School Leave: நாளை (டிச.03) பள்ளிகளுக்கு விடுமுறை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

Cyclone Fengal: தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூரில் நாளை (டிசம்பர்.03) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

School Leave: நாளை (டிச.03) பள்ளிகளுக்கு விடுமுறை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

பள்ளி விடுமுறை

Updated On: 

02 Dec 2024 20:08 PM

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிலும், இந்த கனமழையால் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தர்மபுரி உள்ளிட்ட பல இடங்கள் வெள்ள நீரில் தத்தளித்து வருகிறது, கடலூரில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் நீரின் அளவானது சுமார் 2.45 லட்சம் கன அடியாக உயர்ந்து வெளியேறியது. இதனால், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வெள்ளம் சூழந்து குளம் போல் காட்சியளிக்கிறது. இந்தநிலையில், தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூரில் நாளை (டிசம்பர்.03) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை(டிசம்பர் 03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நிறைய பாடங்கள் நடத்த வேண்டியுள்ளதால் பள்ளிகள் நாளை முதல் திறக்கப்படும் என தெரிவித்தார்.

ALSO READ: Cyclone Fengal: வெள்ள பாதிப்பு! குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5000.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

மேலும், வெள்ளம் காரணமாக நாளை நடைபெறவிருந்த புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாளை நடைபெறவிருந்த இளைநிலை மற்றும் முதுநிலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக, இன்று (டிசம்பர் 2ம் தேதி) நடைபெறவிருந்த தேர்வை ஒத்திவைக்கப்படுவதாகவும், திருத்தப்பட்ட தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்திருந்தார்.

இன்று எந்தெந்த பள்ளிகளுக்கு விடுமுறை..?

கடலூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் பள்ளிகள் மட்டும் இன்று (டிசம்பர் 2) விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த நவம்பர் 24ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக அறிவிக்கப்பட்டது. இது அடுத்த இரண்டு நாட்கள் வங்கக் கடலில் மையம் கொண்டு, நவம்பர் 27ம் தேதி அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. தொடர்ந்து, கடந்த 29 ஆம் தேதி புயலாக வலுப்பெற்று, ஃபெஞ்சல் புயல் என பெயர் வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நவம்பர் 30ம் தேதி நள்ளிரவு 11 மணியளவில் பெஞ்சல் புயலானது புதுச்சேரி – மரக்காணம் இடையே கரையை கடந்தது.

இந்த புயலானது கரையை கடக்கும்போது தமிழகத்தின் தலைநகரான சென்னை,  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழையானது அதிவேக காற்றுடன் கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்றதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

ALSO READ: Fengal Cyclone: வெள்ளத்தால் ஸ்தம்பித்த விழுப்புரம்.. சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு!

புயல் கரையை கடந்து கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் ஆன பிறகு, நேற்று மற்றும் இன்று வட மாவட்டங்களில் பல இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ள நீர் புகுந்து தண்ணீர் தேங்கியது. வீடுகளுக்கு புகுந்து வெள்ள நீரால் தத்தளித்து வரும் மக்களை ராணுவம் மூலம் புதுச்சேரி அரசாங்கம் மீட்டு, முகாம்களில் தங்க வைத்து வருகிறது.

இணையத்தில் வைரலாகும் சித்தார்த் – அதிதி ராவ் தம்பதியின் போட்டோஸ்
நீல நிற புடவையில் நடிகை அனிகா... வைரலாகும் போட்டோஸ்
நடிகை அனுபமா பரமேஷ்வரனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!
நடிகை ரஜிஷா விஜயன் பற்றிய சுவாரஸ்ய தகவல்..