Engineering Counselling: பொறியியல் மாணவர் சேர்க்கை.. இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பிரிவு கலந்தாய்வு..

மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தரவரிசை பட்டியல் ஜூலை 10 ந் தேதி வெளியிட்டப்பட்டது. தொடர்ந்து, கடந்த 22ம் தேதி சிறப்புப் பிரிவில் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. அதன்படி, விளையாட்டுப் பிரவில் உள்ள 38 இடங்களுக்கு 282 விளையாட்டு வீரர்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான 11 இடங்களுக்கு 11 மாணவர்களும், மாற்றுதிறனாளிகளுக்கான 664 இடங்களுக்கு 111 மாற்றுத்திறனாளி மாணவர்களும் கல்லூரிகளை தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

Engineering Counselling: பொறியியல் மாணவர் சேர்க்கை.. இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பிரிவு கலந்தாய்வு..

மாதிரி புகைப்படம்

Published: 

25 Jul 2024 08:14 AM

பொறியியல் கலந்தாய்வு 2024: இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் சிறப்புப் பிரிவில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 713 இடங்களுக்கான கலந்தாய்வில் 92 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்துள்ளனர். இன்று (ஜூலை-25) முதல் 28 வரை நடைபெறவுள்ள சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வில் 9,547 இடங்களுக்கு 3,772 மாணவர்கள் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர். 2024-25ம் கல்வியாண்டிற்கான பொறியியல் கலந்தாய்வில் 433 கல்லூரிகளில் உள்ள 2,33,376 பிஇ , பிடெக் இ்டங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக 1,79,938 இடங்கள், கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படவுள்ளது. அதன்படி, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 6ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 12ம் தேதி வரை நடைபெற்றது.

மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தரவரிசை பட்டியல் ஜூலை 10 ந் தேதி வெளியிட்டப்பட்டது. தொடர்ந்து, கடந்த 22ம் தேதி சிறப்புப் பிரிவில் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

அதன்படி, விளையாட்டுப் பிரவில் உள்ள 38 இடங்களுக்கு 282 விளையாட்டு வீரர்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான 11 இடங்களுக்கு 11 மாணவர்களும், மாற்றுதிறனாளிகளுக்கான 664 இடங்களுக்கு 111 மாற்றுத்திறனாளி மாணவர்களும் கல்லூரிகளை தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 7 பேர் கல்லூரியை பதிவு செய்து, அவர்களில் 6 பேர் கல்லூரிகளை தேர்வு செய்து இடங்களை உறுதி செய்தனர்.

விளையாட்டு வீரர்கள் பிரிவில் 262 அரசுப் பள்ளி மாணவர்கள் விருப்பங்களை பதிவு செய்ததில் 233 வீரர்கள் இடங்களை உறுதிச் செய்தனர். அவர்களில் 38 பேருக்கு பொறியியல் படிப்பிற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிப் பிரிவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 661 இடங்களில், 70 மாணவர்கள் கல்லூரியை பதிவு செய்தனர். 48 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களில் சிறப்பு பிரிவினருக்கான 710 இடங்கள் இருந்த நிலையில் 92 மாணவர்கள் மட்டுமே தங்களுக்கான இடங்களை தேர்வு செய்துள்ளனர். 618 இடங்கள் காலியாக உள்ளது.

மேலும் படிக்க: பிரபல யூடியூபர் இர்ஃபான் சொன்ன குட் நியூஸ்… இணையத்தில் குவியும் வாழ்த்துகள்!

இதைத் தொடர்ந்து, பொதுப்பிரிவு கலந்தாய்விற்கு விண்ணப்பித்த சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 25) முதல் 28ம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இதில், மாற்றுதிறனாளிகள் பிரிவில் 8948 இடங்களுக்கு 416 மாற்றுத்திறனாளி மாணவர்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான 143 இடங்களுக்கு 1,243 மாணவர்களும், விளையாட்டு வீரர்கள் பிரிவில் 456 இடங்களுக்கு 2113 மாணவர்களும் விண்ணப்பித்து கலந்தாய்வு பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

அதன்படி, சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் இன்று காலை 10 மணி முதல் நாளை (ஜூலை26) மாலை 5 மணி வரை தங்களுக்கான விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்யலாம். மாணவர்களின் விருப்பப்பட்டியலின் அடிப்படையில், தற்காலிக இடம் 27ம் தேதி காலை 7 மணிக்கு வெளியிடப்படும். கலந்தாய்வு குழு பரிந்துரைத்துள்ள தற்காலிக இடத்தை 27ம் தேதி மாலை 7 மணிக்குள் மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் உறுதி செய்த இடங்களின் அடிப்படையில் அவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணை 28ம் தேதி காலை 7 மணிக்கு வெளியிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மின்தடை.. எங்கெல்லாம் தெரியுமா?

மனித உடலில் உள்ள இரத்தம் ஏன் உப்பாக இருக்கிறது..?
குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள்!
இந்தியாவின் பிரபலமான தேயிலை தோட்டங்கள்!
காலிஃபிளவரை இப்படி சுத்தம் செய்யுங்கள்