CUET UG Result 2024 : கியூட் தேர்வு முடிவுகள் வெளியீடு.. எப்படி பார்க்கலாம் தெரியுமா?

CUET Result | இந்த ஆண்டுக்கான பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்புக்கான கியூட் (CUET) நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. கடந்த மே 15 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்ற பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்புக்கான கியூட் நுழைவுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. 

CUET UG Result 2024 : கியூட் தேர்வு முடிவுகள் வெளியீடு.. எப்படி பார்க்கலாம் தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Published: 

28 Jul 2024 21:59 PM

கியூட் தேர்வு முடிவுகள் வெளியீடு : நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை, பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மூலம்  நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்புக்கான கியூட் (CUET) நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. கடந்த மே 15 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்ற பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்புக்கான கியூட் நுழைவுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது.

 55% பேர் மட்டுமே தேர்வு எழுதினர்

சமீபத்தில் நடந்த முடிந்த கியூட் தேர்வுக்கு சுமார் 3.6 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால் வெறும் 55 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். இதில் பெண்கள் 5,19,283, ஆண்கள் 5,94,324 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் உட்பட மொத்தம் 11,13,610 பேர் தேர்வு எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கியூட் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று நேற்று (27.07.2024) தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அறிவித்தப்படியே இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

250 பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை

கியூட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 250 பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Tamil Pudhalvan Scheme: ‘தமிழ் புதல்வன் திட்டம்’… யார் யாருக்கு மாதம் ரூ.1,000.. தமிழக அரசு வெளியிட்ட முக்கியம் அறிவிப்பு

கியூட் தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்வது எப்படி

  • கியூட் தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ள, கியூட் தேர்வின் அதிகாரப்பூர்வ இணையதளமான cuet.samarth.ac.in என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் முகப்பு பக்கத்தில் காட்டப்படும் CUET UG 2024 Result எம்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
  • விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.
  • இதனை தொடர்ந்து உங்களுக்கு CUET UG 2024 Result  திரையில் காட்டப்படும்.
  • உங்கள் தேர்வு முடிவுகளை பார்த்த கையுடன், உங்கள் தேர்வு முடிவை பதிவிறக்கம் செய்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படிங்க : TNGASA Admission 2024: முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை.. விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

மனித உடலில் உள்ள இரத்தம் ஏன் உப்பாக இருக்கிறது..?
குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள்!
இந்தியாவின் பிரபலமான தேயிலை தோட்டங்கள்!
காலிஃபிளவரை இப்படி சுத்தம் செய்யுங்கள்