Engineering Counselling 2024: பொறியியல் கலந்தாய்வு எப்போது தெரியுமா? இந்த தேதியை குறிச்சு வச்சிக்கோங்க! - Tamil News | | TV9 Tamil

Engineering Counselling 2024: பொறியியல் கலந்தாய்வு எப்போது தெரியுமா? இந்த தேதியை குறிச்சு வச்சிக்கோங்க!

Updated On: 

10 Jul 2024 15:20 PM

மிழ்நாட்டில் 2024-25ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், இளநிலைப் படிப்புகளில் மட்டும் சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ளன. இவவை இணையவழிக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.  இதன்படி, 2024-25ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி  முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Engineering Counselling 2024: பொறியியல் கலந்தாய்வு எப்போது தெரியுமா? இந்த தேதியை குறிச்சு வச்சிக்கோங்க!

பொறியியல் கலந்தாய்வு

Follow Us On

பொறியியல் கலந்தாய்வு: தமிழ்நாட்டில் 2024-25ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், இளநிலைப் படிப்புகளில் மட்டும் சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ளன. இவவை இணையவழிக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.   இதன்படி, 2024-25ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி  முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூலை 22ஆம் தேதி அரசுப் பள்ளிகளில் படித்த சிறப்பு பிரிவனரான மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர், விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

Also Read: நீட் மறுதேர்வுக்கு உத்தரவிடுமா உச்ச நீதிமன்றம்? பாயிண்டை பிடித்த தலைமை நீதிபதி!

ஜூலை 23ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. தொடர்ந்து, பொதுப்பிரிவு சிறப்பு பிரிவினருக்கான (மாற்றுத்திறனாளி, முன்னாள் படை வீரர், விளையாட்டு வீரர்) கலந்தாய்வு ஜூலை 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து, பொதுப் பிரிவினருக்கான பொதுக் கலந்தாய்வு ஜூலை 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. துணைக் கலந்தாய்வு செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. எஸ்.சி அருந்ததியர் மாணவர்களுக்கான காலியிடத்தை எஸ்.சி மாணவர்களுக்கு மாற்றும் கலந்தாய்வு செப்டம்பர் 10,11ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 11ஆம் தேதியோடு கலந்தாய்வு முடிவடைகிறது. இந்த கலந்தாய்வுகள் அனைத்து இணைய வழியிலேயே நடைபெறும்.

தரவரிசைப் பட்டியல்:

2024-25ஆம் கல்வியாண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 2 லட்சத்து 53 ஆயிரம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1 லட்சத்து 98 ஆயிரத்து 853 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உரிய சான்றிதழ்களை ஆன்லைனி பதிவேற்றும் செய்து இருந்தனர். அவர்களுக்கு ரேண்டம் எண் ஆன்லைனில் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட நிலையில், அவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியாகின. இதில், செங்கல்பட்டு மாணவி தோஷிதா லட்சுமி முதலிடம் பெற்றுள்ளார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நிலஞ்னா இரண்டாவது இடத்தையும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார். மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேலத்தைச் சேர்ந்த ரவணி 199.5 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணா அனுப் 2ஆம் இடத்தையும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஜேஇஇ தேர்வில் கலக்கிய பழங்குடியின மாணவி.. சவால்களை சாதனைகளாக மாற்றி சாதித்தது எப்படி?

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version