்டணம்.. செலுத்துவது எப்படி? யாருக்கு விலக்கு? வெளியான முக்கிய அறிவிப்பு!
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணைப்படி, பிப்ரவரி 15ஆம் தேதி ஆங்கிலம், பிப்ரவரி 20ஆம் தேதி அறிவியியல், பிப்ரவரி 22ஆம் தேதி பிரெஞ்சு மற்றும் சமஸ்கிருதம், பிப்ரவரி 25ஆம் தேதி சமூக அறிவியல், பிப்ரவரி 27ஆம் தேதி தமிழ், பிப்ரவரி 28ஆம் தேதி இந்தி, மார்ச் 10ஆம் தேதி கணிதம், மார்ச் 13ஆம் தேதி வீட்டு அறிவியல், மார்ச் 18ஆம் தேதி கணினி பயன்பாடு, செயற்கை நுண்ணறிவு, தகவல் தொடர்பியல் தேர்வுகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு அட்டவணை பார்ப்பது எப்படி?
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை https://www.cbse.gov.in/ என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
Also Read : கல்லூரி படிப்பில் பெரிய மாற்றம்.. 2 ஆண்டிலே பட்டப்படிப்பை முடிக்கலாம்.. யுஜிசி முக்கிய தகவல்!
முதலில் https://www.cbse.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். அங்கு Main Website என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் Date Sheet for Class X and XII for Board Examinations என்று இருக்கும். இதனை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொண்டு பாட வாரியான தேர்வு தேதிகளை அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.