School Leave: ஃபெஞ்சல் புயல் எதிரொலி.. இன்று எத்தனை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

Weather Report: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

School Leave: ஃபெஞ்சல் புயல் எதிரொலி.. இன்று எத்தனை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

கோப்பு புகைப்படம்

Published: 

30 Nov 2024 07:20 AM

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலின் காரணமாக தமிழ்நாட்டில் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று 9 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தஞ்சவூர் மாவட்டத்தில் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் தாலுக்காவில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல்:

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் “ஃபெஞ்சல்” என்ற சூறாவளி புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 07 கி.மீ வேகத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று, அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, 11.9°N மற்றும் தீர்க்கரேகை 81.5°E, சுமார் 370 கி.மீ திருகோணமலைக்கு வடக்கே, நாகப்பட்டினத்திலிருந்து வடகிழக்கே 210 கி.மீ., புதுச்சேரிக்கு கிழக்கே 180 கி.மீ., சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது நவம்பர் 30-ம் தேதி பிற்பகலில் மணிக்கு 70 – 80 கி.மீ வேகத்தில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும், இது கிட்டத்தட்ட மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரையை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: சென்னைக்கு 190 கி.மீ தொலைவில் இருக்கும் ஃபெஞ்சல் புயல்.. விடிய விடிய ஆட்டம் காட்டும் மழை..

அரசு வெளியிட்ட அறிவிப்பு:

ஃபெஞ்சல் (FENGAL) புயல் 30.11.2024 அன்று கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையுடன் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட இதர மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தேவைக்கேற்ப முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை இன்று (30.11.2024) வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், 30.11.2024 அன்று பிற்பகல் புயல் கரையை கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் வெளியில் செல்ல வேண்டாம்:

புயல் கரையைக் கடக்கும் போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைத் கண்டிப்பாக தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக கடற்கரை. பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொள்கிறது. மேலும், அரசின் அனைத்து பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு நல்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

6 மவட்டங்களுக்கு ரெட் அலர்ட்:

மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

டிஆர்பியில் சன் டிவி & விஜய் டிவி இடையே நடக்கும் கடும் போட்டி
இணையத்தை கலக்கும் நயன்தாராவின் இன்ஸ்டா ஸ்டோரி
மஞ்சள் நீரில் எந்த வைட்டமின் நிறைந்துள்ளது..?
குளிர் காலத்தில் மலிவு விலையில் செல்லக்கூடிய சுற்றுலா இடங்கள்!