Agriculture: வேளாண்மை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன்12 வரை அவகாசம் நீட்டிப்பு..!
ஒருங்கிணைந்த இளம் அறிவியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, வரும் 12ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை மின்வளப்பட்ட படிப்புகளில் சேருவதற்கு வியாழக்கிழமை ஜூன் 6-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 12-ம் தேதி வரையிலும் நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் 14 இளம் அறிவியல் பாடப் படிப்புகளில் உள்ள 50,361 இடங்களுக்கும் தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் ஆறு இளம் அறிவியல் செயல்பட்ட படைப்புகள் மூன்று தொழில்முறை பாடப்பிரிவுகளில் உள்ள 373 இடங்களுக்கும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள இளம் அறிவியல் வேளாண்மை இளம் அறிவியல் தோட்டக்கலை படிப்புகளில் உள்ள 340 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைபொறியியல் பட்டயப் படிப்புகளுக்கு, ஆயிரத்து 290 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது,
Also Read: ஹரா படத்திலிருந்து ‘ஆசை தேவதை’ பாடலின் லிரிக்கல் வீடியோ இதோ!
இதற்காக கடந்த மாதம் ஏழாம் தேதி முதல் இணைய வழியில் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ண பெறப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு ஜூன் 6-ம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், தற்போது ஜூன் 12-ம் தேதி வரையிலும் நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த மூன்று கல்வி நிறுவனங்களிலும் சேர்வதற்காக மொத்தம் 26 ஆயிரத்து 357 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர் இவர்களில் 16,289 பேர் மாணவிகள் என்றும் 10,068 பேர் மாணவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது அதைப்போல் பாட்டை படிப்புக்கு 2,428 பேர் விண்ணப்பித்திருப்பதாக வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: Job Recruitment: உதவி மையத்தில் பெண்களுக்கு பணி.. ஜூன் 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..!
வேளாண் பல்கலைக்கழகத்தின், http://tnagfi.ucanapply.com என்ற இணையதளம் வாயிலாக மே 7 ம் தேதி முதல் இந்த ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பத்தை சமர்ப்பிக்க, இன்று இறுதி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரும் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, ugadmissionstnau.ac.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும், 94886- 35077, 94864 -25076 ஆகிய மொபைல் போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.