GATE Exam 2025: கேட் தேர்வு எப்போது தெரியுமா? வெளியான முக்கிய அறிவிப்பு! - Tamil News | | TV9 Tamil

GATE Exam 2025: கேட் தேர்வு எப்போது தெரியுமா? வெளியான முக்கிய அறிவிப்பு!

Updated On: 

13 Jul 2024 21:01 PM

2025ஆம் ஆண்டுக்கான பொறியியல் கேட் (GATE) தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் கேட் தேர்வு பிப்ரவரி 1,12,15,16ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 3ஆம் ஆண்டு அல்லது அதற்கடுத்த ஆண்டுகளில் படிக்கும் பொறியியல் மாணவர்கள், கேட் 2025ஆம் அண்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும், 2025 கேட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கப்படவில்லை.

GATE Exam 2025: கேட் தேர்வு எப்போது தெரியுமா? வெளியான முக்கிய அறிவிப்பு!

கேட் தேர்வு

Follow Us On

2025ஆம் ஆண்டு கேட் தேர்வு: நாடு முழுவதும் உள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (GATE) எனும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு ஆண்டுதோறும் நடைபெறுகிறது. ஐஐடி கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று தேர்வை நடத்தி வரும் நிலையில், 2025ஆம் ஆண்டு கேட் தேர்வை ஐஐடி ரூர்க்கி நடத்த உள்ளது. மேலும், பொறியியல், தொழில்நுட்ப கட்டுமானம், அறிவியல் சார்ந்த முதுநிலை படிப்புகளுக்கும் முனைவர்கள் படிப்புகளில் சேருவதற்கும் கேட் தேர்வு மதிப்பெண்கள் பயன்படுகிறது. அதேபோல, பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் கேட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் வேலைக்கு அமர்த்துகின்றனர். இந்த நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான பொறியியல் கேட் (GATE) தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் கேட் தேர்வு பிப்ரவரி 1,12,15,16ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.


Also Read: CA முடிவுகள் வெளியானது.. இணையத்தில் எப்படி பார்ப்பது?

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:

3ஆம் ஆண்டு அல்லது அதற்கடுத்த ஆண்டுகளில் படிக்கும் பொறியியல் மாணவர்கள், கேட் 2025ஆம் அண்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும், 2025 கேட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கப்படவில்லை. இதுகுறித்த கூடுதல் விவரங்களை அறிய இந்த https://gate2025.iitr.ac.in/ லிக்கை க்ளிக் செய்யலாம்.

தேர்வு முறை:

கணினி வாயிலாக நடைபெறும் கேட் தேர்வு ஒவ்வொரு நாளும் காலை மற்றும் பிற்பகலில் இரண்டு ஷிப்டுகளாக நடைபெறும். காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெறும்.

மதிப்பெண்கள்:

கேட் தேர்வு மூன்று மணி நேரம் நடைபெறும். 30 தாள்கள் இருக்கும் நிலையில், தேர்வர்கள் ஏதோனும் ஒன்று அல்லது இரண்டு தேர்வு தாள்களை தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கு நெகட்டிவ மதிப்பெண்கள் இருக்கிறது. ஒரு மதிப்பெண் கேள்விக்கு தவறான விடை அளித்தால் 1/3 மதிப்பெண்கள் கழித்து கொள்ளப்படும். 2 மதிப்பெண் கேள்விக்கு தவறான விடை அளித்தால் 2/3 மதிப்பெண்கள் கழித்து கொள்ளப்படும். கேட் மதிப்பெண்கள் முடிவு அறிவிக்கப்பட்ட தேதிக்குப் பிறகு மூன்று ஆண்டுகளுக்கு மதிப்பெண்கள் செல்லுபடியாகும். இந்த தேர்வு குறித்த கூடுதல் விவரங்கள் அறிய இந்த https://gate2025.iitr.ac.in/ லிக்கை க்ளிக் செய்யலாம்.

Also Read: மாதம் 1,000 ரூபாய்.. இனி அரசு உதவிபெறும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்!

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version