5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

CUET UG Retest: க்யூட் யுஜி மறுதேர்வு தேதி அறிவிப்பு.. யாருக்கெல்லாம் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!

க்யூட் யுஜி தேர்வில் பங்கேற்று குறைபாடுகள் இருப்பதாக புகார் அளித்த 1000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வரும் ஜூன் 19ஆம் தேதி மறுதேர்வு நடத்த தேசிய தேர்வு முகமை முடிவெடுத்துள்ளது. க்யூட் யுஜி மறுதேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மாணவர்கள் தேந்தெடுத்த மொழிக்கு பதில் வேறு மொழியில் தவறான வினாத்தாள்கள் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட நேர இழப்பு காரணமாகவே இந்த மறுதேர்வு நடத்தப்படுவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்தன.

CUET UG Retest: க்யூட் யுஜி மறுதேர்வு தேதி அறிவிப்பு.. யாருக்கெல்லாம் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!
க்யூட் யுஜி மறுதேர்வு
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 15 Jul 2024 09:33 AM

க்யூட் யுஜி மறுதேர்வு: மத்திய பல்கலைக்கழங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக்கழகங்களுக்கான பொதுத் நுழைவுத் தேர்வு (CUET) நடத்தப்பட்டு விருகிறது. அந்த வகையில் 2024ஆம் ஆண்டுக்கான க்யூட் தேர்வு மே 15ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற்றது. நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 ஷிப்டுகளில் நடந்தது. குறிப்பாக 15 பாடங்களுக்கு காகித முறையிலும், 48 பாடுங்களுக்கு கணினி முறையிலும் தேர்வு நடந்தது. இந்த க்யூட் தேர்வு நாடு முழுவதும் 13 மொழிகளில் 379 நகரங்களில் நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் ஜூன் 30ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், இன்று வரை தேர்வுகள் முகமை வெளியிடவில்லை. இந்தநிலையில், க்யூட் யுஜி தேர்வில் பங்கேற்று குறைபாடுகள் இருப்பதாக புகார் அளித்த 1000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வரும் ஜூன் 19ஆம் தேதி மறுதேர்வு நடத்த தேசிய தேர்வு முகமை முடிவெடுத்துள்ளது. க்யூட் யுஜி தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்புகளை கடந்த ஜூலை 7ஆம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

Also Read: மாதம் 1,000 ரூபாய்.. இனி அரசு உதவிபெறும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்!

மேலும், தேர்வில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் சரியான விளக்கத்துடன் புகார் அளிக்கும் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தவுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஜூலை 19ஆம் தேதி 1000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவிக்கை வெளியிட்டது. மாணவர்கள் எழுப்பிய புகார்கள் சரியெனக் கண்டறியப்பட்ட மாணவர்களுக்கு ஜூலை 15 முதல் 19 வரை அவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹால் டிக்கெட் எப்போது?

க்யூட் யுஜி மறுதேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மறுதேர்வு எழுதம் மாணவர்கள் https://exams.nta.ac.in/CUET-UG/ என்ற இணையதளம் உங்களது ஹால் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

காரணம் என்ன?

மாணவர்கள் தேந்தெடுத்த மொழிக்கு பதில் வேறு மொழியில் தவறான வினாத்தாள்கள் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட நேர இழப்பு காரணமாகவே இந்த மறுதேர்வு நடத்தப்படுவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்தன.  மேலும், இளநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மற்றும் உதவிப் பேராசிரியர் நெட் ஆகிய தேர்வுகளில் முறைகேடுகள் நடத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், க்யூட் யுஜி தேர்வின் முடிவுகள் வெயியிடப்படும் தேதி குறித்த எந்த அறிவிப்பும் தற்போது வரை வெளியிடாதது மாணவர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. நீட் வினாத்தாள் கசிந்த குற்றச்சாட்டில் ஜார்க்கண்டில் மாநிலத்தில் உள்ள ஒயாசிஸ் பள்ளி சிக்கியது. இந்தநிலையில், அங்கு க்யூட் யுஜி தேர்வு எழுதிய 250 மாணவர்கள் மறுதேர்வில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கேட் தேர்வு எப்போது தெரியுமா? வெளியான முக்கிய அறிவிப்பு!

Latest News