JNU பல்கலையில் பிஹெச்.டி படிக்க ஆசையா? உடனே விண்ணப்பிங்க!

JNU PhD Admission: டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜே.என்.யூ பல்கலையில் ஆராய்ச்சி படிப்புக்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்கலையின் அட்டவணையின்படி, பிஹெச்.டி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 2, 2024 ஆகும்.

JNU பல்கலையில் பிஹெச்.டி படிக்க ஆசையா? உடனே விண்ணப்பிங்க!

ஜே.என்.யூ பல்கலை பிஹெச்.டி படிப்பு

Published: 

28 Nov 2024 18:26 PM

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) 2024-25 கல்வியாண்டுக்கான பிஹெச்.டி படிப்புகளுக்கான விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் jnuee.jnu.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் பிஹெச்.டி திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பிஹெச்.டி படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 2, 2024 ஆகும். இதையடுத்து, விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 3 முதல் 4, 2024 வரை விண்ணப்பப் படிவங்களில் திருத்தங்களைச் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்

சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் நவம்பர் 23 முதல் டிசம்பர் 2, 2024 தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் டிச.3,4 ஆகிய தேதிகளில் முடிக்க வேண்டும்.
வைவா தேர்வு டிச.12, 2024 நடத்தப்படும். பிஹெச்.டி. படிப்பு சேர்க்கைக்கான இரண்டாம் தகுதிப் தேர்வு ஜனவரி 8, 2025 ஆம் தேதி நடத்தப்படும்.

இது தொடர்பான முழுமையான விவரங்கள் ஜே.என்.யூ பல்கலை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. வைவா அழைப்பிதழ் டிசம்பர் 12, 2024 க்குள் அனுப்பப்படும், மேலும் வைவா சோதனை பெரும்பாலும் டிசம்பர் 16 மற்றும் 21, 2024 க்கு இடையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் தகுதிப் பட்டியல் டிசம்பர் 30, 2024 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கல்லூரி பேராசிரியர் ஆக விருப்பமா? இந்த அறிவிப்பு உங்களுக்குதான்!

முக்கிய குறிப்பு

இந்தத் தேர்வுகள் நெட் (NET),  இளங்கலை சி.எஸ்.ஐ.ஆர் (UGC-CSIR), ஜே.ஆர்.எஃப் (JRF) மற்றும் கேட் (GATE) மூலம் சேர்க்கை நடத்தப்படும் என்பதை விண்ணப்பதாரர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ஜே.என்.யூ விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள பிஹெச்.டி திட்டங்களுக்கான இ-ப்ராஸ்பெக்டஸைப் பார்த்து, ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு முன் தகுதி அளவுகோல்களை உறுதி செய்துக் கொள்ள வேண்டும் எனவும் பல்கலை அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: டி.என்.பி.எஸ்.சி ரோடு இன்ஸ்பெக்டர் தேர்வு.. ரிசல்ட்-ஐ ஆன்லைனில் செக் பண்ணுங்க!

இணையத்தில் கவனம்பெறும் அதிதியின் நியூ ஆல்பம்
பெண்களுக்கு இதெல்லாம் வழங்க வேண்டும் - ஐஸ்வர்யா ராய்
கெட்ட கொழுப்பு அதிகமாக உள்ளதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க
மூளை மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க..