NIT Trichy: ஜேஇஇ தேர்வில் கலக்கிய பழங்குடியின மாணவி.. சவால்களை சாதனைகளாக மாற்றி சாதித்தது எப்படி? - Tamil News | | TV9 Tamil

NIT Trichy: ஜேஇஇ தேர்வில் கலக்கிய பழங்குடியின மாணவி.. சவால்களை சாதனைகளாக மாற்றி சாதித்தது எப்படி?

Panchamalai Hills to NIT Trichy: 2024 ஜேஇஇ தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ரோகிணி தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி என்.ஐ.டியில் சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், "நான் இவ்வளவு மதிப்பெண் எடுத்ததற்கு காரணமாக  இருந்த எனது ஆசிரியர்கள், பெற்றோருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனக்கு உதவிய முதலமைச்சருக்கும் நன்றி" என்றார்.

NIT Trichy: ஜேஇஇ தேர்வில் கலக்கிய பழங்குடியின மாணவி.. சவால்களை சாதனைகளாக மாற்றி சாதித்தது எப்படி?

மாணவி ரோகிணி

Updated On: 

09 Jul 2024 16:27 PM

ஜேஇஇ தேர்வில் கலக்கிய பழங்குடி மாணவி: 2024 ஜேஇஇ தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ரோகிணி தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி என்ஐடியில் சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை பெற்றிருக்கிறார். திருச்சி மாவட்டம் பச்சைமலை பகுதியைச் சேர்ந்தவர் ரோகிணி (18). இவர் ஜேஇஇ தேர்வில் 73.8 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் தேர்வு எழுதிய பழங்குடியின மாணவர்களில் இவர் முதலிடம் பிடித்துள்ளார். இதனால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இவருக்கு திருச்சி என்.ஐ.டி கல்வி நிலையத்தில் வேதிப் பொறியில் (Chemical Engineering) வாய்ப்பை ரோகிணி பெற்றுள்ளார். இதன் மூலம் திருச்சி என்ஐடியில் சேர்ந்த முதல் பழங்குடி மாணவி என்ற பெருமையும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

Also Read: இளநிலை மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைப்பு.. காரணம் என்ன?

திருச்சி என்.ஐ.டியின் 60 ஆண்டு வரலாற்றில் ரோகிணி இடம்பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “நான் பழங்குடி சமூதாயத்தைச் சேர்ந்தவர். பழங்குடி பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை படித்தேன். ஜேஇஇ தேர்வு எழுதியதன் மூலம் எனக்கு என்.ஐ.டியில் சீட் கிடைத்துள்ளது. பி.இ கேமிக்கல் இன்ஜினியரிங் தேர்வு செய்துள்ளேன். எனது படிப்பு செலவை அரசு கவனித்து கொள்கிறது. நான் இவ்வளவு மதிப்பெண் எடுத்ததற்கு காரணமாக  இருந்த எனது ஆசிரியர்கள், பெற்றோருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

சாதித்தது எப்படி?

எனக்கு உதவிய முதலமைச்சருக்கு நன்றி. எனது அம்மா அப்பா இருவரும் கூலி தொழிலாளர்கள். நானும் தேர்வுக்கு தயாராகும்போது கூலி வேலை செய்திருக்கிறேன். நன்றாக படித்தால் தான் எனக்கு என்.ஐ.டியில் சீட் கிடைத்தது”என்றார்.” என்றார். தேர்வுகளுக்கான தயாராவது பற்றி மாணவி ரோகிணி பேசுகையில், “கடந்த இரண்டு ஆண்டுகளில் எனது ஆசிரியர்களின் கடின உழைப்பை என்னால் மறக்க முடியாது.

அவர்கள் என்னை அனைத்து தேர்வுகளையும் எழுத ஊக்குவித்தார்கள். நான் இப்போது ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்று என்.ஐ.டியில் படிக்க உள்ளேன். எனது பள்ளி மாணவர்களும் தேர்ச்சி பெற என்னால் முடிந்தவரை உதவி செய்வேன்” என்றார். அடிப்படை வசதிகள் கூட இல்லாத மலை கிராமத்தில் இருந்து படித்து சாதனை படைத்த மாணவி ரோகிணிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


இந்தியாவில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டு இரண்டு முறை தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதாவது, ஜேஇஇ முதன்மை மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ் என இரண்டு கட்டங்களாக தேர்வுகள் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: நீட் மறுதேர்வுக்கு உத்தரவிடுமா உச்ச நீதிமன்றம்? பாயிண்டை பிடித்த தலைமை நீதிபதி!

12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?