5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

School Leave: கனமழை எதிரொலி.. சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..

பள்ளிகளுக்கு விடுமுறை: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வரும் காரணத்தினால் இன்று ஒரு நாள் சென்னையில் இருக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்றும் கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

School Leave: கனமழை எதிரொலி.. சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 12 Nov 2024 07:52 AM

சென்னை மாவட்டத்தில் இன்று (12.11.2024) மழை காரணமாக, பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்று (11-11-2024) மாலை அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இது அதற்கடுத்த இரண்டு தினங்களில் மேற்கு திசையில், தமிழக – இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து இன்று பள்ளிக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழை:

தமிழ்நாட்டில் கடந்த மாதம் இறுதியில் வட கிழக்கு பருவ மழை தொடங்கியது. நவம்பர் முதல் வாரத்தில் வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது ஆந்திரா நோக்கி நகர்ந்து சென்றதால் மழை இல்லாமல் போனது. ஆனால் நவம்பர் 2 ஆம் வாரம் முதல் வட கிழக்கு பருவ மழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு இருந்தது.


இந்த சூழலில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து தமிழக – இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில், மேடவாக்கம், சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், பள்ளிக்கரணை, நாராயணப்புரம், கோவிலம்பாக்க, நன்மங்களம், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், ஆலந்தூர், வேளச்சேரி, மடுவாங்கரை, கிண்டி, பரங்கிமலை, சின்னமலை, சைதாப்பேட்டை, அண்ணா பல்கலைக்கழகம், அடையாறு, பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, காமராஜர் சாலை, ராஜாஜி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: சிக்கலில் நடிகை கஸ்தூரி.. 2 தனிப்படைகள் அமைப்பு.. கண்காணிப்பு தீவிரம்!

பள்ளிகளுக்கு விடுமுறை:

தொடர் மழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற நிலையில், முதலில் விடுமுறை இல்லை என தெரிவிக்கப்பட்டது. பின்னர் சென்னை மாவட்ட ஆட்சியர் இன்று ஒரு நாள் மட்டும் சென்னையில் இருக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சென்னையில் வரும் 15 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News