5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

JEE Exam Results: வெளியானது ஜேஇஇ தேர்வு முடிவுகள்.. ரிசல்ட் பார்ப்பது எப்படி?

நடப்பாண்டிற்கான ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த மே 26ஆம் தேதி ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 2.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த நிலையில், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் 48, 248 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாணவர்கள் 40,284 பேர், மாணவிகள் 7,964 பேர் என மொத்தம் 48,248 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

JEE Exam Results: வெளியானது ஜேஇஇ தேர்வு முடிவுகள்.. ரிசல்ட் பார்ப்பது எப்படி?
ஜேஇஇ தேர்வு முடிவுகள்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 09 Jun 2024 11:51 AM

வெளியானது ஜேஇஇ தேர்வு முடிவுகள்: இந்தியாவில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டு இரண்டு முறை தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதாவது, ஜேஇஇ முதன்மை மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ் என இரண்டு கட்டங்களாக தேர்வுகள் நடக்கிறது. இந்த நிலையில், நடப்பாண்டிற்கான ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த மே 26ஆம் தேதி ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 2.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த நிலையில், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் 48, 248 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாணவர்கள் 40,284 பேர், மாணவிகள் 7,964 பேர் என மொத்தம் 48,248 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு.. எப்போது தெரியுமா?

இந்தநிலையில், அகில இந்திய அளவில் ஐஐடி டெல்லி மண்டலத்தில் வேத் லஹோட்டி என்ற மாணவர் 355 மதிப்பெண்கள் பெற்று தரவரிசை பட்டியிலில் முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும், ஐஐடி மும்பை மண்டலத்தில் துவிஜா தர்மேஷ்மார் படேல் என்ற மாணவி 332 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவிகளில் இவர் தான் அகில இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார். பொதுப்பிரிவில் 30.34% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஓபிசி பிரிவில் 27.30 சதவீதமும், EWS பிரிவில் 27.30 சதவீதமும், எஸ்சி/எஸ்டி பிரிவில் 15.17 சதவித மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசல்ட் பார்ப்பது எப்படி?

  • தேர்வர்கள் https://jeemain.ntaonline.in/ என்ற இணையளத்தை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை காணலாம்.
  • அதில், விண்ணப்ப எண், பிறந்ததேதி, பாதுகாப்பு குறியீட்டு எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
  • அதைத் தொடர்ந்து சப்மிட் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து உங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Also Read: வேளாண்மை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன்12 வரை அவகாசம் நீட்டிப்பு..!