Gate Exam 2025: கேட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு! - Tamil News | GATE 2025 Registration Begins August 24 Exam From February 1 | TV9 Tamil

Gate Exam 2025: கேட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு!

Published: 

29 Jul 2024 07:54 AM

2025ஆம் ஆண்டு கேட் தேர்வு  பிப்ரவரி 1,12,15,16ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்கு தேதியை ரூர்க்கி கேட் அறிவித்துள்ளது. அதன்படி, கேட் தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் விண்ணப்பித்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் செப்டம்பர் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பை தவறிவிடும் மாணவர்கள் தாமதக் கட்டணத்தை செலுத்தி அக்டோபர் 7ஆம் தேதி வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

Gate Exam 2025: கேட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு!

கேட் தேர்வு

Follow Us On

கேட் தேர்வு 2025: நாடு முழுவதும் உள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (GATE) எனும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு ஆண்டுதோறும் நடைபெறுகிறது. ஐஐடி கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று தேர்வை நடத்தி வரும் நிலையில், 2025ஆம் ஆண்டு கேட் தேர்வை ஐஐடி ரூர்க்கி நடத்த உள்ளது. மேலும், பொறியியல், தொழில்நுட்ப கட்டுமானம், அறிவியல் சார்ந்த முதுநிலை படிப்புகளுக்கும் முனைவர்கள் படிப்புகளில் சேருவதற்கும் கேட் தேர்வு மதிப்பெண்கள் பயன்படுகிறது. அதேபோல, பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் கேட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் வேலைக்கு அமர்த்துகின்றனர். எனவே, 2025ஆம் ஆண்டு கேட் தேர்வு  பிப்ரவரி 1,12,15,16ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் மாணவர்கள் விண்ணப்பிக்கும் தேதியை எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்த நிலையில், கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்கு தேதியை ரூர்க்கி கேட் அறிவித்துள்ளது. அதன்படி, கேட் தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் விண்ணப்பித்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் செப்டம்பர் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பை தவறிவிடும் மாணவர்கள் தாமதக் கட்டணத்தை செலுத்தி அக்டோபர் 7ஆம் தேதி வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

கேட் தேர்வுக்கு https://gate2025.iitr.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பிக்கும்போது புகைப்படம், ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை வைத்துக் கொள்ளலாம்.  பெண்கள், எஸ்சி, எஸ்சி மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.900 செலுத்த வேண்டும். தாமதக் கட்டணம் ரூ.1400 செலுத்த வேண்டும். மற்ற அனைவருக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ.1,800 செலுத்த வேண்டும். தாமதமாக விண்ணப்பிப்பவர்கள் ரூ.2,300 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:

3ஆம் ஆண்டு அல்லது அதற்கடுத்த ஆண்டுகளில் படிக்கும் பொறியியல் மாணவர்கள், கேட் 2025ஆம் அண்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும், 2025 கேட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கப்படவில்லை. இதுகுறித்த கூடுதல் விவரங்களை அறிய இந்த https://gate2025.iitr.ac.in/ லிக்கை க்ளிக் செய்யலாம்.

தேர்வு முறை:

கணினி வாயிலாக நடைபெறும் கேட் தேர்வு ஒவ்வொரு நாளும் காலை மற்றும் பிற்பகலில் இரண்டு ஷிப்டுகளாக நடைபெறும். காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெறும்.

மதிப்பெண்கள்:

கேட் தேர்வு மூன்று மணி நேரம் நடைபெறும். 30 தாள்கள் இருக்கும் நிலையில், தேர்வர்கள் ஏதோனும் ஒன்று அல்லது இரண்டு தேர்வு தாள்களை தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கு நெகட்டிவ மதிப்பெண்கள் இருக்கிறது. ஒரு மதிப்பெண் கேள்விக்கு தவறான விடை அளித்தால் 1/3 மதிப்பெண்கள் கழித்து கொள்ளப்படும். 2 மதிப்பெண் கேள்விக்கு தவறான விடை அளித்தால் 2/3 மதிப்பெண்கள் கழித்து கொள்ளப்படும். கேட் மதிப்பெண்கள் முடிவு அறிவிக்கப்பட்ட தேதிக்குப் பிறகு மூன்று ஆண்டுகளுக்கு மதிப்பெண்கள் செல்லுபடியாகும். இந்த தேர்வு குறித்த கூடுதல் விவரங்கள் அறிய இந்த https://gate2025.iitr.ac.in/ லிக்கை க்ளிக் செய்யலாம்.

Also Read: கியூட் தேர்வு முடிவுகள் வெளியீடு.. எப்படி பார்க்கலாம் தெரியுமா?

Related Stories
TNPSC Group 2 Result: குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது தெரியுமா? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
School Leave: அப்படி போடு.. மாணவர்களுக்கு குஷியான நியூஸ்.. காலாண்டு விடுமுறை நீடிப்பு.. வெளியான அறிவிப்பு..
TNPSC Exam: குரூப் 2, 2ஏ தேர்வு எழுதியிருக்கீங்களா? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. உடனே பாருங்க!
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வு மதிப்பீட்டில் புதிய மாற்றம்.. விடைத்தாள்கள் தனித்தனியே மதிப்பீடு செய்ய முடிவு..!
பள்ளியில் மாணவிக்கு வளைகாப்பு… வெளியான ரீல்ஸ்.. ஆசிரியருக்கு பறந்த அதிரடி உத்தரவு!
TN Goverment: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை இருமடங்கு உயர்வு.. யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா?
குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
Exit mobile version