5 ஆண்டு சட்டப்படிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி? முக்கிய தேதிகள் இதோ!
Law Admission 2024: தமிழ்நாட்டில் ஐந்தாண்டு சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு குறித்த விவரங்களை பார்க்கலாம்.
சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பம் தொடங்கியது
தமிழகத்தில் ஐந்தாண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு நேற்று முதல் தொங்கியது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 15 அரசு, 9 தனியார் சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 5 ஆண்டு கால சட்டப்படிப்புகளில், 2043 இடங்கள் உள்ளன. இதேபோல், பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சீர்மிகு சட்டப் பள்ளியில் 5 ஆண்டுகால சட்டப்படிப்புகளுக்கு 624 இடங்கள் உள்ளன. இவற்கை நிரப்புவதற்கான பொது கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2024ஆம் கல்வியாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு நேற்று (மே 10) முதல் தொடங்கியது.
Also Read : 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பிப்பது எப்படி?
ஐந்தாண்டு சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி மே 31ஆம் தேதி ஆகும். எனவே, மாணவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். https://tndalu.ac.in/என்ற இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம். 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவர்களும், 3 வருடம் டிப்ளோமோ, 3 வருடன் பாலிடெக்னிங் முடித்தவர்கள் ஐந்தாண்டு சட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கலந்தாய்வும் இணைதளம் வழியாகவே நடைபெற உள்ளது. 12ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவினருக்கு ரூ.1000 விண்ணப்ப கட்டணமாக வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மாணவர்கள் https://tndalu.ac.in/ என்ற இணையதள வாயிலாக அறிந்து கொள்ளலாம். மேலும், www.tndalu.ac.in/pdf/2024/May/Admissions%20Notification%202024-2025.pdf என்ற லிங்கை கிளிக் செய்தும் தெரிந்து கொள்ளலாம்.
Also Read : 10ம் வகுப்பு பொதுத்தேர்வு.. மறுகூட்டல், மறுதேர்வு விவரங்கள்!